சிம்பு X வெற்றிமாறன் படத்தின் டைட்டில் இதுதான்! லீக் ஆன தகவல்..

Silambarasan Vetrimaaran Movie Title : சிலம்பரசன்-வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வரும் படத்தின் டைட்டில் குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது.  

Written by - Yuvashree | Last Updated : Jun 18, 2025, 12:05 PM IST
  • சிம்பு X வெற்றிமாறன் இணையும் படம்
  • டைட்டில் லீக் ஆனது
  • வட சென்னை படத்தில் இணைக்கதையா?
சிம்பு X வெற்றிமாறன் படத்தின் டைட்டில் இதுதான்! லீக் ஆன தகவல்..

Silambarasan Vetrimaaran Movie Title : தமிழ் திரையுலகின் ஸ்டார் நடிகராக திகழ்பவர், சிலம்பரசன். இவரை வைத்து வெற்றிமாறன் தற்போது ஒரு படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் குறித்த தகவல்கள் சமீபத்தில் வெளியானது.

சிம்பு X வெற்றிமாறன் கூட்டணி:

தன் படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் ஹிட் இயக்குநராக வலம் வருகிறார், வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, விடுதலை என்று பல வெற்றி படங்களை கொடுத்திருக்கும் இவர், தற்போது சிம்புவுடன் கைக்கோர்த்து ஒரு படத்தில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் புகைப்படம் நேற்று லீக் ஆனது.

வெற்றிமாறன்-சிம்புவின் படம் குறித்த இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு புகைப்படம் இணையத்தில் லீக் ஆனது. இதில் சிம்புவிற்கு புதிதாக கெட்-அப் போடப்பட்டு டெஸ்ட் ஷூட் செய்யப்பட்ட போதுதான் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

படத்தின் பெயர்:

எந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படுவதற்கு முன்பும், படத்தின் டைட்டில் நிர்ணயிக்கப்படும். அல்லது, அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய சில மாதங்களுக்கு பிறகு டைட்டில் வைக்கப்படும். இன்னும் உறுதி செய்யப்படாத சிம்பு-வெற்றிமாறனின் படத்திற்கு ‘ராஜன் வகையரா’ என்று டைட்டில் வைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் சிம்பு, லுங்கி மற்றும் கட்டம் போட்ட டீ-ஷர்ட் அணிந்து கொண்டு இருந்த புகைப்படம் வைரலானதை தொடர்ந்து, பலர் AI உபயோகித்து, இந்த படத்திற்குறிய ஒரு போஸ்டரையும் கிரியேட் செய்திருக்கின்றனர். தற்போது சில ரசிகர்கள் இந்த தகவல் ஒரு வேளை உண்மையாக இருக்குமோ என்று ரசிகர்கள் சந்தேகிக்க ஆரம்பித்து இருக்கின்றனர்.

வட சென்னை யுனிவர்ஸ்?

ஹாலிவுட்டில் ஒரு படத்திற்கும் இன்னொரு படத்திற்கு தொடர்பு இருப்பது போல தமிழிலும் யுனிவர்ஸ் கான்செப்ட் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை LCU என்ற பெயரில் ஆரம்பித்தார். இப்போது வட சென்னைக்கும் அப்படியொரு யுனிவர்ஸ் கான்செப்ட் வர இருப்பதாக கூறப்படுகிறது. அதன் கீழ்தான் தற்போது சிம்பு X வெற்றிமாறனின் படமும் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து படக்குழுவின் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வட சென்னை 2 அப்டேட்:

2017ல் வெளியான வட சென்னை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் அப்டேட் கேட்டு வந்தனர். குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ், அடுத்த வருடம் படம் வரும் என்று கூறியிருக்கிறார். அதே பாேல, வெற்றிமாறனும் நேற்று ஒரு விழாவில் வட சென்னை 2 படம் குறித்த அப்டேட்டை கொடுத்திருக்கிறார்.

சிம்புக்கு தக் லைஃப் கை கொடுத்ததா?

சிலம்பரசன், நீண்ட நாட்களாக வேலை பார்த்து வந்த படம், தக் லைஃப். கமலுக்கு இணையான கதாப்பாத்திரத்தில் மணிரத்னமின் இந்த படத்தில் அவர் அமர் என்கிற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். பல கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படத்திற்கு நெகடிவ் விமர்சனம் பரவிய நிலையில், பாசிடிவாக பேசப்பட்டது சிம்பு மற்றும் கமலின் நடிப்பு மட்டும்தான். தற்போது இந்த படத்திற்கு பிறகு, அவரது சினிமா வாழ்க்கை ஏற்றம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

வெற்றிமாறனுக்கு, கடைசியாக விடுதலை பாகம் 2 படம் வெளியானது. இதில், விஜய் சேதுபதியின் கதை காண்பிக்கப்பட்டிருந்தது. முதல் பாகம் அளவிற்கு இந்த பாகம் இல்லை என்று விமர்சனங்கள் வந்தாலும், இது ஓரளவிற்கு ஹிட் அடித்தது.

மேலும் படிக்க | வட சென்னை 2 கன்ஃபார்ம்! ஆனா ஹீரோ தனுஷ் இல்லை..அவருக்கு பதில் நடிப்பவர் யார் தெரியுமா?

மேலும் படிக்க | வட சென்னை படத்தில் தனுஷுக்கு பதில் ஹீரோவாக நடிக்க வேண்டியவர்! யார் தெரியுமா?

மேலும் படிக்க | சிம்பு-வெற்றிமாறன் படத்தில் சர்ப்ரைஸ்! கேமியோ ரோலில் 3 முக்கிய பிரபலங்கள்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News