மண்டாடி என்றால் என்ன? சூரி ஹீரோவாக நடிக்கும் அடுத்த படம் இதுதான்!

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் 16வது தயாரிப்பாக உருவாகும் “மண்டாடி" படத்தில் சூரி ஹீரோவாக நடிக்க, மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் Sports Action Drama படமாக உருவாகிறது.

Written by - RK Spark | Last Updated : Apr 20, 2025, 01:00 PM IST
  • சூரி நடிக்கும் புதிய படம்.
  • மதிமாறன் இயக்கத்தில் உருவாகிறது.
  • விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.
மண்டாடி என்றால் என்ன? சூரி ஹீரோவாக நடிக்கும் அடுத்த படம் இதுதான்!

பிரபலமான தயாரிப்பு நிறுவனமான ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட், திரு எல்ரெட் குமார் தலைமையில், தனது 16வது தயாரிப்பு முயற்சியாக “மண்டாடி” எனும் புதிய திரைப்படத்தை உருவாக்குவதை பெருமையுடன் அறிவிக்கிறது. உணர்வும் உறுதியும் கலந்த, ஆழமான கதையுடன் கூடிய இந்த விளையாட்டு ஆக்‌ஷன் டிராமா திரைப்படம், பாரம்பரிய சூழலோடு எதிர்பார்ப்புகளை தூண்டும் படமாக அமையவிருக்கிறது. “செல்ஃபி” என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டைப் பெற்ற இயக்குநர் மதிமாறன் புகழேந்தி, இப்படத்தையும் எழுதி இயக்குகிறார். கடந்த படத்தை விட பெரிய களம் மற்றும் ஆழமான உணர்வுகளை மையமாகக் கொண்டு இந்த படத்தில் களம் இறங்கி இருக்கிறார்.

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | 200 கோடி ரூபாயை வேண்டாம் என்று உதறித் தள்ளிய நடிகை சமந்தா! ஏன் தெரியுமா?

இப்படத்தில்  கதாநாயகனாக சூரி நடிக்கவுள்ளார். கதையம்சம் கொண்ட  திரைப்படங்களில் தனது நடிப்புத்திறனை நிரூபித்து வரும் அவர், இப்படத்தினால் மேலும் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்வார். இப்படத்தின் மூலம் தெலுங்கு நடிகர் சுஹாஸ் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார், இதனால் படம் தெற்கிந்தியாவில் பரந்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.கதா நாயகியாக மஹிமா நம்பியார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சத்யராஜ், ரவீந்திரா விஜய், அசுத் குமார், சாச்சனா நமிதாஸ் ஆகியோர் தங்களது திறமையான நடிப்பின் மூலம்  உணர்வுப்பூர்வான இந்த கதைக்கு பலமளிக்க போகின்றனர்.

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி படத்தை பற்றி கூறியதாவது, “எனது கனவைப் புரிந்து கொண்டு, என் கதையை கேட்பதற்கு, இந்த வாய்ப்பை அளித்த எல்ரெட் சார் மற்றும் வெற்றிமாறன் சார்க்கு நான் மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறேன். சூரி sirன் காமெடியன் to கதாநாயகன் நடிப்பு என்னை வெகுவாக கவர்ந்தது. அவருக்கென்று எழுதப்பட்ட இந்த கதாபாத்திரம் எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது. சூரி சாரின் விஷன் மற்றும் அவர் கதை தேர்ந்தெடுக்கும் விதம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ‘மண்டாடி’ திரைப்படம் அவருடைய நடிப்பு வாழ்க்கையில் ஒரு முக்கியமான படியாக அமையும். மேலும் இந்த கதையில் வரும் கதாபாத்திரத்திற்கு வெறும் நடிப்பு மட்டும் போதாது. கூடவே ஒரு நடிகரின் உடல் மற்றும் மன வலிமையும் அதிகம் தேவைப்பட்டது. அதை சூரி sir போன்றவர்களால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும். வெற்றிமாறன் sir, படத்தின் கிரியேட்டிவ் புரொட்யூசராக இருக்கின்றது எனக்கு ஒரு ஊக்கமும் வழிகாட்டுதலுமாக இருக்கிறது. ஜி.வி. பிரகாஷ் இசையும், எஸ்.ஆர். கதிர் அவர்களின் ஒளிப்பதிவும் சேர்ந்து, உண்மையான உணர்வுகளைத் தரும் விளையாட்டு ஆக்‌ஷன் படமாக உருவாகிக்கொண்டு வருகிறது” என்றார்.

மண்டாடி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏப்ரல் 19ஆம் தேதி ஊடகங்களின் முன்னிலையில் மிக விமர்சையாக வெளியிடப்பட்டது. அதன் தாக்கம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் look test  முடிந்த கையோடு pre production பணிகளுக்காக பட குழு ராம்நாடு சுற்றியுள்ள கடற்கரை பகுதிகளில் குழுமி இருக்கிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது. காதல், விடாமுயற்சி, மீட்பு மற்றும் உறவுகளின் பின்னணியுடன் விளையாட்டு உலகத்தை மையமாகக் கொண்ட உணர்ச்சிப்பூர்வமான பயணமாக, இது உருவாகிறது. பத்திரிகையினருக்காக “மண்டாடி” படக்குழுவால் தயாரிக்கப்பட்ட படகுப் பந்தய உலகம் குறித்த ஒரு ஆவண வீடியோ வெளியிடப்பட்டது. அதில் உள்ள டிராமா, இப்படத்தின் வித்தியாசமான பின்னணியைக் காட்டியது.

மண்டாடி என்றால் என்ன?

காற்றையும், அலையையும், கடல் நீரோட்டத்தையும் நன்கு கணித்து, மீன்களின் வரத்தையும் அவற்றின் திசைவழிப் போக்கையும் பற்றிய நல்ல அறிவையும்  அனுபவத்தையும் பெற்ற ஒருவர், மீன்பிடிக்கச் செல்லும்போது படகை வழிநடத்தக்கூடிய தலைமை நிலையில் இருப்பார். அவரையே இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் மண்டாடி என்று அழைக்கின்றனர். மீன்பிடிக்கப் போகும் போது படகையும் உடன் வரும் மீனவர்களையும் வழிநடத்துவதைப் போல,பாய்மரப் படகுப் போட்டியின் போதும் வழிநடத்தக்கூடியவர் மண்டாடி. மண்டாடி விரைவில் வருகிறது.  ஆவலுடன் காத்திருக்குங்கள்!

மேலும் படிக்க | சமந்தாவின் புன்னகையின் மறுபக்கம்..இதன் பின்னணி தெரிந்தால் நீங்களும் ஆச்சரியப்படுவீர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News