ஜெயிலர் 2க்கு அடுத்து ரஜினி நடிக்கும் படம்! இயக்குநர் இவர்தான்..யார் தெரியுமா?

Rajinikanth Next Film Director After Jailer 2 : ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிசியாக இருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு அவர் யாருடன் நடிக்க இருக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.  

Written by - Yuvashree | Last Updated : Jun 19, 2025, 12:50 PM IST
  • ரஜினியின் அடுத்த பட இயக்குநர் யார்?
  • கூலி, ஜெயிலர் 2க்கு பின் என்ன பிளான்?
  • இந்த இயக்குநர்தானா?
ஜெயிலர் 2க்கு அடுத்து ரஜினி நடிக்கும் படம்! இயக்குநர் இவர்தான்..யார் தெரியுமா?

Rajinikanth Next Film Director After Jailer 2 : 75 வயதை தாண்டியும், தமிழ் திரையுலகின் டாப் நடிகராக திகழ்ந்து வருகிறார், ரஜினிகாந்த். இவர், தற்பாேது ஜெயிலர் 2 திரைப்படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், இதற்கு பிறகு அவர் எந்த இயக்குநரின் படத்தில் நடிக்கிறார் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

ரஜினிகாந்த்தின் பட லைன் அப்:

நடிகர் ரஜினிகாந்த், தனது 70களை கடந்த போதிலும், இப்போதும் வரிசையாக ஹிட் படமாக கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டு வேட்டையன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் நல்ல கதையாக இருந்தாலும், ரசிகர்களுக்கு பெரிதாக பிடிக்காததால் படம் தோல்வியை தழுவியது. இதையடுத்து அவர் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் மற்றும் நெல்சன் உள்ளிட்ட இயக்குநர்களின் படங்களில் கமிட் ஆனார்.

லோகி-நெல்சனுடன் கூட்டணி:

கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ், ரஜினியை வைத்தும் ஒரு படத்தை எடுப்பார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில், இருவரும் கூலி படத்தில் இணைந்தனர். இதில் ரஜினி தேவா எனும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் பான் இந்திய நடிகர்களான உப்பேந்திரா, நாகார்ஜுனா, செளபின் சாகிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிறப்பு கேமியோ கதாப்பாத்திரத்தில் அமீர்கான் நடித்துள்ளார். பிரீத்தி என்கிற கதாப்பாத்திரத்தில் ரஜினிக்கு மகளாக ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார்.

கூலி படத்தின் ஷூட்டிங்கை முடித்த பின்பு லோகி கமிட்டான படம், ஜெயிலர் 2. 2023ல் வெளியான ஜெயிலர் திரைப்படம் நல்ல வசூலையும் வரவேற்பையும் பெற்ற பின்பு, அதன் இரண்டாம் பாகமும் கண்டிப்பாக வெளியாகும் என்று நெல்சன் கூறியிருந்தார். அதன்படி, இந்த படத்தின் ப்ரமோ அறிவிப்பிற்கு பிறகு படப்பிடிப்பு தாெடங்கப்பட்டது. தற்போது இந்த ஷூட்டிங்கில் ரஜினி பிசியாக இருக்கிறார்.

அடுத்த இயக்குநர் யார்?

ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு, ரஜினிகாந்த் எந்த இயக்குநரின் படத்தில் நடிக்கிறார் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதையடுத்து அவர் அடுத்து எந்த இயக்குநரிடம் கதை கேட்டிருக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. 

விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்தை, ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தில், விஜய்யின் காட்சிகள் முடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு இப்படம் ஜனவரி மாதம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து, அவர் ரஜினிகாந்தின் ஒரு படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Jailer 2

ஜன நாயகன் திரைப்படத்திற்கு முன்பே, ரஜினி-ஹெச்.வினோத் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருந்ததாம். ஆனால், இருவரும் வெவ்வேறு படங்களில் கமிட் ஆகி விட்டதால், அப்போது இவர்களின் படம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.

ஹெச்.வினோத், கமல்ஹாசனை வைத்து ஒரு படத்தை இயக்க இருந்தார். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் கூட வெளியானது. ஆனால், சில காரணங்களால் இந்த படத்தின் வேலைகள் அப்படியே ட்ராப் ஆனது. இப்போது இந்த கதையைத்தான் விஜய்க்கு ஏற்றார் போல கொஞ்சம் மாற்றி ஜன நாயகன் படமாக எடுத்து வருவதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | லதா ரஜினிகாந்த் நடித்த ஒரே ஒரு தமிழ் படம்! அதில் ரஜினி ஹீரோ இல்லை..எந்த படம் தெரியுமா?

மேலும் படிக்க | ‘கூலி’ படத்தின் அதிரடி அப்டேட்! ரஜினி எப்படி இருக்காரு பாருங்க-வைரல் வீடியோ..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News