கமலுக்கு ரஜினி, விஜய், அஜித்தை விட ரசிகர்கள் குறைவு! ரசிகர்கள் குமுறல்-என்னாச்சு?

Indian 2 Movie Slow Pre Booking : இந்தியன் 2 திரைப்படம் விரைவில் வெளியாக இருப்பதை ஒட்டி, தற்போது இந்த படத்தின் டிக்கெட் புக்கிங் குறித்த சர்ச்சை வெடித்திருக்கிறது.   

Written by - Yuvashree | Last Updated : Jul 10, 2024, 05:39 PM IST
  • மெதுவாக நடந்த இந்தியன் 2 ப்ரீ புக்கிங்
  • ரஜினி, விஜய், அஜித்தை விட கமலுக்கு ஃபேன்ஸ் கம்மியா?
  • குமுறும் ரசிகர்கள்
கமலுக்கு ரஜினி, விஜய், அஜித்தை விட ரசிகர்கள் குறைவு! ரசிகர்கள் குமுறல்-என்னாச்சு? title=

Indian 2 Movie Slow Pre Booking : கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தியன் 2 திரைப்படம் இன்னும் சில நாட்களில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், கமல் ரசிகர்கள் சிலர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் எக்ஸ் பதிவால் சர்ச்சை கிளம்பியிருக்கிறது.

இந்தியன் 2 திரைப்படம்:

ஷங்கர் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு உருவான படம், இந்தியன். இந்த படத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். சேனாபதி-சந்துரு என தந்தை-மகன் கேரக்டரில் வந்த இவர் இதில் இறுதியில் லஞ்சத்தில் ஊறிப்போன தனது மகனை கொலை செய்வது போன்ற காட்சியும் இடம் பெற்றிருக்கும். இதையடுத்து, கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் கழித்து இந்தியன் தாத்தா மீண்டும் கம்-பேக் கொடுக்க இருக்கிறார். 

இந்தியன் 2 படத்தின் வேலைகள் ஆரம்பிக்கும் போதே கமலுக்கும் ஷங்கருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த வேலை அப்படியே நின்று போனதாக கூறப்பட்டது. இவர்கள் பேசி ஓரளவிற்கு இனக்கமாக, பின்பு படத்தை தயாரிக்கும் நிறுவனத்தில் நிதி பிரச்சனை காரணமாக சில மாதங்கள் படப்பிடிப்பு இழுத்தடித்தது. இதையடுத்து, படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் உதவி இயக்குநர் உள்பட 3 பேர் பலியானதால் மீண்டும் படம் இயக்குவதில் தாமதம் ஏற்பட்டது. எப்படியோ ஒரு வழியாக இந்த படம் முடிவடைந்து ரிலீஸ் தேதியிலும் தாமதம் ஏற்பட்டு, இப்போது ரிலீஸிற்கு தயாராக இருக்கிறது. வரும் 12ஆம் தேதி உலகம் முழுவதும் இந்தியன் 2 வெளியாக இருக்கிறது. 

டிக்கெட் புக்கிங்..

வழக்கமாக எந்த படங்கள் வெளியாவதற்கு முன்னாலும், அப்படத்தின் முதல் நாள்-முதல் காட்சிக்கு ப்ரீ-புக்கிங் ஆரம்பித்து விடும். அப்படி, இந்தியன் 2 படத்திற்கும் ஆரம்பித்தது. ஆனால், எதிர்பார்த்தது போல, இப்படத்திற்கு ப்ரீ-புக்கிங் சரியாக செல்லவில்லை என்றும், பாதி தியேட்டர்களில் 6 மணி ஷோவிற்கு கூட டிக்கெட் முழுமையாக புக்கிங் செய்யப்படவில்லை என்று ரசிகர்கள் சிலர் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவினை வெளியிட்டிருக்கிறார். 

மேலும் படிக்க | இந்தியன் 2 படத்தின் முதல் விமர்சனம் இதோ.. படம் எப்படி இருக்கு?

Indian 2

ரஜினி,விஜய், அஜித்தை கமலுக்கு விட ரசிகர்கள் குறைவா?

பொதுவாகவே, தமிழ் திரையுலகில் கமலை விட ரஜினிக்கு ரசிகர்கள் அதிகம் இருக்கின்றனர் என்று கூறப்படுகிறது. காரணம், ரஜினியின் படங்களும் அவர் வெளி இடத்தில் பேசும் டைலாக்குகளும் மக்களுக்கு எளிதாக புரியும் வகையில் இருக்கும். ஆனால், கமல்ஹாசனின் படங்களோ, அவர் பேசுவதாே யாருக்கும் புரியாது என கூறப்படுகிறது. இதனாலேயே, அவருக்கு வெகு சில பின்தொடர்பாளர்கள்தான் இருப்பதாக பேசப்படுகிறது. அது மட்டுமன்றி, பிற முன்னணி நடிகர்களான விஜய், அஜித்திற்கும் ரசிகர்கள் அதிகமானாேர் இருக்கின்றனர். ஆனால், கமல்ஹாசனுக்கு அவ்வளவு ரசிகர்கள் இல்லை என சில ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டிருக்கின்றனர். 

ரஜினி, விஜய்,அஜித் படங்கள் எல்லாம் ஒபன் செய்தவுடன் புக் ஆகி விடும் எனவும் ஆனால் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திற்கு மிகவும் குறைவாகவே புக்கிங் ஆகியிருப்பதகவும் சில ரசிகர்கள் கூறி வருகின்றனர். புக்கிங் ஓபன் ஆனவுடன் பிற நடிகர்களின் படங்களை பார்ப்பதற்கு ரசிகர்கள் காட்டும் வேகம், கமல் படத்திற்கு இல்லை என்பதே இவர்கள் கூற வரும் கருத்தாக இருக்கிறது. கமல்ஹாசன், திமுக கட்சிக்கு ஆதரவு தெரிவித்ததை அடுத்து இது போன்ற பல்வேறு விமர்சனங்களுக்கு அவர் ஆளாக்கப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | இந்தியன் 2 படத்தில் கமலுக்கு கேமியோ ரோலா? ஷங்கர் பதில்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News