Ram Saran Wife Upasana Net Worth : தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகராக இருப்பவர் சிரஞ்சீவி. இவரது மகன் ராம் சரண், பெரிய குடும்பத்து பெண்ணான உபாசனாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு, இரண்டாவதாக டவின்ஸ் பிறக்க உள்ளன. இந்த சமயத்தில், உபாசனாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
Who Is Upasana | யார் இந்த உபாசனா?
‘ராம் சரணின் மனைவி, பெரிய குடும்பத்து வாரிசு’ என சொல்வதை காட்டிலும், உபாசனாவை ‘இந்தியாவின் சிறந்த தொழிலதிபர்’ என்றே சொல்ல வேண்டும். இந்தியாவின் பணக்கார மற்றும் சக்தி வாய்ந்த பெண் தொழிலதிபர்களுள் ஒருவராக இருக்கும் உபாசனா, இந்தியாவின் ஹெல்த்கேர் துறையில் முக்கிய பங்காற்றுபவராக இருக்கிறார். இவர், சொந்தமாக B - Positive என்கிற ஒரு பத்திரிகையையும் வைத்து நடத்தி வருகிறார். பெண்கள் முன்னேற்றத்தை பற்றி எங்கு சென்றாலும் பேசி வரும் அவர், தனது குடும்பத்தின் பெயரையும் ஒரு பக்கம் தனது திறன் வாய்ந்த தலைமைத்துவத்தை நிலைநாட்டி வருகிறார்.
Upasana Net Worth | 77,000 கோடி சொத்துக்கு வாரிசு!
ராம் சரணின் மனைவி உபாசனா காமினேன், அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டியின் பேத்தி ஆவார். இதனால், இவரும் அப்போலோ மருத்துவமனை நிறுவனத்தின் தலைவர்களுள் ஒருவாராக விளங்குகிறார். அப்போலோ குழுமத்தின் தலைவருக்கு மொத்தம் 77,000 கோடிக்கும் மேல் சொத்து இருக்கிறதாம் இந்த சாம்ராஜ்ஜியத்தின் வாரிசாகவும் இவர் விளங்குகிறார்.
பெரிய குடும்பத்தின் மருமகள்..
நடிகர் ராம் சரணுக்கும், உபாசனாவிற்கும் கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ராம் சரண், தெலுங்கு திரையுலகில் ’மெகா ஸ்டார்’ ஆக விளங்கும் சிரஞ்சீவியின் மகன் ஆவார். சிறு வயது நண்பர்களான ராம் சரணும் உபாசனாவும், பின்னர் தனித்தனியே தங்களின் வாழ்க்கையை பார்க்க தொடங்கினர். ஆனால், கல்லூரி படிக்கும் சமயத்தில் இருவருக்கும் மீண்டும் நேசம் தொடங்கியது. இதையடுத்து இருவரும் காதலித்து வந்தனர். இதையடுத்து இவர்களின் காதல் திருமணம் முடிந்தது.
சிரஞ்சீவியின் குடும்பமும், இந்தியாவின் பணக்கார சினிமா குடும்பங்களுள் ஒன்றாகும். இந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள், வெறும் சினிமாவில் நடிப்பதில் இருந்து சம்பாதிப்பது மட்டும் இல்லாமல் நிறைய முதலீடுகளும் செய்து வருகின்றனர். இவர்களின் சொத்து மதிப்பு மட்டுமே, சுமார் ரூ.1650 கோடிக்கு மேல் தாண்டும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தாண்டி, இவர்களுக்கென்று தனி பங்களாக்கள், விலை உயர்ந்த கார்கள் என்று பல கோடி மதிப்புடைய பல சொத்துகளையும் வைத்துள்ளனர்.
தனி சொத்து மதிப்பு:
உபாசனாவும், தனக்கென தனி சொத்தாக சுமார் ரூ.1,130 கோடி சொத்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. பெரிய தொழில் குடும்பத்தின் வாரிசான இவர், சமீபத்தில் தனது செயலால் செய்தித்தாளின் தலையங்கமாக வந்தார். உபாசனா அண்மையில் ஒரு கல்லூரி நிகழ்ச்சிக்கு சென்றிருந்ததை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
அதில் "அண்மையில் நான் IIT ஹைதராபாத் கல்லூரி நிகழ்ச்சிக்கு சென்று இருந்தேன். அப்போது யார் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள் என்று கேட்டபோது பெண்களை விட அதிகமான ஆண்கள் கைகளை உயர்த்தினர்.
ஆனால் மாணவிகளுடன் உரையாடியபோது திருமணத்திற்கு முன்னர் நிதி ரீதியாக தாங்கள் ஒரு நல்ல நிலைக்கு வர வேண்டும், நிதி ரீதியான சுதந்திரம் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என விரும்புகின்றனர் இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது" எனப் பதிவிட்டிருந்தார். இதற்கு பிரபல தொழிலதிபரான ஸ்ரீதர் வேம்பு, ‘இளைஞர்கள் தங்கள் 20-களில் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்’ என ரிப்ளை செய்திருந்தார். இது, சலசலப்பை ஏற்படுத்தினாலும், இவரை பல நாட்களாக ட்ரெண்டிங்கிலேயே வைத்திருந்தது.
மேலும் படிக்க | இந்தியாவின் டாப் 10 பணக்கார நடிகர்கள்! முதல் இடத்தில் யாருன்னு பாருங்க..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









