)
Rajinikanth Films Grossed Over 500 Crore : தமிழ் திரையுலகில் டாப் நடிகராக இருப்பவர், ரஜினிகாந்த். சமீபத்தில் இவரது கூலி திரைப்படம் வெளியானது. நல்ல வரவேற்பு பெற்று இருக்கும் இந்த படம், தற்போது பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை சுமார் ரூ.500 கோடியை கடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதற்கு முன்னர் அவரது இரண்டு படங்கள் 500 கோடியே கடந்திருக்கிறது. அவை என்னென்ன படங்கள் தெரியுமா?
2.0:
2010ல் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்த படம் எந்திரன். தமிழில் அதிக வசூல் பெற்ற படங்களுள் முதல் படமாக இது இருந்தது. பின்னாளில் வந்த தென்னிந்திய படங்கள் யாவும் இதை எடுத்துக்காட்டாக வைத்து இன்னும் பெரிதாக மாஸ் காட்டியது. இந்த படத்தில் இரண்டாம் பாகம் 2018 ஆம் ஆண்டில் வெளியானது. இதையும் ஷங்கர் இயக்கியிருந்தார்.
2.0 திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் சேர்ந்து அக்ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட சிலர் நடித்தனர். இப்படம், அப்போதே சுமார் ரூ.722 கோடி வரை வசூலித்திருக்கிறது. இப்போது வரை, தமிழில் அதிக வசூல் பெற்ற படம் இதுதான். ரஜினிகாந்தின் அதிக வசூல் பெற்ற படங்களுள் டாப் இடத்திலும் இதுதான் இருக்கிறது.
ஜெயிலர்:
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்த படம் ஜெயிலர். இப்படம், கடந்த 2023ஆம் ஆண்டு வெளியானது. இதில் அவருடன் சேர்ந்து தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், வசந்த் ரவி, மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றர். ரஜினிக்கு இந்த படத்தில் பில்ட் மட்டுமே அதிகமாக இருந்ததாக ரசிகர்கள் தெரிவித்தனர். இந்த படம், சுமார் ரூ.650 கோடி வரை வசூலித்திருக்கிறது. இப்படம் தமிழகத்தில் மட்டுமன்றி உலகளவில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது. இப்படத்தின் 2ஆம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.
கூலி:
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் சமீபத்தில் நடித்திருந்த படம், கூலி. இந்த படத்தில் அவருடன் சேர்ந்து ஸ்ருதிஹாசன், செளபின் சாகிர், சத்யராஜ், உப்பேந்திரா, அமீர்கான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம், சினிமா விமர்சகர்கள் மத்தியில் நெகடிவ் விமர்சனங்களை பெரிதளவில் பெற்றது. இருப்பினும் ரஜினி ரசிகர்களுக்கு படம் ரொம்பவே பிடித்திருந்தது. இருப்பினும் அவர்கள் ஒரு சில லாஜிக் ஓட்டைகள் பற்றி கூறி வந்தனர். ஆனாலும் படம் பாக்ஸ் ஆபிஸில் பல சமீபத்திய தமிழ் படங்களை மிஞ்சியிருக்கிறது. படத்தின் வசூல் இப்போது ரூ.500 கோடியை கடந்துள்ளது.
ரஜினியால் மட்டும் எப்படி முடிகிறது?
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படங்கள் மட்டும் சுமார் என்று விமர்சனத்தை பெற்றால் கூட எப்படி இவ்வளவு வசூலிக்கிறது என்பது பலரது கேள்வியாக இருக்கிறது. இதற்கு காரணம், அவருக்கு வெளிநாடுகளில் இருக்கும் தியேட்டர்களின் மார்கெட்தான். அதைத்தாண்டி, இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர் கூட்டமும் இருக்கிறது. எனவே, இப்படிப்பட்ட ஓவர்சீஸ் மார்கெட்டும், ரசிகர்களும் இருக்கும் வரை அவரது பட மார்கெட்டை யாராலும் அசைக்க முடியாது என்பது பலரது கருத்தாக இருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ