Sanjeev Reply Vijay Being Scared Of Press : கடந்த மாதம் 27ஆம் தேதி நடிகரும் தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவருமான விஜய் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இது இந்திய அளவில் பெரும் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து, விஜய் இது குறித்து செய்தியாளர்களை சந்திக்க வேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
பத்திரிகையாளர்களை சந்திக்க பயமா?
விஜய், தமிழக வெற்றி கழகம் கட்சியை தொடங்கிய பின்பு கூட செய்தியாளர்களை ஒரு முறையும் சந்தித்து பேசியதில்லை. அனைத்தையும் அறிக்கை வாயிலாகவோ அல்லது வீடியோ வாயிலாகவோ மட்டுமே சொல்கிறார் என்கிற விமர்சனம் அவர் மீது முதலில் இருந்து எழுந்தது. மேடைப்பேச்சுகள், மாநாட்டில் பேசுவது என்பது மட்டும் போதாது பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும் என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்தாகவும் இருந்தது.
கரூர் விவகாரத்தில் 41 பேர் உயிரிழந்த பின்பு, விஜய் சென்னை திரும்புவதற்காக விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவரிடம் உயிரிழப்புகள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் கூற முடியாது என்பது போல் சைகை காண்பித்து விட்டு கிளம்பிவிட்டார். இவரது இந்த செயல் பலருக்கு கோபத்தை வரவழைத்தது. இதனால் அவர் பத்திரிகையாளர்களை சந்திக்க பயப்படுகிறாரா என்கிற கேள்வியும் எழுந்தது.
சஞ்சீவி கொடுத்த பதில்..
சீரியல் நடிகராக இருந்து, சில படங்களில் முக்கிய கதை பத்திரமாகவும் நடித்திருப்பவர் சஞ்சீவ் வெங்கட். இவர் நடிகர் விஜய்யின் மிக நெருங்கிய நண்பர்கள் ஒருவர். விஜய் எங்கு சென்றாலும், என்ன செய்தாலும் இவரிடம் கூறாமல் செய்ய மாட்டார் என்று சினிமா வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.
சஞ்சீவ் வேடுவம் என்கிற வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. அதில் விஜய் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சஞ்சீவிவிடம் செய்தியாளர்கள், “செய்தியாளர்கள் சந்திப்பு நடத்த விஜய்க்கு பயமா?” என்ற கேள்வி கேட்டனர். அதற்கு சில வினாடிகள் யோசித்து விட்டு பதில் சொன்ன சஞ்சீவ், “ஏன்னா, அவருக்கு என்ன பயம்? சரியான நேரம் வரும்போது அவரை செய்தியாளர் சந்திப்பு நடத்துவரா இருக்கும்” என்று பதிலளித்தார். இது குறித்து தவெக-வினரும் விஜய் ரசிகர்களும் பரவலாக இணையத்தில் பேசி வருகின்றனர்.
விஜய் மீதான விமர்சனங்கள்..
விஜய், கரூர் சம்பவத்திற்கு பிறகு வீட்டிற்குள்ளேயே இருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயத்தில் சில நாட்களுக்கு முன்பு அவர் வெளியிட்டிருந்த வீடியோவும் மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது. ஆனால் அதில் அவர், அந்த சம்பவத்திற்காக கொஞ்சம் கூட பொறுப்பேற்று கொள்ளாதது பலரையும் ஏமாற்றமடைய செய்தது.
அவர், கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க போலீஸாரிடம் அனுமதி கேட்டிருப்பதாகவும், அதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இனி, என்ன நடக்கப்போகிறது என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க | விஜய்யை கைது செய்ய வேண்டும்-பதிவிட்ட பிரபல நடிகை! ரசிகர்கள் அட்டாக்..
மேலும் படிக்க | ஹீரோவாகும் இன்பன் உதயநிதி! தந்தை படத்தை இயக்கியவர்தான் இதற்கும் இயக்குநர்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









