கூலி படத்தை பார்த்து ரஜினி சொன்ன விமர்சனம்! என்ன தெரியுமா?

Rajinikanth Review Coolie Movie First Half : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான கூலி திரைப்படத்தை ரஜினி பார்த்ததாகவும், அது குறித்து அவர் ரிவ்யூ சொன்னதாக கூறப்படுகிறது.  

Written by - Yuvashree | Last Updated : Jun 13, 2025, 06:17 PM IST
  • கூலி படத்திற்கு ரஜினி சொன்ன ரிவ்யூ
  • முதல் பாதியை மட்டும் பார்த்தார்
  • படம் எப்படியிருக்கு?
கூலி படத்தை பார்த்து ரஜினி சொன்ன விமர்சனம்! என்ன தெரியுமா?

Rajinikanth Review Coolie Movie First Half : ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் படம் கூலி. இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்திருக்கும் நிலையில், இப்படத்தை பார்த்து விட்டு ரஜினிகாந்த் சொன்ன ரிவ்யூ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கூலி திரைப்படம்:

கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என குறுகிய காலத்திலேயே ஹிட் படங்களை கொடுத்த இயக்குநராக மாறிவிட்டார் லோகேஷ் கனகராஜ். இவர், ரஜினிகாந்துடன் முதல் முறையாக கை கோர்த்திருக்கும் படம், கூலி. இந்த படத்தில், அவர் ரஜினியின் ரசிகராக பல சம்பவங்கள் செய்திருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூலி படத்தின் படப்பிடிப்பு, சில நாட்களுக்கு முன்பு நடந்து முடிந்தது. இதையடுத்து, படம் வெளியாக இன்னும் 100 நாட்கள் மட்டுமே இருக்கிறது என சில நாட்களுக்கு முன் படக்குழு ஒரு க்ளிம்ஸ் வீடியோவை வெளியிட்டிருந்தது. இதையடுத்து, படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு தற்போது எக்கச்சக்கமாக எகிறி இருக்கிறது.

ரஜினிகாந்த் சொன்ன விமர்சனம்..

கூலி திரைப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில், படத்தின் முதல் பாதியை ரஜினிகாந்த் பார்த்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, லோகேஷ் கனகராஜ்ஜை அழைத்து “சூப்பர் சூப்பர் சூப்பர் கண்ணா” என்று அவர் சொன்னதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

வழக்கமாக, எந்தவொரு படமும் வேலைகளுக்கு பிறகு அல்லது பாதி வேலைகள் முடிந்த போதே, இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுக்கு காண்பிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இப்போது ரஜினிகாந்துக்கும் படம் போட்டு காண்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதையடுத்து அவர் அதற்கு விமர்சனம் சொன்னதாகவும் கூறப்படுகிறது. 

கூலி படத்தில் நாகார்ஜுனா சைமன் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர், சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நேர்காணலில் படம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். படத்தில் லோகேஷும் ரஜியும்தான் விசில் ஃபேக்டர் என்று கூறியிஉக்கிறார். மேலும், இந்த படத்தில் தனது கதாப்பாத்திரமும் லுக்கும் வித்தியாசமாக இருப்பதாகவும் லோகேஷ் கனகராஜிற்கு தமிழ் சினிமாவில் நிறைய ரசிகர்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

அமீர் கான் கேமியோ:

பாலிவுட் நடிகர் அமீர்கான், தான் கூலி படத்தில் நடித்திருப்பதை உறுதி செய்தார். ஏற்கனவே நாகார்ஜுனா, உப்பேந்திரா, செளபின் சாகீர், சத்யராஜ் உள்ளிட்டோர் இந்த படத்தில் இருக்கின்றனர் என்பது வெளிவந்தது. ஆனால், அமீர்கான் கதாப்பாத்திரம் குறித்த தகவல்கள் மட்டும் தெரிவிக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், அவர் தான் கூலி படத்தில் இருப்பதை உறுதிப்படுத்தியதோடு, தனது கதாப்பாத்திரம் கடைசி காட்சியில் வரும் என்று கூறியிருக்கிறார்.

எப்போது ரிலீஸ்?

கூலி திரைப்படம், வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகிறது. இந்த படத்தில் நடிகையும் கமலின் மகளுமான ஸ்ருதிஹாசன், ரஜினிகாந்திற்கு மகளாக ‘பிரீத்தி’ எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படி பல சிறப்பம்சங்கள் படத்தில் இருப்பதால், இதனை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க | கூலி படத்திற்கு ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம்! விஜய்யுடன் இவ்வளவு கம்மியா?

மேலும் படிக்க | கைதி 2 படத்தின் ஹீரோயின்! ஏற்கனவே கார்த்தியுடன் நடித்தவர்-யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News