நடிகர் ஸ்ரீ-யின் தற்போதைய நிலை! இப்போ எப்படியிருக்காரு? பல நாட்களுக்கு பின் போட்ட பதிவு..

Actor Sri Recent Social Media Post : உடல் நிலை சரியில்லாமல் இருந்த நடிகர் ஸ்ரீ, தற்போது பல நாட்களுக்கு பின் இன்ஸ்டாவில் ஆக்டிவ் ஆகியிருக்கிறார். அவரது பதிவு தற்போது வைரலாகி வருகிறது.  

Written by - Yuvashree | Last Updated : Jun 18, 2025, 07:09 PM IST
  • நடிகர் ஸ்ரீ இப்போ எப்படியிருக்கிறார்?
  • சமீபத்தில் போட்ட இன்ஸ்டா பதிவு..
  • கம்-பேக்கிற்கு தயாரா இருக்காரோ?
நடிகர் ஸ்ரீ-யின் தற்போதைய நிலை! இப்போ எப்படியிருக்காரு? பல நாட்களுக்கு பின் போட்ட பதிவு..

Actor Sri Recent Social Media Post : மாநகரம், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் ஸ்ரீ. திரையுலகில் ஆக்டிவாக இருந்த இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனார். இதையடுத்து, அவரது நிலையை இன்ஸ்டாகிராம் மூலம் தெரிந்து கொண்டு பலர் செலிபிரிட்டிகளை அணுகு உதவி செய்ய கூறினர். இதையடுத்து, அவரது குடும்பத்தினர் அவரை பார்த்துக்கொள்வதாக கூறப்படுகிறது.

மோசமான நிலைக்கு சென்ற ஸ்ரீ!

வழக்கு எண் 18/9 படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் ஸ்ரீ. இவரது முழு பெயர் ஸ்ரீராம். இந்த படத்தில் இருந்து தொடர்ந்து அவர் நடித்த படங்கள் பெரிய ஹிட் அடிக்கவில்லை என்றாலும், கவனம் ஈர்ப்பவையாக இருக்கும். லோகேஷ் கனகராஜ்ஜின் முதல் படமான மாநகரம் படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக இவர் நடித்திருப்பார். அப்படியே ஓநாயும் ஆட்டுக்குட்டியும், வில் அம்பு என சில படங்களில் தோன்றியிருக்கிறார்.  இறுகப்பற்று திரைப்படத்தில்தான் இவரை கடைசியாக பார்க்க முடிந்தது. அதன் பிறகு இவர் எங்கே சென்றார், என்ன ஆனார் என்பது குறித்து யாருக்கும் தெரியவில்லை.

ஸ்ரீயின் இன்ஸ்டாகிராம் போட்டோக்களை பார்க்கையில், அவர் உடல் எடை குறைந்து மெலிந்து இருந்தது தெரிந்தது. தொடர்ந்து, முடியை கலர் செய்தும், அவ்வப்போது ஏதேனும் ரியாக்ஷன் கொடுத்தும் வீடியோ பதிவிட்டு வந்தார். இவர் எங்கிருக்கிறார் என்று தெரியாமல் பலரும் பயந்தனர்.

பாேதை பழக்கமா?

ஸ்ரீயின் இந்த நிலைக்கு காரணம், போதைப்பழக்கம்தான் காரணம் என்று சில யூடியூப் சேனல்கள் தேவையில்லாத சில வதந்திகளை கிளப்பி விட்டனர். ஆனால், இது குறித்து வீடியோ போட்ட ஸ்ரீ, தான் புகைப்பிடிப்பதை விட்டு 1 வருடம் ஆவதாக குறிப்பிட்டிருந்தார்.

லோகேஷ் கனகராஜ்-குடும்பத்தினர் உதவி:

ஸ்ரீ-யை காப்பாற்றுமாரு ரசிகர்கள் அனைவரும் லோகேஷ் கனகராஜ்ஜை டேக் செய்து கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் முதன்முறை இது குறித்து லோகி ஒரு பதிவை வெளியிட்டார். அதில், ஸ்ரீ இப்போது தகுந்த மருத்துவ உதவிகளை பெற்று வருவதாகவும், அதன் படி சமூக வலைதளங்களில் இருந்து தள்ளியிருப்பதாகவும் கூறினார். இதையடுத்து, ஸ்ரீ இணையத்தில் ஆக்டிவாக இல்லை.

கம்-பேக் கொடுத்துள்ளார்!

நடிகர் ஸ்ரீ, கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு பிறகு தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். முன்னர் அவரது தலைமுடி வேறு கலரில் இருந்தது. இப்போது அவரது முடி கருப்பாக இருக்கிறது. கேப்ஷனில், தான் எழுதிய ஆங்கில நாவலான “May Eye Come In" எனும் புத்தகத்தை வெளியிட்டிருப்பதாகவும், இதன் லிங்க் பயோவில் இருக்கிறது என்றும் பதிவிட்டிருக்கிறார்.

ரசிகர்கள் ஆர்வம்:

ஸ்ரீ இப்படி பல நாட்களுக்கு பிறகு பதிவிட்டு இருப்பது, ரசிகர்களின் ஆர்வத்தை தோண்டியிருக்கிறது. பலர் “என்னன்னா கம்-பேக் கொடுக்க போரியா?” என்று கேட்டு வருகின்றனர். இன்னும் சிலர் “இப்போது எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேள்வி கேட்டு வருகின்றனர். 

மேலும் படிக்க | நடிகர் ஸ்ரீ குறித்து முதன்முறையாக அறிக்கை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்! என்ன சொன்னார்?

மேலும் படிக்க | ஆளே மாறிப்போன பிரபல நடிகர் ஸ்ரீ! இதுதான் காரணமா? அவரே போட்டிருக்கும் பதிவு..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News