ரஜினியை வைத்து படம் எடுக்கும் Ex மருமகன் தனுஷ்? சுந்தர்.சிக்கு அப்புறம் இவரா?

Dhanush To Direct Thalaivar 173 : தலைவர் 173 படத்திலிருந்து சுந்தர்.சி விலகியதை தொடர்ந்து தனுஷிடம் ரஜினி படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.  

Written by - Yuvashree | Last Updated : Nov 17, 2025, 11:09 AM IST
  • தலைவர் 173 திரைப்படம்..
  • ரஜினிகாந்தை இயக்கும் தனுஷ்?
  • இதோ முழு தகவல்..
ரஜினியை வைத்து படம் எடுக்கும் Ex மருமகன் தனுஷ்? சுந்தர்.சிக்கு அப்புறம் இவரா?

Dhanush To Direct Thalaivar 173 : ரஜினிகாந்தின் தலைவர் 173 திரைப்படத்தின் அறிவிப்பு வெளியான போது, சுந்தர்.சி அதனை இயக்குவார் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தான் அப்படத்தில் இருந்து விலகிக்கொள்வதாக சுந்தர்.சி அறிவித்து விட்டார். இதனால், அடுத்ததாக இப்படத்தை இயக்கப்போவது யார் என்கிற குழப்பம் நிலவி வருகிறது.

Add Zee News as a Preferred Source

தலைவர் 173:

ஜெயிலர் 2 படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், அடுத்ததாக யாருடைய படத்தில் இணையப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. இந்த சமயத்தில்தான், தலைவர் 173 படத்தின் அறிவிப்பு வெளியானது. இதனை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, சுந்தர்.சி இப்படத்தின் இயக்குநர் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான ஒரு வாரத்திற்குள்ளாகவே, கனத்த இதயத்துடன் இப்படத்தில் இருந்து தான் விலகிக்கொள்வதாக சுந்தர்.சி அறிவித்தார்.

சுந்தர்.சி, இப்படத்திலிருந்து விலகியதற்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. இது குறித்து பேசிய கமல், என் பட ஹீரோவிற்கு பிடிக்கும் வரை, கதையை கேட்டுக்கொண்டே இருப்போம் என்று கூறினார். “அப்போ ரஜினிக்கு சுந்தர்.சி கூறிய கதை பிடிக்கவில்லையா?” போன்ற கேள்விகளுக்கு இது வழிவகுத்தது. 

ரஜினி படத்தை இயக்கும் தனுஷ்?

நடிகர் தனுஷ், இப்போது சினிமா நட்சத்திரம் என்பதை தாண்டி, இயக்குநராகவும் இருக்கிறார். ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அவர், சமீபத்தில் இட்லி கடை என்கிற படத்தையும் இயக்கி, அதனை வெற்றிபெற செய்தார். இப்போது, தலைவர் 173 படத்தை இயக்க தனுஷிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இருப்பினும், இது எந்த அளவிற்கு நம்பகமான தகவல் என்பது தெரியவில்லை.

Ex மாமனாரை இயக்குவாரா?

தனுஷ், நடிகராவதற்கு முன்னரே, மிகப்பெரிய ரஜினி ரசிகர் என்பது அனைவருக்கும் தெரியும். இவரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் 19 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு, தாங்கள் விவாகரத்து செய்து கொள்வதாக அறிவித்தனர். இப்போது இருவரும் தங்களின் இரு பிள்ளைகளையும் கோ-பேரண்டிங் முறையில் வளர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், தனது எக்ஸ் மாமனார் ஆன ரஜினியை, தனுஷ் இயக்குவாரா எனும் கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும், தனுஷ், கமல், ரஜினியின் காம்போ உறுதியானால், இதற்கான எதிர்பார்ப்பு தாறுமாறாக இருக்கும் என்பது மட்டும் உறுதி.

தனுஷின் ஆசை..

சில மாதங்களுக்கு முன்னதாக, இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தை, அருண் மாத்தேஸ்வரன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. இதன் போஸ்டர் அறிமுக விழாவில் பேசிய தனுஷ், தனக்கு இருவருடைய பயோகிராபியில் நடிக்க வேண்டும் என்று பெரிய ஆசை இருந்ததாக கூறினார். அந்த இரண்டு பேரில் ஒருவர் இளையராஜா, இன்னொருவர் ரஜினிகாந்த் என்று கூறினார். எனவே, அவருக்கும் திரையுலக படைப்பு ரீதியாக ரஜினியை வைத்து ஏதாவது படத்தில் வேலை பார்க்க வேண்டும் என்கிற ஆசை பல நாட்களாக இருக்கிறது என்பதை ரசிகர்கள் புரிந்து கொண்டனர்.

மேலும் படிக்க | சுந்தர். சி - ரஜினியை இழிவாக கலாயத்த நெட்டிசன்கள்! குஷ்பு கொடுத்த மாஸ் ரிப்ளை..

மேலும் படிக்க | தலைவர் 173 : சுந்தர்.சி விலகல்..இதற்கு பின்னால் இப்படியொரு காரணமா? என்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News