Kenishaa Francis About Aarti : தமிழில், டாப் நடிகராக விளங்குவர், ரவி மோகன். ஜெயம் ரவி என்று இருந்த தனது பெயரை சமீபத்தில் ரவி மோகன் என மாற்றிக்கொண்டார். தனது மனைவியை பிரிவதாக இவர் அறிவித்த பின்பு, கெனிஷா என்கிற பெண்ணுடன் இவர் சுற்றிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கெனிஷா சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருக்கும் சில பதிவுகள் மக்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளது.
ரவி மோகன்-ஆர்த்தி பிரிவு:
நடிகர் ரவி மோகனுக்கும், ஆர்த்திக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு காதல் திருமணம் நடந்தது. அதன் பிறகு இவர்களுக்கு ஆரவ் மற்றும் அயான் என இரு மகன்களும் பிறந்தனர். இவர்கள் இருவரும் அவ்வப்போது குடும்பத்துடன் போட்டோக்கள் வெளியிடுவதையும், நேர்காணல்களில் காதலுடன் பேசிக்கொள்வதையும் பார்த்து இவர்கள் திருமண வாழ்வில் ஒரு பிரச்சனையில் இல்லை என்று ரசிகர்கள் பலர் நினைத்து கொண்டனர்.
ஆனால், ரவி மோகன் கடந்த ஆண்டு வெளியிட்டிருந்த ஒரு பதிவு அவர்கள் நம்பியிருந்த அனைத்து விஷயங்களையும் தவிடு பொடியாக்கும் வகையில் இருந்தது. ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியை விட்டு பிரிவதாக அதில் அறிவித்து இருந்தார். இதற்கு பின்னால் என்ன காரணம் இருக்கிறது என்பதை இருவரும் கூறவில்லை என்றாலும், ஆர்த்தியின் தாய் ரவி மோகனிடம் டாக்ஸிக்காக நடந்து கொண்டதாகவும், ஆர்த்தி தனது தாய் பக்கம் நின்றதால் விவாகரத்து கொடுக்க ரவி முடிவு செய்ததாகவும் கூறப்பட்டது.
ரவி மோகனின் தோழி..
ரவியின் விவாகரத்து சர்ச்சை ஒரு பக்கம் சென்று கொண்டிருக்க, அப்போது அவரது புகைப்படம் ஒன்றும் வைரலானது. அதில் அவர் கெனிஷா என்ற கோவாவை சேர்ந்த பாடகியுடன் இருந்தார். அவர் ஒரு ஆங்கிலோ இந்திய பெண் என கூறப்படுகிறது. இவர் ஸ்பிரிச்சுவல் தெரபிஸ்ட் ஆகவும் இருக்கிறார். இவரும் ரவி மோகனும் கோவாவில் சந்தித்து கொண்டதாகவும், இவர்களுக்குள் அப்படித்தான் நட்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இது குறித்து சர்ச்சைகள் பரவ ஆரம்பித்த போது, இருவருமே தாங்கள் வெறும் நண்பர்கள்தான் என்று கூறிக்கொண்டனர்.
சமீபத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகளுக்கு திருமணம் நடந்தது. இதில் ரவி மோகன் கெனிஷாவுடன் கலந்து கொண்டார். தோழி என்று சொல்லிவிட்டு, இப்படி அந்த பெண்ணுடன் கைக்கோர்த்து செல்கிறாரே என்று பலர் இவரையும் கெனிஷாவையும் வசைபாடினர்.
ஆர்த்தியின் பதிவு..கெனிஷா பதில்..
ரவி மோகனின் மனைவி ஆர்த்தி, சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில், தனது குழந்தைகளை ரவி மோகன் பார்த்துக்கொள்வதில்லை என்று குறிப்பிட்டிருந்த அவர், தான் வாழும் வீட்டை காலி செய்யுமாறு அவரிடமிருந்து எவிக்ஷன் நாேட்டிஸ் வந்திருப்பதாக தெரிவித்திருந்தார். இதை பார்த்த பலர், கெனிஷாவை ஆன்லைனில் ட்ரோல் செய்தும் திட்டியும் வந்தனர். அதற்கெல்லாம் பதில் கொடுக்கும் வகையில் கெனிஷா தனது இன்ஸ்டா ஸ்டோரிகளை பதிவிட்டு வருகிறார்.
முதலில், “ஒரு ஆண் அவனுக்கு அமைதியை கொடுக்கும் பெண்ணுடன்தான் இருக்க விரும்புவான்” என்ற பதிவை வெளியிட்டார். பின்பு, ஒருவர் ஆர்த்தியை திட்டி கெனிஷாவிற்கு அனுப்பியிருந்த மெசஜையும் ஸ்டாேரியில் பதிவிட்டிருந்தார். தொடர்ந்து, அனைவரும் வாயை மூடுங்கள் என்பது பாேலவும், யார் தன்னை பற்றி என்ன யோசித்தாலும் தனக்கு கவலை இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். அது மட்டுமல்ல, “யாராவது என்னிடம் எதையாவது சொல்ல வேண்டும் என்றால் என் முகத்திற்கு நேராக வந்து சொல்லுங்கள்” என்று ஆர்த்தியை மறைமுகமாக தாக்கியிருந்தார். இவரது இந்த பதிவுகள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க | லேட்டஸ்ட் காதலியுடன் ஜெயம் ரவி! மனைவி ஆர்த்தி வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ