)
Rajinikanth Ilayaraajaa Atrocities Johnny Movie : இளையராஜா, சினிமாவின் இசைப்பயணத்தில் 50 ஆண்டுகளை முடித்துள்ளதை தொடர்ந்து, அவருக்கு பாராட்டு விழா நடைப்பெற்றது. இதில் ரஜினிகாந்த் பேசிய விஷயங்கள், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இளையராஜா 50 விழா:
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், ‘இளையராஜா 50 ஆண்டு விழா’ நடைப்பெற்றது. தமிழ்நாட்டு அரசு சார்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து கலந்து காெண்டார். இவ்விழாவில், இளையராஜாவின் ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருந்தது. சிம்பொனி இசைக்கச்சேரி, அவரது பாடல்கள் என அனைத்தும் செவிகளுக்கு விருந்தாக இருந்தன.
ரஜினி பகிர்ந்த விஷயம்..
நடிகர் ரஜினிகாந்தும், இசைஞானி இளையராஜாவும் பல ஆண்டுகால நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இருவரும், பல படங்களில் ஒன்றாக சேர்ந்து வேலை பார்த்திருக்கின்றனர். இவர்கள் மேடை ஏறினாலே, ரசிகர்கள் சிரிப்பலையில் நனையப்பாேவது கன்ஃபார்ம். ரஜினி, இளையராஜாவை ‘சாமி..சாமி’ என்று அழைப்பதும், அவரிடம் வம்பு வளர்க்க இளையராஜா திணருவதும் பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கும். அப்படித்தான், இளையராஜாவின் 50 ஆண்டுகள் பாராட்டு விழாவிலும் ரஜினி சில விஷயங்களை பகிர்ந்தார்.
ரஜினி, இளையராஜாவை கடின உழைப்பாளி என்று கூறியதோடு, தான் அவருடன் சேர்ந்து பணியாற்றிய போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து பேசினார்.
குடித்து விட்டு அடித்த லூட்டி..
இளையராஜா, பேசிய போது வரலாற்றிலேயே இசையமைப்பாளருக்கு இவ்வளவு பெரிய பாராட்டு விழா நடத்துவது இதுதான் முதல்முறை என்றார். ரஜினி குறித்து பேசுகையில், “ஜானி படத்தில் வேலை பார்த்த போது, ரஜினிகாந்த் மது குடித்தார்..” என்று ஆரம்பித்த அவர், பின் அமர்ந்திருந்த ரஜினியை பார்த்து “சொல்லிடவா…சொல்லிடவா..” என்றார். ரஜினி, சொல்லுங்கள் சொல்லுங்கள் என்று கையசைத்தார். பின்னர் அப்படியே அருகில் வந்து மைக்கை வாங்கிய அவர் இளையராஜா குடித்து விட்டு செய்த சம்பவம் குறித்து பேசினார்.
“ஜானி படத்தின் ஷூட்டிங்கின் போது நானும் இளையராஜாவும் இயக்குநர் மகேந்திரனும் ட்ரிங்க்ஸ் செய்தோம். அப்போது, அரை பீரை குடித்து விட்டு இளையராஜா போட்டா ஆட்டம் இருக்கே..அய்யோய்யோயோ! அதன் பிறகு இசையை பற்றி பேசினால், ‘அதை விடுங்க சார்’ என்று கூறிவிட்டு, நடிகைகள் குறித்து கிசுகிசு கேட்டார். ஹீரோயின்ஸ் மேல அவ்ளோ லவ்வு..அதுதான் இந்த பாடல் எல்லாம். இன்னும் நிறைய இருக்கு..அப்பறம் வெச்சுக்கிறேன்” என்று கூறினார்.
ரஜினி இதனை கூறிவிட்டு செல்ல, பின்னர் பேசிய இளையராஜா, “அவர் இல்லாததையும் பொல்லாததையும் கூறுகிறார்” என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.
நெகிழ்ச்சியில் இளையராஜா…
இந்த இளையராஜாவின் பாராட்டு விழா, அவரை பெரிதும் நெகிழ்ச்சியடைய செய்தது. இந்த விழாவை, தனக்காக ஏன் நடத்துகிறீர்கள் என்று தெரியவில்லை, என்ன பேசுவது என்றும் புரியவில்லை என்றார். இறுதியில், ‘ஜனனி ஜனனி’ பாடல் பாடினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ