கமல் பெயரில் மோசடி? ராஜ்கமல் பிலிம்ஸ் எச்சரிக்கை!

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை அனுமதியின்றி பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Written by - R Balaji | Last Updated : Mar 29, 2025, 05:44 PM IST
  • ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது
  • இது தொடர்பாக அந்நிறுவனம் எச்சரிக்கை விடுத்து உள்ளது
கமல் பெயரில் மோசடி? ராஜ்கமல் பிலிம்ஸ் எச்சரிக்கை!

திரை பிரபலங்கள் பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுத்து தற்போது அதிகமாகி விட்டது. அதாவது, தயாரிப்பு நிறுவனங்கள் தான் தயாரிக்கும் படங்களுக்கு நடிக்க ஆடிசன்கள் மற்றும் பல்வேறு விதத்தில் ஆட்களை தேர்வு செய்வது வழக்கம். சில இயக்குனர்கள் சமூக வலைதளங்களில் ஆடிசன் நடப்பதாக பதிவிட்டு அதன் மூலம் நடிகர், நடிகைகளை தேர்வு செய்கின்றனர். அதில் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சலையும் குறிப்பிடுவர். இச்சூழலில், பட வாய்ப்புக்காக அலைபவர்களை குறிவைத்து அவர்களிடம் சில மோசடி செய்து வருகின்றனர். 

Add Zee News as a Preferred Source

இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷன்ல்  தயாரிப்பு நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி சிலர் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் இது குறித்து அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

மேலும் படிங்க: நடிகை அபிநயாவின் வருங்கால கணவர் இவர்தான்! முதன்முறையாக வெளியான போட்டோ..

அதில், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எந்த ஒரு காஸ்டிங் ஏஜென்டுகளையும் நாங்கள் நியமிக்கவில்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம். நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் செய்திகள் எவ்வகையில் உங்களை வந்தடைந்தாலும் அதை நம்பவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் பெயரை அனுமதியின்றி பயன்படுத்தி மோசடிகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதன் மூலம் எச்சரிக்கிறோம் என தெரிவித்துள்ளனர். 

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிப்பில், சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் வெளியானது. இப்படம் ரூ. 300 கோடிக்கு மேல் வசூல் ஆனது. இதனைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும், தக்லைப் படத்தை தயாரித்து வருகிறது. மேலும், நடிகர் சிம்புவின் 50வது படத்தையும் இந்நிறுவனம் தயாரிக்க இருந்தது. ஆனால் சில காரணங்களால் அதிலிருந்து விலகியது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிங்க: லீக் வீடியோவால் பிரபலமான ஸ்ருதி நாராயணன்! இவர் நடிக்க வந்தது எப்படி? முழு விவரம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News