Actor Ravi Mohan Statement: கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் ரவி மோகன் வைரலாகி வருகிறார். இவர் கெனிஷா பிரான்சிஸ் என்பவருடன் முதல்முறையாக ஒரு திருமண நிகழ்வில் கலந்து கொண்டது, ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை எடுத்து அவரது மனைவி ஆர்த்தி பதிவிட்டிருந்த விஷயங்களும் ஷாக்கிங் தகவல்களாக இருந்தன. இதற்கு கெனிஷா, பதிலளிக்கும் வகையில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதேபோல் தற்போது நடிகர் ரவி மோகன் ஆர்த்திக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திருமணத்தில் கலந்து கொண்ட ரவி மோகன்:
பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளர், ஐசரி கணேஷின் மகளுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. இதில் திரை பிரபலங்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், வெற்றிமாறன், சுந்தர் சி உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் ஹைலைட் ஆக இருந்தது ரவி மோகன் மற்றும் கெனிஷா பிரான்சிசின் வருகைதான். இருவரும் ஒரே நிற உடை அணிந்து, இந்த திருமண நிகழ்வில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். அதுமட்டுமின்றி மண்டபத்திற்குள் போகும் போதும் வரும் போதும், கையைப் பிடித்துக் கொண்டு சென்றனர். ரவி மோகனுக்கு இன்னும் திருமண விவாகரத்து ஏற்படாத நிலையில், அவர் இப்படி ஒரு பெண்ணுடன் புதுவெளியில் வந்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகியது.
ஆர்த்தி பதிவு:
ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக கடந்த ஆண்டு அறிவித்தார். இது குறித்து அறிவிப்பு தன்னிடம் தெரிவிக்கப்படாமல் அறிவிக்கப்பட்டதாக ஆர்த்தி அப்போது கூறியிருந்தார். இவர்களுக்கு ஆறு மற்றும் அயான் என இரு மகன்கள் உள்ளனர். ரவி மோகன் இப்போது இவர்களுடன் இல்லை என்றும் மும்பையில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இவர் கெனிஷாவுடன் திருமண நிகழ்வில் கலந்து கொண்டதையொட்டி, அன்று மாலையே ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், தானும் தனது பிள்ளைகளும் வாழ்ந்து வரும் வீட்டை காலி செய்ய சொல்லி ரவி மோகன் நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து பலர், இவருக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு தெரிவித்து வந்தனர்.
கெனிஷா போட்டிருந்த பதிவு:
கெனிஷா நேற்று தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், அவருக்கு ஒருவர் அனுப்பியிருக்கும் மெசேஜை இணைத்திருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது, “ஹே கெனீஷா, நீங்க நல்லா இருக்கீங்கன்னு நம்புறேன். ஒரு பெண், பாதிக்கப்பட்டவங்களோட 'வலிமையான அம்மா'ன்னு சொல்லிட்டு, அவங்க ஒருத்தரை இவ்வளவு சீக்கிரமா நியாயந்தீர்க்கிறதப் பாக்குறது ரொம்ப கொடுமை. அவங்க உங்களையும் ரவியோட நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிற ஒரு சந்தர்ப்பவாதி. அவங்க உண்மையான நிறம் சீக்கிரமே வெளிப்படும்னு தெரிஞ்சுக்கறதால, அவங்க மேல இருக்கிற மோசமான மக்கள் தொடர்பு வேலைகளும், தீய மனசும் ஒரு வாரத்துக்கு மேல தாக்குப்பிடிக்காது.
அவங்களப் பாதுகாக்கிற பெண்கள் அவங்களோட அனுதாபத்திற்கு அடிமையாயிடுவாங்க. இங்க செய்ய வேண்டிய சிறந்த விஷயம், அவங்களப் புறக்கணிப்பதுதான், நீங்க ரவியோட சேர்ந்து வாழ்க்கையத் தேர்ந்தெடுக்க எல்லா உரிமையும் இருக்கு. நீங்க யாருக்கும் எந்தக் கூற்றும் பண்ணக் கடமைப்பட்டிருக்க மாட்டீங்க, ஏன்னா நீங்க ஒரு வலிமையான சுதந்திரமான பொண்ணு, ஏன்னா அம்மாவோட பணத்தை உறிஞ்சி வாழுற மாதிரி இல்ல, அவங்க கூட இருக்கிறவங்க மாதிரி இல்ல. ரவி யாரு, எவ்வளவு உண்மையானவங்கன்னு பெரும்பாலான மக்களுக்குத் தெரியும்னு நான் நம்புறேன். தைரியமா இருங்க," என்று கூறியிருக்கிறார். இதை ஷேர் செய்திருக்கும் கெனிஷா, எனக்கு வந்த குறுஞ்செய்திகளிலேயே இதுதான் பெஸ்டாக இருந்தது என்று கூறியிருக்கிறார். அதன் பிறகு, அந்த ஸ்டோரியை டெலீட் செய்து விட்டார்.
ரவி மோகம் கொடுத்த பதிலடி;
இந்நிலையில் தற்போது இந்த விவகாரத்தில் மௌனமாக இருந்து வந்த நடிகர் ரவி மோகம் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் 4 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதகில, அவர், என்னை பிரிந்து வாழும் முன்னாள் மனைவியும், அவரின் மென்ட்டர்களும் உண்மையை திரித்து பேசுவது அதிர்ச்சியாக இருக்கிறது. ஒரு கணவனாக, தந்தையாக நான் எப்படி என்பதற்கு பப்ளிக் ரெக்கார்டும், பேட்டிகளும் இருக்கிறது. உண்மை வெளியே வரும், என் பிள்ளைகளுக்காகவும் நான் அமைதியாக இருக்கிறேன்.
மூழ்கிக் கொண்டிருக்கும் மனிதனை காப்பாற்ற முடிவு செய்த ஒரு தோழி தான் கெனிஷா பிரான்சிஸ். இவர் எனக்கு பெரும் ஆதரவாக மாறினார். என் வீட்டில் இருந்து என் பர்ஸ், வாகனங்கள், ஆவணங்கள், உடைமைகள், கண்ணியத்தை கூட பறித்துக் கொண்ட பிறகு நான் வெறும் காலில் நைட் டிரெஸ்ஸில் வெளியே வந்தபோது எனக்காக இருந்தார் கெனிஷா. அவர் ஒரு அழகான துவை ஆவார் எனக்கு.
சட்ட ரீதியாக, எமோஷனலாக, நிதி ரீதியாக நான் பாடுபட்டதை அவர் பார்த்தார். புகழுக்காகவோ, கவனம் பெறவோ இல்லாமல் என் நிலைமையை புரிந்து கொண்டு உதவினார். நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டியவர் என எனக்கு நினைவூட்டினார். யாரும் அவரின் கேரக்டர் அல்லது கெரியரை அவமதிக்க நான் விட மாட்டேன்.
அவர் ஒரு spiritual தெரபிஸ்ட். அருமையான பாடகியும் கூட. என் கதைச் சுருக்கத்தை கேட்டதுமே ஒரு தெரிபிஸ்டாக அல்ல மாறாக ஒரு தோழியாக உதவி செய்வேன் என உறுதி அளித்தார்.
அவரின் கெரியரில் இருப்பவர்கள் NDA-வால் வெளியே எதுவும் சொல்லாமல் அநியாயமாக குற்றம் சாட்டப்படுகிறார்கள். ஆனால் எனக்கு உண்மை தெரியும். என்னை தெரிந்தவர்களுக்கு என் நன்றிக்கடன் பற்றி தெரியும். நீங்கள் என்னை மதித்தால் கெனிஷாவையும் மதிப்பீர்கள். என்னை தன் தேவைக்காக பயன்படுத்துவது யார் என்பதை தெரிந்து கொள்ளும் அளவுக்கு எனக்கு திறன் இருக்கிறது. யாரும் குடும்பத்தை கலைக்கவோ என் வாழ்க்கையை நாசம் செய்யவோ முடியாது. நான் சினிமாவுக்காக வாழும் போது நீங்கள் அனைவரும் எனக்கு ஆதரவு அளிப்பீர்கள் என நம்புகிறேன் என்றார்.
மேலும் படிக்க | லேட்டஸ்ட் காதலியுடன் ஜெயம் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..
மேலும் படிக்க | ரவி மோகனுடன் திருமணத்திற்கு வந்த பெண்..யார் இந்த கெனிஷா? முழு தகவல் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ