Pradeep Ranganathan Next Movie 3 Heroines :சமீபத்தில் வெளியான டிராகன் திரைப்படம், பட்டித்தொட்டியெங்கும் ஹிட் அடித்து, பட்டையக்கிளப்பி வருகிறது. இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்த பிரதீப் ரங்கநாதன், ஏற்கனவே கோமாளி படத்தை இயக்கி, இயக்குநராக அறிமுகமானார். இதையடுத்து தானே இயக்கி ஹீரோவாகவும் ‘லவ் டுடே’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில், அவரது அடுத்த திரைப்படம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
டிராகன் திரைப்படம்:
‘ஓ மை கடவுளே’ படத்தை இயக்கிய அஷ்வத் மாரிமுத்து, டிராகன் படத்தை இயக்கியிருந்தார். பிரதீப் ரங்கநாதன், அஷ்வத்தின் கல்லூரி ஜூனியர். அவர்கள், அப்போதே ஒன்றாக இணைந்து படத்தில் பணியாற்ற வேண்டும் என்று பேசிக்கொண்டதால், இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக நடிக்க வைத்தார். வாழ்வில், தான் நன்றாக இருந்தால் மட்டும் போதும் என்று நினைக்கும் ஒருவனுக்கு, இரண்டாவதாக ஒரு சான்ஸ் கிடைத்தால் அவன் என்ன செய்வான் என்பதை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் கதைதான் இது.
டிராகன் படத்தில் பிரதீப்பிற்கு ஜோடியாக கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம், கல்லூரி செல்லும் இளசுகள் மட்டும் கொண்டாடும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அனைத்து தரப்பு ரசிகர்களையும் திரையரங்கின் பக்கம் ஈர்க்கும் படமாக இருந்தது.
அடுத்த படம்..
பிரதீப், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் கமிட் ஆன படம், லவ் இன்சூரன் கம்பெனி (LIK). இந்த படத்தை, விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். இதில், பிரதீப்பிற்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடிக்கிறார். இந்த படத்தை அடுத்து, அவர் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கிறார். இதில், அவருக்கு ஜோடியாக 3 கதாநயாகிகள் நடிக்கின்றனராம்.
யார் அந்த 3 பேர்?
பிரதீப்பின் அடுத்த படத்தை பிரபல இயக்குநர் சுதா கொங்கராவின் உதவி இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க இருபதாகவும், அவருக்கு ஜோடியாக மூன்று மொழிகளில் இருந்து ஒவ்வொரு நடிகைகளும் கதாநாயகிகளாக நடிக்கின்றனராம். மலையாள நடிகையான மமிதா பைஜூ, தமிழில் பல பேருக்கு க்ரஷ்ஷாக விளங்குகிறார். இவர் மட்டும்தான் இந்த படத்தின் ஹீரோயினாக நடிக்க இருந்ததாக கூறப்பட்டது. ஆனால், தற்பாேது அதில் இன்னும் 2 நாயகிகள் இணைந்திருக்கின்றனர்.

அதில் ஒருவர் அனு இமானுவேல். இவரை துப்பறிவாளன் மற்றும் நம்ம வீட்டுப்பிள்ளை படம் மூலம் பார்த்திருப்போம். இவரும் மலையாள நாயகிதான். இப்பாேது ஐஸ்வர்யா ஷர்மா என்ற இந்தி நாயகியும் இதில் இணைந்திருக்கிறார். இந்த விஷயத்தை கேள்வி பட்டவர்கள், “அடிச்சிதுரா பிரதீப்பிற்கு ஜாக்பாட்..” என்று கூறி வருகின்றனர்.
LIK படத்தின் கதை:
லவ் இன்ஷூரன்ஸ் கார்ப்ரேஷன் படத்தின் கதை என்ன என்பது குறித்து, சமீபத்தில் ஒரு தகவல் வைரலானது. அதாவது, டைம் டிராவல் செய்து கடந்த காலத்திற்கு செல்லும் இளைஞனும், அவனது தந்தையும் ஒரே பெண்ணை காதலிக்கின்றனர், அந்த பெண் விபச்சாரம் செய்து வருகிறார். இதுதான் அந்த படத்தின் கதை. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை. எது எப்படியிருப்பினும், பிரதீப் இந்த படத்திற்கு பிறகு திரையுலகில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | டிராகன் படத்தில் பிரதீப்பிற்கு சம்பளம் எவ்வளவு? அடேங்கப்பா..இவ்வளவா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









