)
Silambarasan TR In Vallalar Temple : தமிழ் திரையுலகில் முக்கிய நடிகர்களுள் ஒருவராக இருப்பவர், சிலம்பரசன். இவர், சமீபத்தில் வடலூரில் இருக்கும் வள்ளலார் கோயிலுக்கு சென்று அங்கு இருப்பவர்களுக்கு உணவு பரிமாறினார்.
அரசன் படம் அறிவிப்பு!
வெற்றிமாறன் மற்றும் சிலம்பரசன் கூட்டணியில் புதிய படத்தின் பெயர் இன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. சொன்னது போலவே, படத்தின் போஸ்டரும் வெளியிடப்பட்டது. சிம்புவின் 49வது படத்திற்கு ‘அரசன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம், வடசென்னை படத்தின் யுனிவர்ஸில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே போல, இது அந்த யுனிவர்ஸில் ஒன்றுதான் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வடலூரில் சிலம்பரசன்!
நடிகர் சிலம்பரசன் கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள வள்ளலார் கோவிலில் தரிசனம் செய்தார். படத்தின் பெயர் வெளியாகும் அதே நேரத்தில் அவர் இங்கு தரிசனம் செய்து கொண்டிருந்தார். வள்ளலாரை வழிபட்ட அவர் அணையா அடுப்பு, தர்ம சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டார். இங்கு வழிபாடு செய்து கொண்டிருக்கும் போதே அந்த படத்தின் பெயர் ‘அரசன்’ என தயாரிப்பு நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வெஜ்-ஆக மாறிவிட்டாரா?
சிம்பு, வடலூர் வள்ளலார் கோயிலுக்கு சென்ற போது, அங்கு எடுக்கப்பட்ட அவரது வீடியோ ஒன்று வைரலானது. அதில் ஒருவர் அவரிடம் தயங்கி தயங்கி அவர் சாப்பிடும் உணவு குறித்து கேட்டிருந்தார். அதற்கு சிம்பு, “சைவம் இல்லன்னா வருவேனா?” என்று கூறினார். அதற்கு அருகில் இருந்தவர், “எனக்கு உங்களின் ஆன்மிகம் குறித்து அனைத்தும் தெரியும். இருந்தாலும், மனதில் நெருடலுடன்தான் அது பற்றி உங்களிடம் கேட்டேன்..” என்றார்.
"I came as a vegetarian only. I want to feed food for people and children who are in needy, that's why I came here. Vallalar has the same thought as like me before 100/200 Yrs"
— AmuthaBharathi (@CinemaWithAB) October 7, 2025
- #SilambarasanTR at Vadalur Vallalar Templepic.twitter.com/M3KCzMXDc4
“சைவம் சாப்பிடுபவனாகத்தான் இங்கு வந்தேன். மக்களுக்கும் குழந்தைக்கும் சாப்பாடு போட வேண்டும் என்றுதான் இங்கே வந்திருக்கிறேன். நான் இப்படி யோசித்ததை, ஒருவர் 100-200 வருடத்திற்கு முன்னரே யோசித்திருக்கிறார்” என்று கூறினார்.
இந்த வீடியோ வைரலானதை அடுத்து, சிம்பு சைவமாக மாறிவிட்டாரா, அல்லது அவர் கொண்டு வந்து கொடுத்த உணவு சைவமா இல்லையா என்று கூறினாரா என்பது குறித்த கேள்வி எழுந்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ