Kamal Haasan Talks About Thalaivar 173 : கமல் தயாரிக்கும் படத்தில், ரஜினிகாந்த் நடிப்பதாக சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இப்படத்தை சுந்தர்.சி இயக்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இதிலிருந்து தான் விலகுவதாக அவரே அறிவித்தார். இதனால், இப்படத்தை அடுத்ததாக இயக்கப்போவது யார் என்கிற குழப்பம் நிலவி வருகிறது. சுந்தர்.சி விலகலுக்கு பின்பு கமல் முதன்முறையாக செய்தியாளர்களை சந்தித்து பேசியிருக்கிறார்.
தலைவர் 173-சுந்தர்.சி விலகல்:
ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு, ரஜினி சீக்கிரமாக ஒரு படத்தை முடித்துவிட்டு, கமலுடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிப்பதாக சொல்லப்பட்டது. ரஜினி சீக்கிரம் நடிக்க நினைக்கும் படத்தை சுந்தர்.சி இயக்குவதாக ஆரம்பத்தில் சொல்லப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் வகையில் அதிகாரப்பூர்வ தகவலும் சமீபத்தில் வெளியானது. அருணாச்சலம் படத்தில் சேர்ந்த இந்த கூட்டணியை, மீண்டும் திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்தனர்.
ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத ஒரு நேரத்தில், தலைவர் 173 படத்திலிருந்து தான் விலகி கொள்வதாக சுந்தர்.சி ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், சில தவிர்க்க முடியாத காரணத்தால், கணத்த இதயத்துடன் இந்த முடிவை தான் எடுப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். அந்த காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்தனர். இருப்பினும், இப்படம் குறித்து படக்குழு யாரும் எதுவும் பேசவில்லை.
#KamalHaasan opens about SundarC's exit from #Thalaivar173:
"SundarC already sent his statement, no there is no possible collaboration. I'm a producer, so I have make film which satisfies my star (Superstar #Rajinikanth) . We will keep hearing scripts until it satisfies him. We… pic.twitter.com/wlnHDwMYU0
— AmuthaBharathi (@CinemaWithAB) November 15, 2025
கமல் பேட்டி:
சுந்தர்.சி 173 படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தபின் நடிகர் கமல்ஹாசன், தற்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியிருக்கிறார். அதில், சுந்தர்.சி விலகியதற்கான காரணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல், “சுந்தர்.சி அறிக்கையில் வெளியிட்டிருந்தது அவருடைய கருத்து. என்னுடைய கருத்து, நான் முதலீட்டாளன். எனது நட்சத்திரத்திற்கு (ரஜினிகாந்த்) பிடித்த கதையை எடுப்பதுதான் எனக்கு ஆரோக்கியமானது. அதைதான் செய்வேன். அவருக்கு பிடிக்கும் வரை, கதையை கேட்டுக்கொண்டே இருப்போம். புதிய இயக்குநருடன் சேர வாய்ப்பிருக்கிறது. கதை நன்றாக இருக்க வேண்டும் அவ்வளவுதான்” என்றார்.
பின்னர், “ரஜினியும் நீங்களும் ஒன்றாக நடிக்கும் படம் எப்போது..?” என்கிற கேள்விக்கு அதற்கு இன்னொரு கதையை தேடி வருவதாக கூறியனார். “அது அரசியல் படமாக இருக்குமா?” என்கிற கேள்விக்கு, “எதிர்பாராததை எதிர்பாருங்கள்” என்று கூறி சந்திப்பை முடித்துக்கொண்டார்.
ரஜினிக்கு உடன்பாடில்லாத கதை?
தலைவர் 173 படத்திலிருந்து சுந்தர்.சி விலகியதற்கான காரணம் குறித்து பேசி வந்த பலர், ரஜினிக்கு சுந்தர்.சி சொன்ன கதையில் உடன்பாடில்லை என்று கூறி வந்தனர். பட அறிவிப்பிற்கு முன்பு, சுந்தர்.சி ஒரு வரிக்கதையை ரஜினியிடம் கூறியதாகவும் அது பிடித்துப்போய்தான் ரஜினி ஓகே சொன்னதாகவும் கூறப்படுகிறது. அறிவிப்பிற்கு பின் கதையை சுந்தர்.சி ரஜினியிடம் விவரித்ததாகவும், அந்த கதை நகைச்சுவை, லைட் ஹார்டட் படம் என்றும் தகவல் வெளியானது. இது தனக்கு செட் ஆகாது என்று சொன்ன ரஜினி, கதையை மாஸ் எலிமெண்ட்ஸ் வைத்து மாற்றுமாறு கூறியதாகவும், அதற்கு சுந்தர்.சி உடன்பட்டு வராததால் இதிலிருந்து விலகிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இது உண்மைதான் என்பதற்கான எந்த அதிகாரப்பூர்வ தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | தலைவர் 173 : சுந்தர்.சி விலகல்..இதற்கு பின்னால் இப்படியொரு காரணமா? என்ன தெரியுமா?
மேலும் படிக்க | தலைவர் 173ல் இருந்து சுந்தர்.சி விலகல்! அடுத்த இயக்குநர் யாரா இருக்கும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









