சினிமாவில் காதல்.. நிஜத்தில் சகோதரி மாதிரி! பிரபல நடிகை குறித்து மனம் திறந்த கமல்..

Kamal Haasan Sridevi Relationship : நடிகர் கமலும் ஸ்ரீதேவியும் தங்கள் சினிமாவின் உச்ச இடத்தில் இருந்த போது, இருவரும் காதலித்ததாக அடிக்கடி கிசுகிசு எழும். இது குறித்து கமலே ஒருமுறை நேர்காணலில் பேசியிருந்தார்.

Written by - Yuvashree | Last Updated : Nov 8, 2025, 04:00 PM IST
  • கமல்ஹாசனுடன் ஜோடியாக நடித்த நடிகை
  • சினிமாவில் அப்படியொரு காதல்..
  • நிஜ வாழ்க்கையில் சகோதரியாம்!
சினிமாவில் காதல்.. நிஜத்தில் சகோதரி மாதிரி! பிரபல நடிகை குறித்து மனம் திறந்த கமல்..

Kamal Haasan Sridevi Relationship : “கமல் மாதிரி பையன் வந்தாதான் கல்யாணம் பண்ணிப்பேன்” என்பது 80களில் வளர்ந்த இளம்பெண்களின் டைலாக்காக இருந்தது. அந்த அளவிற்கு, பல பெண்களின் மனதை கொய்த கமல், தன் இளமை காலத்தில் குறிப்பிட்ட ஒரு நடிகையுடன் மட்டும் சேர்ந்து அதிக படங்களில் நடித்திருக்கிறார். அந்த நடிகை வேறு யாருமில்லை ஸ்ரீதேவிதான்.

Add Zee News as a Preferred Source

கமல்-ஸ்ரீதேவி படங்கள்:

இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத On-Screen ஜோடி யார் என்று கேட்டால், பலரும் கண்களை மூடிக்கொண்டு கமல்-ஸ்ரீதேவி என கூறி விடுவர். கமலும் ஸ்ரீதேவியும் சிறு வயதிலேயே சினிமாவில் நுழைந்தவர்கள். இருவரும் முதல்முறை சந்தித்துக்கொண்டது டீன்-ஏஜில் இருக்கும் போதுதான். இருவரும் மூன்றாம் பிறை, 16 வயதினிலே, வாழ்வே மாயம், சிகப்பு ரோஜாக்கள் என பல படங்களில் சேர்ந்து நடித்திருக்கின்றனர்.
இருவருக்கும் இடையே திரையில் பார்க்கும் ரொமான்ஸை, ரசிகர்கள் பலர் பல சமயங்களில் உண்மை என்றே நினைத்துக்கொள்வர். போதாக்குறைக்கு, இருவர் பற்றியும் அப்போது அடிக்கடி கிசுகிசு எழுந்ததுண்டு. இதனை, அவர்கள் சிரித்துக்கொண்டு அப்படியே கடந்து சென்று விடுவர்.

Kamal Haasan

தங்கை மாதிரி..

கமலிடம், ஸ்ரீதேவி குறித்தும், அவருடனான உறவு குறித்தும் சில ஆண்டுகளுக்கு முன்பு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஸ்ரீதேவியை தன் உடன்பிறந்தவர் போல பார்ப்பதாக கூறியிருந்தார். தங்களுக்கு 15 அல்லது 16 வயது இருக்கும் போது இருவரும் ஒரு படத்தில் ஜோடியாக நடிப்பதற்காக சந்தித்துக்கொண்டதாக கூறினார். ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் தங்களது உறவு கள்ளம் கபடமற்றதாகவும், அவர் மீது தனக்கு சகோதர பாசம் இருந்ததாகவும் கமல் தெரிவித்தார். 

இருவரும், ஒரே பள்ளி, ஒரே வகுப்பில் பயின்றதாகவும் வெளியில் பார்க்க தாங்கள் வகுப்பு தோழர்கள் போல தெரிந்தாலும், நாங்கள் இருவரும் உடன்பிறந்தவர்கள் போலத்தான் அங்கும் இருப்போம் என்றும் கமல் கூறியிருந்தார்.

காதல் காட்சிகள் குறித்து..

இருவரும் காதல் காட்சிகளில் நடிக்க வேண்டும் என்று கூறிய போது அது நகைச்சுவையாக இருந்ததாகவும், பின்பு சகோதர உணர்வுடன் இருக்கும் ஒருவருடன் ரொமாண்டிக் காட்சிகளில் நடிப்பது அருவருப்பானது என்றும் கூறினார். தான் முன்கூட்டியே நடிப்பு பயிற்சி பெற்றிருந்ததால், ஸ்ரீதேவியின் சினிமா ஆரம்ப கடத்தில் தான் அவருக்கு நடிக்க சொல்லி கொடுத்ததாக கமல் தெரிவித்திருந்தார்.

ஸ்ரீதேவியின் இறப்பு..

நடிகை் ஸ்ரீதேவி, கடந்த 2018ஆம் ஆண்டு துபாய் ஹோட்டலில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இவரது இறப்பு, இந்திய திரையுலகில் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியது. இது குறித்து மேற்குறிப்பிட்டிருந்த நேர்காணலில் பேசிய கமல், “அவரது இழப்பு எனக்கான பெரிய உறவை இழந்தது போல் இருந்தது” என்று தெரிவித்திருந்தார்.

மேலும் படிக்க | தனக்கு தாயாக நடித்தவரையே காதலித்த கமல்ஹாசன்! எந்த நடிகை தெரியுமா?

மேலும் படிக்க | காதலை சொன்ன நடிகை...‘தங்கச்சி’ என அழைத்த கமல்! யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News