பிக்பாஸ் முடிந்த நீண்ட நாட்களுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரஞ்சித்!

அரசியல் என்பது பொழப்பு. இன்று அரசியல் என்பது வியாபாரம் ஆகிவிட்டது. சாதி மதத்தை விற்று பிழைப்பது என்று இருக்கிறது என்று நடிகர் ரஞ்சித் பேட்டி அளித்துள்ளார்.

Written by - RK Spark | Last Updated : May 13, 2025, 09:55 AM IST
  • இன்று அரசியல் வியாபாரம் ஆகிவிட்டது.
  • சாதி மதத்தை விற்று பிழைப்பது என்று இருக்கிறது.
  • திண்டுக்கல்லில் நடிகர் ரஞ்சித் பேட்டி.
பிக்பாஸ் முடிந்த நீண்ட நாட்களுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரஞ்சித்!

சிறுபான்மையோ, பெரும்பான்மையோ, வாக்கு வங்கியோ இறைவனுக்கு இந்த நாடகம் தெரியாது. எனக்கு இதை பற்றி கருத்து சொல்வதற்கு பெரிதாக தெரியாது. அனைவரும் கட்சி ஆரம்பிக்கலாம் மக்களுக்கு நல்லது செய்வது என்றால் மனசார வரவேற்கிறேன். எல்லோரும் நல்லது செய்வதற்காகவே அரசியல் குள்ளே வருகிறார்கள். விஜய் அவர்கள் தற்போது அரசியலுக்கு வந்துள்ளார். அவரது நோக்கம் தெரியவில்லை. அதனால், கருத்து சொல்ல எனக்கு தெரியவில்லை. எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் முன்னிட்டு போர் நிறுத்தப்பட்டதாக வைகைச் செல்வன் கூறியது குறித்த கேள்விக்கு, இதுபோன்ற அரசியல் பேச்சுகளை கேட்கும் பொழுது சிரிப்பு வருகிறது. அவர் கூறியது குறித்த எனக்கு சரியாக தெரியவில்லை என்று ரஞ்சித் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.

மேலும் படிக்க | பிரபல சீரியல் நடிகர் நேத்ரன் மரணம்! இறப்பதற்கு முன்பு மகள் குறித்து போட்ட பதிவு..

திண்டுக்கல், சித்திரை பௌர்ணமியை முன்னிட்டு மலைக்கோட்டை சுற்றி கிரிவல நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பலர் முளைப்பாரி எடுத்து கிரிவலம் சென்றனர். இந்த நிகழ்வில் நடிகர் மற்றும் இயக்குனர் ரஞ்சித் கலந்து கொண்டார். பின் ரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, "சித்திரை பௌர்ணமி அன்று வழக்கமாக கிரிவலம் சென்று வருகிறேன். அனைத்து பகுதிகளுக்கும் சென்று உள்ளேன். தமிழ்நாடு ஆன்மீக பூமி மிகச் சிறப்பான இந்த மண்ணில் கால் வைப்பது பாக்கியமாக கருதுகிறேன். ஆயிரம் ஆண்டுகள் பழமையான அபிராமி அம்மன் கோயிலில் பலர் வேண்டுதல் வைத்து நிறைவேறியுள்ளது. அதேபோல் நானும் வேண்டுதல் வைத்து இங்கு வந்துள்ளேன். தற்போது, மலைக்கோட்டையை சுற்றி கிரிவலம் செல்ல உள்ளோம் பலர் முளைப்பாரி எடுத்து வருவதையும் இங்கு காண முடிகிறது. இங்கு கலந்து கொண்டது மகிழ்ச்சியாக உள்ளது.

Ranjith

சிறுபான்மையினரை பாதுகாக்கும் ஒரே அரசாக திமுக திராவிட மாடல் அரசு தான் உள்ளது என ஸ்டாலின் கூறியது குறித்த கேள்விக்கு, அரசியல் என்பது பொழப்பு. இன்று அரசியல் என்பது வியாபாரம் ஆகிவிட்டது. சாதி மதத்தை விற்று பிழைப்பது என்று இருக்கிறது. ஆனால் இங்கு இருக்கும் மக்களுக்கு சாதி, மதம் கிடையாது. இங்கே மனசார வந்து வேண்டுவது கடவுளை மட்டும்தான். சிறுபான்மையோ, பெரும்பான்மையோ, வாக்கு வங்கியோ இறைவனுக்கு இந்த நாடகம் தெரியாது. எனக்கு இதை பற்றி கருத்து சொல்வதற்கு பெரிதாக தெரியாது. 2026 தேர்தல் திமுக-விற்கும் தவெக-விற்கும் என விஜய் கூறுவது குறித்த கேள்விக்கு, அனைவரும் கட்சி ஆரம்பிக்கலாம் மக்களுக்கு நல்லது செய்வது என்றால் மனசார வரவேற்கிறேன். எல்லோரும் நல்லது செய்வதற்காகவே அரசியல் குள்ளே வருகிறார்கள்.

மக்கள் நல்லது அனுபவித்து உள்ளனரா? கல்வி மருத்துவம் இட ஒதுக்கீடு குறிப்பாக விவசாயத்தில் ஏற்றம் குறைவு என பின்னடைவு இருந்து கொண்டே தான் உள்ளது. பொருளாதாரத்தில் நாம் இன்னும் நிறைய முன்னேற வேண்டியுள்ளது. விஜய் அவர்கள் தற்போது அரசியலுக்கு வந்துள்ளார். அவரது நோக்கம் தெரியவில்லை. அதனால், கருத்து சொல்ல எனக்கு தெரியவில்லை. திண்டுக்கல் மையப்பகுதியில் உள்ள அபிராமி அம்மன் சிலையை மலைக்கோட்டை மேலே வைக்க வேண்டும் என்ற திண்டுக்கல் மக்களின் கோரிக்கை குறித்த கேள்விக்கு, ஆயிரம் ஆண்டுகள் மேலே இருந்த அபிராமி அம்மன் 250 ஆண்டுகளாக கீழே இருப்பதாக தெரிவிக்கின்றனர். இருந்தாலும் எல்லா மக்களின் கோரிக்கை.

இங்கு எந்த சாதி மத பிரச்சனையும் கிடையாது. கடவுளின் பூர்வீகம் எங்கு உள்ளது அங்கு செல்ல வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். கட்டாயம் நானும் வேண்டுகிறேன் கூடிய விரைவில் அரசாங்கமும் மக்களும் நல்ல முடிவு எடுப்பார்கள் என நம்புகிறேன். எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக வைகைச் செல்வன் கூறியது குறித்த கேள்விக்கு, தீவிரவாத அச்சுறுத்தல் நடுவில் அரசாங்கம் நம்மளை பாதுகாத்து வருகிறது. இதுபோன்ற அரசியல் பேச்சுகளை கேட்கும் பொழுது சிரிப்பு வருகிறது. அவர் கூறியது குறித்த எனக்கு சரியாக தெரியவில்லை" என தெரிவித்தார்.

மேலும் படிக்க | பிரபல நடிகர் சூப்பர்குட் சுப்புரமணி மறைவு! புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News