Dharmendra Family Claims Death News Is Falls : இந்திய திரையுலகின் முக்கிய நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் தர்மேந்திரா. லெஜண்டரி நடிகரான இவர், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவர் உயிருடன் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்து இருக்கின்றனர்.
உயிரிழந்ததாக பரவிய செய்தி!
நடிகர் தர்மேந்திரா, 89 வயதில் உயிரிழந்ததாக நம்பகமிக்க பல செய்தி சேனல்கள் செய்திகளை பரப்பின. இதை நம்பி, பிரபலங்கள் பலரும் இவருக்கு இரங்கல் தெரிவித்து பதிவிட ஆரம்பித்து விட்டனர். இந்த நிலையில், தர்மேந்திரா இறந்ததாக பரவும் செய்தி பொய் என அவரது மனைவி ஹேமமாலினி மற்றும் மகள் ஈஷா டியோல் ஆகியோர் பதிவிட்டுள்ளனர்.
What is happening is unforgivable! How can responsible channels spread false news about a person who is responding to treatment and is recovering? This is being extremely disrespectful and irresponsible. Please give due respect to the family and its need for privacy.
— Hema Malini (@dreamgirlhema) November 11, 2025
“இப்போது நடப்பது மன்னிக்க முடியாத செயலாகும். பொருப்புடன் செயல்படவேண்டிய செய்தி சேனல்கள் எப்படி இவ்வளவு பொய்யான செய்தியை வெளியிடலாம்? இது மிகுந்த பொறுப்பற்ற மற்றும் மரியாதையற்ற செயலாக இருக்கிறது. சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு தகுந்த மரியாதையை தயவு செய்து கொடுங்கள்” என்று பதிவிட்டிருக்கிறார்.
யார் இந்த தர்மேந்திரா?
பஞ்சாப்பை சேர்ந்த தர்மேந்திரா, டீன் ஏஜ் பருவத்தில் இருக்கும் போதே திருமணம் செய்து திரையுலகிற்குள் நுழைந்தவர். 19 வயதில் பிரகாஷ் கவுர் என்பவரை திருமணம் செய்த இவர், திரையுலகிற்குள் நுழைவதற்காக பாம்பேவிற்கு வந்தார். இவருக்கு பிரகாஷ் கவுருடன் பாபி டியோ-சன்னி டியோல் என இரு மகன்கள் உள்ளனர். இருவருமே இப்போது பிரபல நடிகர்களாக வலம் வருகின்றனர். தன் முதல் மனைவியை பிரிந்த தர்மேந்திரா, பின்னர் நடிகை ஹேமமாலியை மணந்தார். இவர்கள் சேர்ந்து ஷோலே, மா, சாம்ராத், ட்ரீம் கேர்ள் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கின்றனர். இந்தி திரையுலகில், தர்மேந்திரா 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதில் பெரும்பாலானவை ஹிட் படங்கள் ஆகும்.
2015 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் தர்மேந்திராவிற்கு உடல்நல பிரச்சனைகள் ஆரம்பித்தன. அவருக்கு முதுகுத்தண்டு மற்றும் கண்களில் பிரச்சனை இருந்தது. கடந்த அக்டோபர் 31ஆம் தேதியன்று மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக இவரது மனைவி ஹேமமாலினி தெரிவித்திருந்தார். நவம்பர் 11ஆம் தேதியான இன்று காலை முதல், தர்மேந்திரா உயிரிழந்ததாக தகவல் பரவியதை அடுத்து, இதனை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.
மேலும் படிக்க | உயிரிழக்கும் முன்..நடிகர் அபிநய் கடைசியாக கேட்ட விஷயம்! அதை வாங்கிய மறுநாளே மரணம்..
மேலும் படிக்க | மகா சகாப்தம் முடிவு: நடிகர் தர்மேந்திரா காலமானார் - ஹிந்தி திரையுலகம் சோகம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









