“நான் வேதனையில் இருக்கிறேன்...” மொழி பிரச்சனையில் கமல் பரபரப்பு அறிக்கை!

Kamal Haasan Letter Regarding Kannada Tamil Controversy : நடிகர் கமல்ஹாசன், சில நாட்களுக்கு முன் “தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது” என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

Written by - Yuvashree | Last Updated : Jun 3, 2025, 01:28 PM IST
  • வலுபெற்ற மொழி பிரச்சனை
  • கமல் எழுதிய கடிதம்
  • மிகுந்த வேதனையில் இருப்பதாக அறிவிப்பு
“நான் வேதனையில் இருக்கிறேன்...” மொழி பிரச்சனையில் கமல் பரபரப்பு அறிக்கை!

Kamal Haasan Letter Regarding Kannada Tamil Controversy : இந்திய திரையுலகின் முக்கிய நடிகராக விளங்கும் கமல்ஹாசன், சமீபத்தில் “தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது” என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, கர்நாடக ஆளுநர் நரசிம்மலுவிற்கு அவர் கடிதம் எழுதியிருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

 சர்ச்சையை ஏற்படுத்திய கமலின் பேச்சு:

சில நாட்களுக்கு முன்பு, தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில், கன்னட நடிகர் சிவராஜ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவரை குறிப்பிட்டு பேசிய கமல் “தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது” என்று கூறி விட்டார். இவரது இந்த பேச்சு, கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா, “கமல் உடனடியாக மன்னிப்பு கேட்கவில்லை என்றால், தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை விதிப்போம்” என்று கூறினார்.

இதுவரை தனது திரை வாழ்க்கையில் பலவித சர்ச்சைகளை சந்தித்திருக்கும் கமல்ஹாசனோ, “அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது. என் கூற்று தவறாக இருந்திருந்தால் நான் மன்னிப்பு கேட்பேன். என் கூற்றில் தவறில்லை” என்று கூறினார். இது, ஏற்கனவே மொழி பிரச்சனையில் பொங்கிக்கொண்டு இருந்தவர்களை இன்னும் கோபப்படுத்தியது. இதனால், கமல் 1ஆம் தேதிக்குள் கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கெடு வைத்தனர்.

உயர் நீதிமன்றம் கேள்வி:

மொழி பிரச்சனை வலுக்கவே, தக் லைஃப் படத்தை தடையின்றி வெளியிட பாதுகாப்பு வழங்குமாறு கமல்ஹாசன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு விசாரணை இன்று நடந்தது.

அப்போது இதில் தீர்ப்பு கொடுத்த நீதிபதி கமலுக்கு சரமாரி கேள்விகளை விடுத்தார். “எந்த மொழியும் வேறு ஒரு மொழியில் இருந்து பிறக்கவில்லை. கமல் பேசியதை உறுதிப்படுத்த அவரிடம் என்ன சான்றுகள் இருக்கிறது? இதனால் என்ன நடந்தது? ஒற்றுமையின்மை. இதற்காக கர்நாடகாவை சேர்ந்தவர்கள் கேட்டது என்ன? மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது மட்டும்தான்”

மேலும், இந்த சூழலை ஏற்படுத்தியது கமல்தான் என்று குறிப்பிட்ட நீதிபதி, இதற்காக அவர் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறியதையும் மேற்கோள் காட்டினார். பின்பு, கர்நாடக மக்களின் உணர்ச்சிகளை லேசாக அவர் எடுத்துக்கொண்டதாக கூறிய அவர் “நீங்கள் என்ன வரலாற்று அறிஞரா? மொழியியலாளரா?” என்று கேட்டார்.

கமல் கடிதம்:

நடிகர் கமல்ஹாசன் எழுதியிருக்கும் கடிதத்தில், “மொழி தொடர்பான எனது பேச்சால் கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள நிலையால் நான் வேதனையில் உள்ளேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார். “தமிழும் கன்னடமும் ஒரே குடும்பம் என்பதை வெளிப்படுத்தவே பேசினேன்; கன்னட மொழியை  நான் சிறுமைப்படுத்த வேண்டும்  என்று பேசவில்லை” என்றும் கூறியிருக்கிறார். “கன்னட மொழி மீது எனது காதலை வெளிப்படுத்திப் பேசியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது; பதற்றத்தை உருவாக்க நான் பேசவில்லை” என்றும் தெரிவித்திருக்கிறார்.

மேலும், கன்னடர்கள் தங்கள் தாய்மொழி மீது வைத்திருக்கும் அன்பு மீது தனக்கு மிகுந்த மரியாதை இருப்பதாக கூறியிருக்கிறார். ஹ்டொடர்ந்து, ஒரு மொழியின் மீது மற்றொரு மொழி ஆதிக்கம் செலுத்துவதை தான் எப்போதும் எதிர்த்து வருவதாகவும், நடிகர் சிவராஜ்குமார் அவமானங்களை சந்திக்க நேர்ந்தது வருத்தமளிப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்கிற நோக்கத்தில் தான் பேசி விட்டதாக குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் படிக்க | தக் லைஃப் படக்குழுவினரால் கடுப்பான மணிரத்னம்? காரணம் இதுதான்..

மேலும் படிக்க | Thug Life படத்திற்கு தடை? கர்நாடகா பிலிம் சேம்பர் அறிவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News