)
Ravi Mohan Kenishaa New Year Celebration : தமிழ் திரையுலகில், முக்கிய நடிகர்களுள் ஒருவராக இருக்கிறார் ரவி மோகன். தன் மனைவியை விட்டு பிரிந்ததை அடுத்து, கெனிஷா என்கிற பாடகியுடன் இவர் நெருக்கம் காட்டி வருகிறார். இந்த நிலையில், 2026 புத்தாண்டை கெனிஷாவுடன் சேர்ந்து ரவி மோகன் வரவேற்றுள்ளார்.
ரவி மோகன் - கெனிஷா உறவு:
நடிகர் ரவி மோகன், ஒன்றரை ஆண்டுக்கு முன்பு தன் மனைவி ஆர்த்தியை விட்டு பிரிவதாக அறிவித்திருந்தார். ஆனால், இவர்கள் தனித்தனியே பிரிந்து வாழ்கிறார்களே தவிர, விவாகரத்து இன்னும் பெறவில்லை. இதற்கிடையில், ரவி மோகன் கோவாவை சேர்ந்த பாடகி கெனிஷா என்பவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியானது. இவர்கள் இருவரும் நெருக்கமாக இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், தங்களுக்குள் அப்படி எதுவுமே இல்லை என்று இருவரும் ஆரம்பத்தில் மறுத்தனர். ஆனால் இப்போது, கதையே வேறாக இருக்கிறது.
கெனிஷாவும் ரவி மோகனும் இப்போது எங்கே சென்றாலும் ஒன்றாகத்தான் செல்கிறார்கள். திருப்பதி கோவிலில் ஒன்றாக சாமி தரிசனம், தீபாவளி பண்டிகை கொண்டாட்டம், பட விழாக்களில் கைக்கோர்த்து நடப்பது என, காதல் ஜோடிகள் பப்ளிக்கில் எப்படி நடந்து கொள்வார்களோ இவர்களும் அப்படியே நடந்து கொள்கின்றனர்.
புத்தாண்டு கொண்டாட்டம்:
2026 புத்தாண்டு பிறந்துள்ளது. இதையடுத்து பிரபலங்கள் பலர் தங்கள் புத்தாண்டை கோலாகலமாக வரவேற்றுள்ளனர். ஒரு சிலர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து புது வருடத்தை தொடங்கியுள்ளனர். அப்படி கோயிலுக்கு சென்ற பிரபலங்களுள் ஒருவராக இருக்கிறார், ரவி மோகன். லக்ஷமி அம்மன் கோயிலுக்கு கெனிஷா மற்றும் பிற நண்பர்களுடன் சென்றிருக்கும் ரவி மோகன், அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அந்த புகைப்படத்துடன் ‘Thank you for the happiest year of my life’ பாடலை இணைத்திருக்கிறார்.
New year click of RaviMohan & Keneeshaa pic.twitter.com/2kiPR8RKEg
— AmuthaBharathi (@CinemaWithAB) January 1, 2026
நெருக்கமாக இருக்கிறார்களே..
தனது மனைவியுடன் என்ன பிரச்சனை என்பது குறித்து ரவி மோகன் சில மாதங்களுக்கு முன்பு ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் கெனிஷாவை, ‘என் வாழ்வில் ஒளி ஏற்றியவர்’ என்று கெனிஷா குறித்து குறிப்பிட்டிருந்தார். ரவி மோகன் இப்படி தெரிவித்திருந்தது, சர்ச்சையானது. ஆனால், இதன் பிறகுதான் இருவரும் க்ளோஸ் ஆனார்கள். ஊடகங்கள், நண்பர்களாக இருந்த இருவருக்குள்ளும் “ஏதோ இருக்கிறது” என பேசப்பேசத்தான் இருவரும் ஒன்றாக வெளி உலகில் வலம் வருகிறார்கள்.
ரவி மோகன், சமீபத்தில் தன் பெயரில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அப்போது மேடையில் கெனிஷாவும் ரவி மாேகனும் ஒருவரை மாற்றி ஒருவர் புகழ்ந்து கொண்டது வைரலானது. இவர்கள் இருவரும் செய்யும் விஷயங்களை பார்க்கும் ரசிகர்கள், இவர்களை பார்த்தால் நண்பர்கள் போல தெரியவில்லை என்கின்றனர்.
ஆர்த்தியின் பதிவு!
ரவி மோகனை பிரிந்து வாழும் அவரது மனைவி ஆர்த்தி, தனது தாய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், கண்டிப்பாக கர்மா யாரையும் சும்மா விடாது என்றும், நீதி-நேர்மைதான் கடைசியில் வெல்லும் என்றும் தெரிவித்து இருக்கிறார். இவர், மறைமுகமாக இந்த பதிவு மூலம் ரவியை தாக்குவதாக பலர் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ