எனக்கு இது ஒரு கனவு போல் இருக்கிறது - தக் லைஃப் விழாவில் சிம்பு பேச்சு!

மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள தக் லைஃப் படத்தின் முதல் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

Written by - RK Spark | Last Updated : Apr 19, 2025, 02:07 PM IST
  • ஜூன் மாதம் வெளியாகும் தக் லைஃப்.
  • முதல் பாடல் தற்போது வெளியாகி உள்ளது.
  • கமல், சிம்பு நடித்துள்ளனர்.
எனக்கு இது ஒரு கனவு போல் இருக்கிறது - தக் லைஃப் விழாவில் சிம்பு பேச்சு!

கிட்டத்தட்ட 38 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் மற்றும் மணிரத்தினம் கூட்டணியில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. ஜூன் மாதம் படம் வெளியாக உள்ள நிலையில் படத்தில் இருந்து முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. தக் லைஃப் படத்தில் கமல்ஹாசன் தவிர சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, ஜோஜூ ஜார்ஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது. மேலும் சிம்பு மற்றும் கமல்ஹாசன் ஒரே படத்தில் நடிப்பதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது.

மேலும் படிக்க | கில்லி vs தளபதி: ரீ-ரிலீஸில் மாஸ் காட்டிய படம் எது? வசூல் யாருக்கு அதிகம் தெரியுமா?

சென்னையில் பட விழா

தக் லைஃப் படத்தின் முதல் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய சிலம்பரசன்,"மிகவும் மகிழ்ச்சியான தருணமாக உள்ளது. இது எனக்கு ஒரு கனவு போல் தோன்றுகிறது. மணிரத்தினம், ஏ ஆர் ரகுமான், கமல்ஹாசன் இவர்களெல்லாம் எனது குரு. இவர்களுடன் நானும் இருப்பது கனவு போல் தான் இருக்கிறது. மணி சார் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்துள்ளேன். அப்போது அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். இந்த படத்திலும் இன்னும் கூடுதல் விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளேன். நான் சிறுவயதில் இருந்தே நடித்து வருகிறேன். மணிரத்தினம் சார் என்னை நல்ல படியாக பார்த்துக் கொண்டார்.

இந்த படத்தில் நடித்தது ஒரு நம்ப முடியாத அனுபவமாக உள்ளது. எனக்கான இடத்தை கமல் சாரும் மணிரத்தினம் சாருடன் கொடுத்தனர். ஒரு ரசிகனாக இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பில் உள்ளேன். விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு இப்படி ஒரு வித்தியாசமான படத்தில் திரிஷாவுடன் இணைந்து நடித்துள்ளேன். கமல் சாருடன் நடிப்பது மிகவும் கடினமான விஷயம், அதுவும் மணிரத்னம் சார் இயக்கத்தில் நடிப்பது இன்னும் கூடுதல் கடினம். இருவரின் நடுவில் நிற்பதே எனக்கு ஒரு பாக்கியமாக இருந்தது. இவர்கள் இருவரையும் பார்த்து நிறைய விஷயம் கற்றுக் கொண்டேன். இப்படி ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்ததற்கு கடவுளுக்கு நன்றி கூறுகிறேன். இருவரும் ஒவ்வொரு விஷயத்தையும் கண்களாலேயே பேசிக்கொள்வார்கள். கமல் சார் மிகப்பெரிய டான்சர். இந்தப் பாடலிலும் சிறப்பாக நடனமாடியுள்ளார் என்று சிம்பு பேசியுள்ளார்.

மேலும் படிக்க | சச்சின் படத்தில் ஜெனிலியாவுக்கு வாய்ஸ் கொடுத்த நடிகை! யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News