Actor Ballaiyya in World Book Of Records: 50 ஆண்டுகளாக சினிமாவில் வெளிச்சமிட்ட நடிகர் ஒருவர், இப்போது உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். யார் அந்த டாப் ஸ்டார் தெரியுமா? தெரிந்தால் நீங்களே ஷாக் ஆகிடுவீங்க!

Actor Ballaiyya in World Book Of Records: இந்திய சினிமாவில் 50 ஆண்டுகளாக முன்னணி நடிகராகத் திகழ்ந்த நந்தமூரி பாலகிருஷ்ணா (பாலைய்யா), இங்கிலாந்தின் உலக சாதனை புத்தகத்தின் (WBR) தங்கப் பதிப்பில் இடம்பிடித்து பெருமை பெற்றுள்ளார்.
லண்டனை தலைமையிடமாகக் கொண்ட WBR, இந்தியா, அமெரிக்கா, கனடா, ஸ்விசர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச அமைப்பு ஆகும்.
இந்த அங்கீகாரம், பாலைய்யாவின் அரை நூற்றாண்டுக்கும் மேலான சினிமா பயணத்திற்கான சிறப்பு பாராட்டாகும். தனது தந்தை புரட்சித் தலைவர் நந்தமூரி தாரக ராமராவின் மரபைத் தொடர்ந்து, டோலிவுட்டில் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியுள்ளார். விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றிபெற்ற பல படங்கள் மூலம் ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்துள்ளார்.
மேலும், அவரின் “பகவந்த் கேசரி” திரைப்படம் தேசிய விருது பெற்றது. கலைத் துறைக்கான பங்களிப்புக்கு இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷண் கௌரவத்தையும் பெற்றுள்ளார். அரசியலிலும் சிறப்பாக செயல்பட்ட அவர், ஹிந்துபூர் தொகுதியில் ஹாட்ரிக் வெற்றி பெற்று மக்கள் நம்பிக்கையை நிலைநிறுத்தியுள்ளார்.
வெள்ளித்திரையைத் தாண்டி, கடந்த 15 ஆண்டுகளாக பசவதாரகம் இந்தோ அமெரிக்க புற்றுநோய் மருத்துவமனை தலைவர் ஆகப் பணியாற்றி, ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு நம்பிக்கை மற்றும் சிகிச்சையை வழங்கி வருகிறார். இதன் மூலம் சமூக சேவையிலும் பெரும் பங்காற்றி வருகிறார்.
உலக சாதனை புத்தகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சந்தோஷ் சுக்லா, “பாலகிருஷ்ணாவின் 50 வருட சினிமா பயணம் ஒரு தலைமுறைக்கு மட்டுமல்ல, உலக அளவிலும் ஊக்கமளிப்பதாகும்” என பாராட்டியுள்ளார். இந்த சிறப்பு கௌரவ விழா ஆகஸ்ட் 30-ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.
சுருக்கமாக:
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ