இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியானது. சூர்யா. அசின், நயன்தாரா, ரியாஸ் கான், உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் மெகா ஹிட் ஆனது. நடிகர் சூரியாவின் திரை பயணத்திலும் இப்படம் மிக முக்கியமான படமாக மாறியது. தமிழில் மிகப்பெரிய ஹிட்டான நிலையில், ஹிந்தியிலும் இப்படத்தை எடுத்து வெளியிட்டனர். அமிர் கான் நடிப்பில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டையும் செய்தது.
அந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கஜினி படம் ஒரு வித்தியாசமான ஒரு கதை களத்தை கொண்டிருந்ததால், அப்படத்தை மக்கள் கொண்டாடினர். அப்படத்தில் சூரியா தனது உச்சக்கட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். குறிப்பாக மொட்டை அடித்தபடி இருக்கும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார். இப்படம் 2005ல் பெங்கள் பண்டிகைக்கு விஜய்யின் சிவகாசி படத்துடன் இறங்கியது. அப்படத்தை விட இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் படிங்க: அர்ஜுன் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் முதல் படம்! வெளியானது ஃபர்ஸ்ட் சிங்கிள்!
இப்படத்தில் ஏற்பட்ட கூட்டணியே இப்படத்தின் வெற்றிக்கு முதல் காரணம். விஜயகாந்த்தை வைத்து ரமணா, அஜித்தை வைத்து தீனா என இப்படத்திற்கு முன்பாக ஏ. ஆர். முருகதாஸ் இப்படங்களை இயக்கி இருந்தார். இந்த இரண்டு படங்களும் மெகா ஹிட்டானது. குறிப்பாக ரமணா திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தற்போதும் ரமணா தீனா படங்களை பார்த்தால் ரசிக்கும்படியாக தான் இருக்கும்.
அதேபோல் சூரியாவும் அந்த காலகட்டத்தில் உச்சத்தில் இருந்தார். 2001ல் விஜய்யுடன் சேர்ந்து ஃப்ரண்ட்ஸ் திரைப்படம், அதையடுத்து மெளனம் பேசியதே, பிதாமகன், பேரழகன் என தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்துக்கொண்டிருந்தார். இந்த நிலையில், 2005ல் சூர்யாவும் முருகதாஸும் இணைந்தனர். இந்த இரு பெரிய துருவங்களும் இணைந்ததே கஜினியின் முதல் வெற்றி என கூறலாம்.
இந்த நிலையில், கஜினி திரைப்படத்தில் நான்தான் முதலில் நடிக்க இருப்பதாக நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார். நேற்று (ஏப்ரல் 04) மாதவன் நடிப்பில் உருவான டெஸ்ட் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இப்படம் குறித்த புரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் மாதவன் கஜினி படம் குறித்து பேசினார். அவர் கூறியதாவது, கஜினி படத்தில் நடிக்கும் வாய்ப்பு முதலில் எனக்கு வந்தது. கதை கேட்டபோது இரண்டாம் பாதி எனக்கு பிடிக்கவில்லை. அதனால்தான் அப்படத்தில் நடிக்க மறுத்தேன். ஆனால் சூர்யா அப்படத்தில் நன்றாக நடித்திருந்தார். சிக்ஸ் பேக் வைப்பதற்கு அவர் கடுமையாக உழைத்தார் என நடிகர் மாதவன் கூறினார்.
மேலும் படிங்க: குக் வித் கோமாளி 6: பிக்பாஸில் களக்கியவர் இதிலும் போட்டியாளர்-யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









