தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ..100 கோடி சம்பளம் வாங்குபவர்! யார் தெரியுமா?

Dhanush To Cast Popular Actor As Hero In His Film: பிரபல நடிகர் தனுஷ் இயக்குநராகவும் களமிறங்கியிருக்கிறார். இவர், தனது அடுத்த படத்தில் யாரை ஹீரோவாக்க இருக்கிறார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.  

Written by - Yuvashree | Last Updated : Mar 31, 2025, 03:26 PM IST
  • தனுஷ் இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகர்..
  • ரூ.100 கோடி சம்பளம் வாங்குபவர்..
  • யார் தெரியுமா?
தனுஷ் இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ..100 கோடி சம்பளம் வாங்குபவர்! யார் தெரியுமா?

Dhanush To Cast Popular Actor As Hero In His Film: தமிழ் திரையுலகில் நடிகர்கள் இயக்குநர்களாவதும், இயக்குநர்கள் நடிகர்களாக மாறுவதும் தொன்றுதொட்டு நடந்து வருகிறது. அப்படி, நடிகர் தனுஷும் இப்போது ஒரு பக்கம் நடிப்பு-இன்னொரு பக்கம் இயக்கம் என்று பிசியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Add Zee News as a Preferred Source

இயக்குநராக மாறிய தனுஷ்:

நடிகர் தனுஷ், 2017-ல் வெளியான ப.பாண்டி திரைப்படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார். இந்த படம், மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இயக்கத்தை விடக்கூடாது என்று முடிவு செய்த இவர், கடந்த ஆண்டு வெளியான ராயன் திரைப்படத்தை மீண்டும் இயக்கினார். 

ராயன் திரைப்படம், சில தனுஷ் வெறியர்களுக்கு பிடித்திருந்தாலும் ஒரு சிலர் இதற்கு நெகடிவான விமர்சனங்களையே கொடுத்தனர். இருப்பினும் இப்படம் ரூ.100 கோடி வரை வசூலித்தது. இதையடுத்து இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படம், இளசுகளுக்கு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விமர்சன ரீதியாகவும்-வசூல் ரீதியாகவும் இப்படம் தோல்வியை தழுவியதாக கூறப்படுகிறது.

தனுஷின் அடுத்த பட ஹீரோ:

நடிகர் தனுஷ், தனது அடுத்த திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்கப்போவது யாரைத்தெரியுமா?  தெலுங்கு நடிகர் ராம் சரணைத்தான். RRR திரைப்படம் மூலம் உலகளவில் அங்கீகாரம் பெற்ற இவர், ஷங்கரின் கேம் சேஞ்சர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் தோல்வியடைந்ததை அடுத்து, தற்போது புச்சி பாபு இயக்கி வரும் பெடி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்கிறார். 

தனுஷ்

ராம் சரணின் மார்கெட் RRR திரைப்படத்திற்கு முன்பு வேறாக இருந்தது. இந்த படம் ரூ.1000 கோடிக்கும் மேல் கலெக்ட் செய்ததை அடுத்து, வேறாக மாறிவிட்டது. இப்போது இவர் ஒரு படத்தில் கமிட் ஆனால், ரூ.100 கோடிக்கு குறைவாக சம்பளம் வாங்குவதில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது இவர் தனுஷிடம் கதை கேட்டதாகவும், இப்போது கமிட்டாகியிருக்கும் படத்தை முடித்துவிட்டு இந்த படத்தை பற்றி யோசிப்பார் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷின் அடுத்தடுத்த படங்கள்..

நடிகர் தனுஷ், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்திற்கு பிறகு இயக்கியிருக்கும் படம், இட்லி கடை. இந்த படத்தின் பணிகள் முடிவடைந்த நிலையில், வரும் ஏப்ரல் 10ஆம் தேதி படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், குட் பேட் அக்லி திரைப்படம் அடுத்த மாதம் வெளியாவதால், இதன் ரிலீஸ் தள்ளிப்போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் தனுஷுடன் நித்யா மேனன், அருண் விஜய், ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

தனுஷ் தமிழ் பட நடிகர் மட்டும் கிடையாது. இந்தி மற்றும் ஆங்கில படங்களிலும் நடித்திருக்கிறார். அந்த வகையில், அவர் இந்தியில் ‘தேரே இஷ்க் மெயின்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில், அவருக்கு ஜோடியாக கிருத்தி சனோன் நடித்து வருகிறார். இன்னும் 2 வருடங்களுக்கு யாருக்கும் கால்ஷீட் கொடுக்க முடியாத அளவிற்கு கையில் பல படங்களுடன் வலம் வருகிறார் தனுஷ். இதற்கிடையில், தன் படத்தையும் இவர் இயக்க இருப்பது ஆச்சரியத்திற்குறிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | மேலிடத்தில் இருந்து உத்தரவு? இட்லி கடை படம் வெளியாகுமா? மீண்டும் சிக்கலில் தனுஷ்!

மேலும் படிக்க | தாயாக நடித்தவரை காதலித்த நடிகர்..2 முறை திருமணம்..இப்போ சிங்கிளா இருக்காரு-யார் அவர்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News