)
Sivakarthikeyan Third Son Photo Viral: தமிழ் திரையுலகின் முக்கிய நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். கடந்த 10 வருடங்களில் அசுர வளர்ச்சி கண்ட ஹீரோக்களும் ஒருவராக இவர் இருக்கிறார். இந்த நிலையில், தற்போது தனது மூன்றாவது மகனின் போட்டோவை இவர் வெளியிட்டுள்ளார்.
தனது முறைப்பெண்ணையே சினிமாவிற்கு வருவதற்கு முன்பு திருமணம் செய்து கொண்ட சிவகார்த்திகேயன், அதன் பின்புதான் திரையுலகில் கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்தார். சிவகார்த்திகேயன்-ஆர்த்தி தம்பதியனருக்கு ஆராதனா என்ற முதல் பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து சில வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு குகன் என்ற மகன் பிறந்தான். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் தங்களுக்கு மூன்றாவது மகன் பிறந்திருப்பதாக சிவகார்த்திகேயன் அறிவித்திருந்தார். இந்த குழந்தைக்கு இவர்கள் ‘பவன்’ என்று பெயரிட்டு இருந்தனர்.
இந்நிலையில் தற்போது தனது மூன்றாவது மகன் பவனின் முதலாம் ஆண்டு முன்னிட்டு ஸ்பெஷல் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
இதனிடையே நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படத்திற்கு பிறகு இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்று, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் மதராசி திரைப்படம். சிவகார்த்திகேயனின் 23வது படமான இது, ஆக்சன் திரில்லர் பானையில் உருவாகி வருகிறது. இந்தப் படத்துடன் சிவகார்த்திகேயன் கமிட்டாகி பணியாற்றி வரும் படம், பராசக்தி. இந்த படத்தை, சுதா கொங்கரா இயக்கி வருகிறார். இதில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடிக்கிறார். முக்கிய கதை பாத்திரங்களாக அதர்வா, ஸ்ரீலீலா நடிக்க, நெகட்டிவ் கேரக்டரில் ஜெயம் ரவி வருகிறார்.
இதற்கு பிறகு சிவகார்த்திகேயன் அடுத்ததாக தனது நண்பரும் இயக்குனருமான அட்லீயுடன் கைகோர்க்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் சமீபத்தில் சந்தித்துக் கொண்டதாகவும், இவர்கள் இணைந்து பணியாற்ற வாய்ப்புள்ளதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், அடுத்ததாக டான் படத்தின் இயக்குநரான சிபி சக்கரவத்தியின் ஒரு படத்தில் கமிட் ஆக இருப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால், இது பேச்சுவார்ததைக்கு மேல் செல்லவில்லை என்றும், அடுத்ததாக அவர் குட் நைட் படத்தின் இயக்குநரான விநாயக் ரவிச்சந்திரனுடன் ஒரு படத்தில் இணைவதாகவும் கூறப்படுகிறது. இதில் எது உண்மை என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ