Silambarasan To Act In Cricket Player Biopic : கோலிவுட் திரை உலகில் பலருக்கும் பிடித்த முன்னணி நடிகராக வலம் வருகிறார் சிலம்பரசன். இவர் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்திற்கு வீரரின் பயோபிக் எடுக்கப்பட்டால் அதில் அவர் கதாபாத்திரத்தில் நடிக்க சிம்பு சரியான பொருத்தமாக இருப்பார் என்று கூறப்படுகிறது. ரசிகர்கள் குறிப்பிட்ட அந்த கிரிக்கெட் விளையாட்டு வீரர் யார் தெரியுமா?
சிம்புவின் படங்கள்..
கமல்ஹாசன் போல, குழந்தையாக இருக்கும்போதில் இருந்து, நடித்து வரும் ஹீரோக்களில் ஒருவர் சிம்பு. குழந்தையாக இருந்த போது தனது தந்தையின் படங்களில் சுட்டி பையனாக குழந்தை நட்சத்திரமாக தோன்றி பலரைக் கவர்ந்திருக்கிறார். இளம் வயதான பிறகு ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். சிம்புவின் துரு துரு செயல்கள் பலரை இவரது ரசிகர்கள் ஆக்கியது.
காதல் கிசுகிசுக்கள், படப்பிடிப்பிற்கு தாமதமாக வருவது, நடிகர் சங்கத்தால் வழங்கப்பட்ட ரெட் கார்ட் என சிம்பு பல்வேறு இன்னல்களையும் சந்தித்திருக்கிறார். ஆனால், அது எதுவுமே அவரை முடக்கி போட்டது கிடையாது. கொரோனா ஊரடங்குக்கு முன்பு, வெயிட் போட்ட சிம்பு அதன் பிறகு கடும் முயற்சி செய்து உடல் எடையை குறைத்தார்.
மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், “இனிமே நான் என்ன பண்றேன்னு மட்டும் பாருங்க” ” என்று இவர் பேசியது, இவரது சினிமா கம்-பேக்கை குறிப்பிடுவதாக இருந்தது. சொன்னது போலவே வரிசையாக பல படங்களில் கமிட்டான சிம்பு, இப்போது அதன் ரிலீசாக காத்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் கமல்ஹாசன் உடன் முதன் முறையாக தக் லைப் எனும் படத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் நடித்திருக்கிறார்.
கிரிக்கெட் வீரரின் பயோபிக்..
வழக்கமாக, இந்திய கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை, திரைப்படமாக மாறுவது உண்டு. தோனி, கவாஸ்கர், சச்சின் உள்ளிட்ட பல்வேறு கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை திரைப்படமாக மாறி இருக்கிறது. அப்படி பிரபலமாக இருக்கும் ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையும் பயோபிக்காக மாறினால் அதில் தான் நடிக்க விரும்புவதாக நடிகர் சிம்பு தெரிவித்திருக்கிறார்.
யார் இந்த கிரிக்கெட் வீரர்?
அவர் வேறு யாரும் இல்லை, உலகம் முழுக்க பல கோடி ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கும் விராட் கோலிதான். ரன் மிஷின், ஆக்ரோஷமான விளையாட்டு வீரர் என்று பல்வேறு பட்ட பெயர்களை பெற்றவர், விராட் கோலி. சமீபத்தில் இவர் ஐபிஎல் அணியான, ஆர்சிபி அணிக்கான நேர்காணலில் கலந்து கொண்டார். சிம்பு நடிப்பில் பத்து தல படத்தில் இடம்பெற்றிருந்த “நீ சிங்கம்தான்” பாடல் தனது ரிசென்ட் பேவரட் பாடல் என்று கூறியிருந்தார். இதற்கு சிம்புவும் நன்றி தெரிவித்திருந்தார்.
இவரது பயோ-பிக் எடுக்கப்பட்டால், அதில் நடிகர் சிம்பு விராட் கோலியாக நடிக்க ஏற்றவராக இருப்பார் என்று சிலர் கூறி வருகின்றனர். அப்படி விராட்டின் திரைப்படம் உருவானால், அதில் சிம்பு நடிக்கிறாரா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க | கைவிடப்படும் இளையராஜாவின் பயோபிக் படம்? வெளியான லேட்டஸ்ட் தகவல்!
மேலும் படிக்க | சிம்புவின் அடுத்த படத்தில் 2 ஹாட் நாயகிகள்! இவங்கள பசங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ