ஒருவழியாக ஓடிடியில் வெளியாகிறது மாமன்.. எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்?

Maaman OTT Release On This Date: சூரிக்கு ஒரு புதிய அடையாளத்தை கொடுத்துள்ள மாமன் திரைப்படம், இந்த தேதி ஓடிடியில் வெளியாகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 27, 2025, 08:13 PM IST
  • ஜூன் 27 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் மாமன்
  • படத்தின் சாட்டிலைட் உரிமம்
  • ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
ஒருவழியாக ஓடிடியில் வெளியாகிறது மாமன்.. எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்?

Maaman OTT Release Date: மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள மாமன் திரைப்படம், தற்போது கூடிய விரைவில் ஓடிடியில் வெளியாகிறது. எனவே எந்த தளத்தில் எப்போது படத்தை காணலாம் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்.

விடுதலை திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சூரி. இந்த படத்திம் அவருக்கு ஏற்றம் கொடுத்ததை தொடர்ந்து, கொட்டுக்காளி படத்திலும் ஹீரோவாக நடித்தார். இப்போது அவரே எழுதிய கதைதான் மாமன். இந்த படத்தை, பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கினார்.

மாமன் திரைப்படம், குடும்ப பின்னணி கொண்ட படமாக எடுக்கப்பட்டிருக்கிறது. இதில், சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கிறார். இதில், சூரிக்கு சகோதரியாக ஸ்வாசிகா நடித்திருக்கிறார். மேலும் ராஜ்கிரண், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தாய் மாமனுக்கும் குழந்தைக்கும் இடையே இருக்கும் பந்தத்தை வைத்து உருவான படம் இது. இதில், ராஜ் கிரணும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். 'மாமன்' திரைப்படம், கடந்த மே 16 ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. 

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய மாமன் திரைப்படம் தற்போது டிஜிட்டல் தளங்த்தில் வெளியாக ரெடியாக உள்ளது. அதன்படி ஜீ தமிழ் தொலைக்காட்சி படத்தின் சாட்டிலைட் உரிமைகளைப் பெற்றுள்ளதாகவும், Z5 (முன்னர் ஜீ5 என அறியப்பட்டது) ஸ்ட்ரீமிங் உரிமைகளைப் பெற்றுள்ளதாகவும் சமீபத்தில் படத்தின் நாயகன் சூரி தெரிவித்து இருந்தார். அந்த வகையில் ஜூன் 20 ஆம் தேதி ஒடிடி தளத்தில் வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால் இந்த வாரமும் மாமன் படம் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் கூடிய விரைவில் ஜீ5 ஓடிடி தளத்தில் மாமன் படம் வெளியாகும் என கூறப்படுகிறது.

இன்பா மற்றும் ரேகா என்ற தம்பதியினரின் காதல் மற்றும் திருமணத்தைச் சுற்றி பின்னப்பட்டு கதை தான்  'மாமன்' படம். இவர்களின் உறவில் ஏற்படும் சிக்கல்கள் மற்றும், தனது இளம் மருமகன் லட்டு மீது வைத்திருக்கும் ஆழமான பாசம், கணவன் மனைவி உறவில் ஏற்படும் விரிசல் போன்ற பல கலவைகளை கொண்டது தான் மாமன். இந்த படம் இறுதி வரை பல எமோஷனல் பிரிவை கொண்டுள்ளது.

மேலும் படிக்க | அரசியலுக்கு வரும் முன்பே..அரசியல் பேசிய விஜய்யின் பாடல்கள்! அத்தனையும் சூப்பர் ஹிட்

மேலும் படிக்க | தக் லைஃப் படத்தால் லாபமடைந்த ஒரே ஆள்! கமல், மணிரத்னம் இல்லை-யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News