ஜிவி பிரகாஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

GV Prakash Kumar Net Worth: தமிழ்நாட்டில் பிறந்து உலகளவில் போற்றப்படும் இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் ஜிவி பிரகாஷ். அவர் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 13, 2025, 03:16 PM IST
  • ஜிவி பிரகாஷ் முதன்முறையாக தேசிய விருது வென்றார்.
  • ஜிவி பிரகாஷ், சைந்தவி ஜோடி சமீபத்தில் விவாகரத்து பெற்றனர்.
  • பல சொகுசு கார்களையும் இவர் வைத்துள்ளார்.
ஜிவி பிரகாஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

GV Prakash Kumar Net Worth: தமிழ்நாட்டில் பிறந்து உலகளவில் போற்றப்படும் இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் ஜிவி பிரகாஷ். அவர் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தற்போது ஜிவி பிரகாஷின் சொத்து மதிப்பு எவ்வளவு என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

Add Zee News as a Preferred Source

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். சிறுவயதில் இருந்தே இசையின் மீது அதீத ஆர்வம் கொண்டிருந்த ஜிவி பிரகாஷை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியது ஏ.ஆர்.ரகுமான் தான். ஜிவி பிரகாஷின் தாய் மாமா தான் ஏ.ஆர்.ரகுமான், அவர் இசையமைப்பில் வெளிவந்த ஜென்டில்மேன் படத்தில் இடம்பெற்ற ‘சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே’ பாடல் தான் ஜிவி பிரகாஷ் முதன்முதலில் பாடிய பாடலாகும்.

ஏ.ஆர்.ரகுமானிடம் இசை பயின்று தன்னை படிப்படியாக மெருகேற்றிக் கொண்ட ஜிவி பிரகாஷ், கடந்த 2006 ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்த படத்திற்காக அவர் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆனது. இதன் பின்னர் கோலிவுட்டின் மாஸ் நடிகர்களான விஜய், அஜித், ரஜினி போன்றவர்களின் படங்களுக்கு இசையமைத்த ஜிவி பிரகாஷ், செல்வரகாவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் என்கிற படத்திற்கு தன்னுடைய இசை மூலம் உயிர் கொடுத்திருந்தார். அந்த படத்திற்காக கடினமாக உழைத்த ஜிவி பிரகாஷுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காவிட்டாலும், அப்படத்தையும், அதில் உள்ள இசை மற்றும் பாடல்களை ரசிகர்கள் காலம் கடந்து தற்போது கொண்டாடி வருகின்றனர்.

இப்படி இசையில் முழுவதுமாக ஆதிக்கம் செலுத்தி வந்த ஜிவி பிரகாஷுக்கு போகப் போக நடிப்பின் மீது ஆர்வம் வந்தது. இதையடுத்து டார்லிங் படம் மூலம் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்தார் ஜிவி பிரகாஷ். இதனை அடுத்து சில ஹிட் படங்களை கொடுத்தார். இதனிடையே சூர்யாவின் சூரரைப் போற்று, தனுஷின் வாத்தி, கேப்டன் மில்லர் என பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து பல விருதுகளையும் வென்றிருக்கிறார் ஜிவி. குறிப்பாக சூரரைப் போற்று படத்திற்காக ஜிவி பிரகாஷ் முதன்முறையாக தேசிய விருது வென்றார்.

இவருக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தனது பள்ளி தோழியான பாடகி சைந்தவியை தான் ஜிவி பிரகாஷ் காதலித்து கரம்பிடித்தார். இந்த ஜோடிக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. திருமணமாகி 11 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த ஜிவி பிரகாஷ், சைந்தவி ஜோடி சமீபத்தில் விவாகரத்து பெற்றனர்.

இந்நிலையில் இன்று இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது 39-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் அவரின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி பிசியான நடிகராகவும், இசையமைப்பாளராகவும் கலக்கி வரும் ஜிவி பிரகாஷிற்கு ரூ. 80 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இதுதவிர பல சொகுசு கார்களையும் இவர் வைத்துள்ளார்.

மேலும் படிக்க | ஆளே மாறிப்போன பிரபல வில்லன் நடிகர்! கிங் மாதிரி இருந்தவர்..இப்போ எப்படி ஆகிட்டாரு பாருங்க..

மேலும் படிக்க | அனிருத்துக்கு விரைவில் திருமணம்? மணப்பெண் யார் தெரியுமா? 33,400 கோடி சொத்துக்கு வாரிசு..

மேலும் படிக்க | கைதி 2 படத்தின் ஹீரோயின்! ஏற்கனவே கார்த்தியுடன் நடித்தவர்-யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

...Read More

Trending News