)
ரோபோ சங்கர் இரண்டு நாட்களுக்கு முன்பாக செவ்வாய்கிழமை ஒரு படத்தின் புஜையில் கலந்துக்கொண்டார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கான கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டதாக தெரிவித்து, அவர் இரண்டு நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.
அதன்படி ரோபோ சங்கரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். வெண்டிலேட்டர் உதவியுடன் இருந்து வந்த அவர், நேற்று இரவு திடீரென கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்தார். இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தனது நகைச்சுவையால் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்து வந்தவர் ரோபோ சங்கர். சின்னத்திரையில் கலக்கி, வெள்ளித்திரையிலும் தனது பயணத்தை சிறப்பாக கொண்டு சென்றிருந்த நிலையில், அவர் 46 வயதிலேயே அவர் இறந்தது திரையுலகினரையும், ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
ரோபோ சங்கர் உயிரிழந்ததற்கு மதுதான் காரணம் என பலரும் கூறி வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் இளவரசு ரோபோ சங்கருக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர் சந்திப்பில் ஓர் அதிர்ச்சி தகவலை கூறி உள்ளார். அவர் பேசியதாவது, தம்பி ரோபோ சங்கர் ஒரு நல்ல நண்பர். பொதுவாக ஒரு சினிமா மரணம் என்றாலே அது மதுவின் அடிப்படையில்தான் வந்திருக்கும் என்ற ஒன்று இங்கு இருக்கிறது. ரோபோ சங்கர் முன்பு ரோபோவாக நிறைய கதாபாத்திரங்கள் செய்திருக்கிறார். அப்போ, அவரது உடம் முழுவதும் ஸ்டீல் பெயிண்ட் பூசிக்கொள்வார். நிகழ்ச்சி முடிந்ததும் அந்த பெயிண்ட்டை மண்ணெண்ணெய் வைத்துதான் அதனை நீக்குவார். இப்படி தினமும் செய்தார். ஒரு ஷோவுக்கு ரூ. 300 சம்பளம் வாங்கினார்.
அவருக்கு ஏற்கனவே மஞ்சள்காமாலை நோய்யினால் பாதிப்பட்டு இருந்தார். கேமிக்கல் தொடர்பான வேலைப் பார்ப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தங்களது உடம்பை பார்த்துக்கொள்ள வேண்டும். 46 வயது என்பது மரணத்திற்கான வயது அல்ல. வேறு என்ன சொல்வது. அவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என கூறி அங்கிருந்து புறப்பட்டார்.
தரையுலகினர் இரங்கல்
நடிகர் ரோபோ சங்கர் மாரி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், விஸ்வாசம், புலி என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அவரின் மறைவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன், டி. ராஜேந்தர், எஸ்.ஏ. சந்திரசேகர், சிவக்கார்த்திக்கேயன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் தனுஷ் மற்றும் விஜய் டிவி பிரபலங்கள் என பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ