Rajinikanth Falling Viral Video Fact Check : நடிகர் ரஜினிகாந்த், தனது தோட்டத்தில் வழுக்கி விழுவது போல எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், இது உண்மையா இல்லையா என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

Rajinikanth Falling Viral Video Fact Check : கூலி திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் நடிகர் ரஜினிகாந்த், தற்போது ஜெயிலர் படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார். இந்த நிலையில், ரஜினி தன் வீட்டு தோட்டத்தில் வழுக்கி விழுவது போன்ற காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது உண்மையா? சித்தரிக்கப்பட்டதா? இது குறித்து இங்கு பார்ப்போம்.
நடிகர் ரஜினிகாந்த், சுய ஒழுக்கத்துடன் இருக்கும் பிரபலங்களுள் ஒருவர். வாழ்வில் அவர் விட்டுக்கொடுக்காத விஷயங்களுள் ஒன்று, தினமும் காலையில் நடைப்பயிற்சிக்கு செல்வது. இவர் இல்லம் இருக்கும் போயஸ் கார்டன் தெருவில் அதிகாலையில் இவர் நடைப்பயிற்சி செல்வதை பார்க்கலாம் என்று ரசிகர்கள் பலர் வீடியோ பதிவிட்டிருக்கின்றனர். ஆனால், சில சமயங்களில் ரஜினி என்று நினைத்துக்கொண்டு வேறு சில நபர்களை கூட ரசிகர்கள் போட்டோ எடுத்து வைரலாக்கியிருக்கின்றனர். தற்போது அப்படிப்பட்ட வீடியோக்களில் ஒன்றுதான் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், தலையில் நரைத்த முடி, அரை ட்ரவுசர், அரைக்கை வைத்த பனியன் அணிந்து, கையை பின்னால் கட்டியவாறு ஒருவர் தன் வீட்டின் கேட் முன் இருக்கும் தோட்டத்தில் நடந்து செல்கிறார். மழை பெய்த காரணத்தினாலோ என்னவோ, தரை எல்லாம் ஈரமாக இருக்கிறது. செடிகளை தாண்டி, அங்கிருக்கும் நாளிதழை எடுக்கும் அவர், திரும்ப வரும் போது, வழுக்கி விழுகிறார். பின்னர் மீண்டும் எழுந்து, சென்று விடுகிறார்.
Coolie Rajini Title Card
— Flop Kumar Ajith 2.0 (@Flopkumarajith2) July 29, 2025
Scene Leaked
Dey @Dir_Lokesh Mass Ya Nee
Rajini Screen Presence #JanaNayagan #ThalapathyVijay#Coolie #CoolieThePowerHouse #CoolieLeaked pic.twitter.com/6jqXhP9OBk
இந்த வீடியாே, ஒரு வீட்டின் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருப்பது போல இருக்கிறது. எனவே, இதில் இருப்பவரின் முகம் சரியாக தெரியவில்லை. ஆனால், இவரது முக ஜாடை அப்படியே ரஜினிகாந்த் போல இருப்பதாக பலர் கூறி வந்தனர். ரஜினியை பிடிக்காத இன்னும் சிலர், இந்த வீடியோவை வைத்து எடிட் செய்து, ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.
உண்மையா?
இந்த வீடியோ பரவ ஆரம்பித்த சில மணி நேரத்திற்குள், இதனை இணையத்தில் பலர் பகிர ஆரம்பித்தனர். ரஜினிக்கு 74 வயது ஆவதால், இப்படி வழுக்கி விழுந்ததில், அவருக்கு என்னாச்சோ, ஏதாச்சோ என்று பலரும் பதற ஆரம்பித்தனர். இன்னும் சில ரசிகர்கள், "Take Care Thalaiva" என்று கூறி வந்தனர். இப்போது அந்த வீடியோ உண்மை இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த வீடியோவில் இருப்பவர் ரஜினிகாந்த் இல்லை என்றும், ரஜினி, தற்போது நலமாக உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
கூலி திரைப்படம்:
ரஜினிகாந்த் நடித்திருக்கும் கூலி திரைப்படம், வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி சுதந்திர தினத்தை ஒட்டி வெளியாக இருக்கிறது. இதற்கான ப்ரமோஷன் பணிகளில், படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தில், இந்திய மொழிகளில் இருக்கும் பான்-ஸ்டார் நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கின்றனர். சத்யராஜ், ராஜசேகர் எனும் கேரக்ரிலும், ஸ்ருதி ஹாசன் பிரீத்தி எனும் பாத்திரத்திலும், நாகார்ஜுனா சைமனாகவும், சௌபின் சாஹிர் தயாள் கதாப்பாத்திரத்திலும் எனும் கதாப்பாத்திரத்திலும், உப்பேந்திரா காளீசா எனும் பாத்திரத்திலும் நடிக்கின்றனர்.
கூலி படத்தின் கடைசி 10 நிமிட காட்சிகளில், நடிகர் அமீர்கான் நடித்துள்ளார். இதில், அவரது பெயர் தயாள். இவருக்கும், விக்ரம் படத்தில் வந்த ரோலக்ஸ் கதாப்பாத்திரம் போல செம வெயிட்டான ரோல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ