)
இதுவரை தனுஷ் இயக்கத்தில் பவர் பாண்டி, ராயன் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், ராயன் உள்ளிட்ட படங்கள் வெளியாகி இருக்கிறது. இதில் பவர் பாண்டி மட்டும் மட்டுமே அனைவரும் ரசிக்கும் படியாக அமைந்தது. மற்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை. இந்த சூழலில் தற்போது இட்லி கடை படத்தை இயக்கி அவரே நடித்திருக்கிறார். நித்யா மேனன் அவருக்கு ஜோடியாக இப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் அக்டோபர் 1ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இந்த நிலையில், நடிகர் பார்த்திபன், தான் இட்லி கடை படத்தில் ஓர் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக பதிவிட்டுள்ளார். அவரது பதிவு தற்போது வைரலாகி வருகிறது.வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான ஆடுகளம் படத்தில் நடிக்க முடியாமல் போனதாகவும் இணைந்து நடித்த சூதாடி எனும் படம் இடையில் நின்று போனதாகவும் கடைசியில் ஒருவழியாக இட்லி கடை படத்தில் ஓர் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதில், இன்னொரு தேசிய விருது வாங்கி இருக்க வேண்டிய 'ஆடுகளத்தில் நான் நடிக்க முடியாமல் போனதும், இணைந்து நடித்த 'சூதாடி' இடையில் நின்று போனதும், இவையாவையும் ஈடு கட்டும் விதமாக 'இட்லி கடை'யில் ஒரு சிறு மினி இட்லியாக கௌரவ வேடத்தில் நடிக்க அவரே அழைத்த போது, மறுக்காமல் ஒப்புக் கொண்டேன். நேற்று டப்பிங் நிறைவு பெற்றது. இரும்பினும் சக்தி கொண்ட இதயத்தோடு, எறும்பினும் சுறுசுறு உழைப்போடு, சகலகலா வல்லவனாக, அகில இந்திய நட்சத்திரமாக தனுஷ் மிளிரினால்(மிருனாள் எனத் தவறாக வாசித்தால் அதற்கு நான் பொறுப்பல்ல ஏனெனில் அது தான் பிசுபிசுத்த கிசுகிசுவாய் போய் விட்டதே)அது ஆச்சர்யமில்லை என்பதை கண் கூடாகக் கண்டேன் இட்லி கடையில். அக்டோபரில் வெந்து விடும் sorry வந்து விடும்!!! என பதிவிட்டுள்ளார்.
தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் குபேரா. இப்படத்தில் தனுஷுடன் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா, சுனைனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் மக்கள் மத்தியில் சுமாரான வரவேற்பையே பெற்ற நிலையில், இட்லி கடை படத்தின் மூலம் தனுஷ் கம்பேக் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ