நடிகர் பொன்னம்பலத்தின் தற்போதைய நிலை! ஆளே மாறிப்போயிட்டாரு..

Actor Ponnambalam Current State : பிரபல வில்லன் நடிகராக இருந்த பொன்னம்பலம், தற்போது உடல் நிலை சரியில்லாத காரணத்தால் ஆளே மாறிப்போய் இருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.  

Written by - Yuvashree | Last Updated : Feb 7, 2026, 07:06 PM IST
  • பொன்னம்பலத்தின் தற்போதைய நிலை..
  • எப்படி இருந்தவர்..
  • முழு விவரம்..
நடிகர் பொன்னம்பலத்தின் தற்போதைய நிலை! ஆளே மாறிப்போயிட்டாரு..

Actor Ponnambalam Current State : தமிழ் திரையுலகில் ஸ்டன்ட் கலைஞராக இருந்தவர் பொன்னம்பலம். 80களில் ஆரம்பித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, வில்லன் நடிகராக இருந்தவர் பொன்னம்பலம். இவரது தற்போதைய நிலையை பார்த்த நெட்டிசன்கள் அதனை வைரலாக்கி வருகின்றனர்.

Add Zee News as a Preferred Source

பொன்னம்பலம்:

1988ஆம் ஆண்டில் வெளியான படம், ‘கலியுகம்’ என்கிற படம் மூலம், நடிகராக தனது வாழ்க்கையை தொடங்கியவர் பொன்னம்பலம். இவர், அடுத்தடுத்து அபூர்வ சகோதரர்கள், வெற்றி விழா, மைக்கேல் மதன காமராஜன் போன்ற பல்வேறு கமலின் படங்களில் நடித்தார். 

நாட்டாமை படம்தான் பொன்னம்பலத்தை பெரிதாக பலருக்கு வெளியில் காண்பித்தது. அதில் வில்லனாக நடித்திருந்த இவர், தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களிலும் நடித்தார். 

கடைசியாக நடித்த படம்..

கொடூர வில்லன் - காமெடி வில்லன் என இரு வேறு தோற்றங்களிலும் நடிக்கும் பொன்னம்பலம், கடைசியாக 2022ஆம் ஆண்டு வெளியாகியிருந்த ‘காட்டேரி’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இவரை திரையுலகில் காணுமே என தேடும் போதுதான், அவருக்கு என்ன பிரச்சனை என்பது அனைவருக்கும் புரிந்தது.

உடல் நிலை சரியில்லை..

பொன்னம்பலம், சிறுநீரக பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவ செலவுகளுக்கு பணம் இல்லாத நிலையில், தனக்கு உதவி செய்யுமாறு, வீடியோ வெளியிட்டார். இதையடுத்து அவருக்கு தனுஷ், சரத்குமார் உள்ளிட்ட சில நடிகர்கள் உதவி செய்தனர். சிரஞ்சீவி, அப்போலோ மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்தார். 

4 ஆண்டுகளில் 750 ஊசிகள்..!

தனது உடல் நிலை குறித்து ஒரு பேட்டியில் பேசிய போது, தன்னுடைய நிலைமை எந்த எதிரிக்கும் வரக்கூடாது என்றும், கடந்த நான்கு ஆண்டுகளாக 750 ஊசிகளை போட்டு இருப்பதாகவும் கூறியிருந்தார். சமீபத்தில், இவர் வீல் சேரில் அமர்ந்து கொண்டு பறையிசைக்கு நடனம் ஆடியிருந்தார். இதை பார்த்த பலர், இவருக்கு என்ன ஆனது என்று கேட்டு வந்தனர். அதற்கு பதிலளித்த அவர், தன்னுடைய அக்காவின் இறப்புதான் இதற்கு காரணம் என்றும் அனைத்து நேரங்களிலும் தனக்கு துணையாக இருந்தது அவர்தான் என்றும் தெரிவித்து இருந்தார். 

தனக்கு மிகவும் ஆறுதலாக இருந்த சகோதரி, திடீரென்று மாரடைப்பால் இறந்து விட்டதாகவும், அந்த சோகம் கொஞ்சமாவது உறைய வேண்டும் என்கிற காரணத்தால்தான் இப்படி ஆடியதாகவும் பேசியிருந்தார். 

தனிமை..

தனது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி, உருக்கமாக பேசிய பொன்னம்பலம் தான் சின்ன வயதில் இருந்தே யாருக்கும் பாரமாக இருந்து விடக்கூடாது என்று நினைத்து வளர்ந்ததாகவும், தன் மனைவிக்கு சினிமா சூழல் பிடிக்காது என்றும் கூறினார். சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு பிறகு தனக்கு உடல் ரீதியாக பல சிரமங்கள் ஏற்பட்டதாகவும், அதனால் தான் ரொம்ப கஷ்டப்பட்டதாகவும் கூறியிருந்தார். தன்னை கழிவறைக்கு கூட ஒருவர் தன்னை அழைத்து செல்லும் நிலை ஏற்பட்டதாக கூறியிருக்கிறார். மேலும், இப்போது கொஞ்சம் எழுந்து உட்காரும் நிலைக்கு வந்திருப்பதாகவும் பேசியிருக்கிறார். இருப்பினும், இந்த சமயங்களில் தான் தனிமையாக உணர்ந்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க | நடிகை ரவீனா ரவிக்கு ஆன்லைனில் தொல்லை! வைரலாகும் இன்ஸ்டா பதிவு..

 மேலும் படிக்க | 14 பேருடன் கல்யாணம்! அதெல்லாம் ரொம்ப கஷ்டம்…மனம் திறந்த பிரபல நடிகை-என்ன விவரம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News