Rajinikanth Film After Jailer 2 Sundar C : நடிகர் ரஜினிகாந்த், தற்போது ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார். இவர் அடுத்ததாக எந்த படத்தில் நடிக்கப்போகிறார் என்பது குறித்த எதிர்பார்ப்பு எட்டுத்திக்கிலும் எழுந்துள்ளது.
ஜெயிலர் 2:
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டில் வெளியான படம் ஜெயிலர். இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். இந்த படத்தில் ரஜினிகாந்த், ‘முத்துவேல் பாண்டியன்’ எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். டார்க் காமெடி பாணியில் வெளியாகியிருந்த இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று அப்போதே தெரிவிக்கப்பட்டது. அதற்கு ஏற்றவாறு, படமும் சில மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது.
இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். சென்னையில் நடந்து வந்த ஷூட்டிங், சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் நடந்து முடிந்தது. இன்னொரு கட்ட படப்பிடிப்பு விரைவில் நடக்க இருக்கிறது.
அடுத்த படம் யாருடன்?
ரஜினிகாந்த், வழக்கமாக ஒரு படம் நடிக்கிறார் என்றால், அதில் நடித்து முடிப்பதற்கு முன்னரே எந்த படத்தில் நடிக்கப்போகிறோம் என்பதை தீர்மானித்து கொள்வார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்த பின்பு, அடுத்த படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்வார். ஆனால், இந்த முறை ஜெயிலர் 2 படத்தில் நடிக்கும் போது அடுத்த படத்திற்கான திட்டத்தில் அவர் பெரிதாக இறங்கவில்லை.

தற்போது ரஜினி தன் அடுத்த படத்திற்கான இயக்குநரை ஓகே செய்து விட்டதாக கூறப்படுகிறது. கமலுடன் அவர் இணைந்து நடிக்கும் படத்தின் வேலைகள் தாமதம் ஆவதால், அவர் இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி-யுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற இருப்பதாக கூறப்படுகிறது. கதையை கேட்டு ஓகே செய்து விட்டதாகவும், பணிகள் அடுத்தடுத்து நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
கமல்-ரஜினி இணைந்து நடிக்கும் படம்:
‘கூலி’ திரைப்படம் வெளிவந்த சமயத்தில் கமல்-ரஜினி ஒன்றாக பல ஆண்டுகளுக்கு பின்பு ஒரு படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதனை ரஜினியும் கமலும் உறுதிப்படுத்தினர். ஆரம்பத்தில் இதனை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், இது வர்க்-அவுட் ஆகாது என்று நினைத்த ரஜினியும் கமலும், வேறு இயக்குநரை தேடி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கு இடைப்பட்ட சமயத்தில்தான், அவர் சுந்தர்.சியுடன் சேர்ந்து விரைவாக அந்த படத்தில் நடித்து முடிக்க இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.
இப்போது என்ன செய்கிறார் ரஜினிகாந்த்?
நடிகர் ரஜினிகாந்த், தற்போது ரிலாக்ஸாக இமையமலைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டிருக்கிறார். அங்கு அவர் பல கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததும், பாபாஜி குகைக்குள் அமைதியாக அமர்ந்து தியானம் செய்ததும் போட்டோவாக இணையத்தில் வைரலானது. இதையடுத்து அவர் சென்னை திரும்பிய பின்பு தனது பட வேலைகளை கவனிப்பார் என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.
மேலும் படிக்க | ரஜினிகாந்த் எழுதிய 2 படங்கள்! ரெண்டுமே படுதோல்வி..என்னென்ன தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









