Actor Srikanth Drug Case Punishment : பிரபல நடிகர் ஸ்ரீகாந்த், பாேதை பொருள் வழக்கில் சிக்கியிருக்கிறார். இவருக்கு சிறை தண்டனை கிடைத்தால், எத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்?

Actor Srikanth Drug Case Punishment : 2000 காலக்கட்டங்களில் வந்த படங்களில், பல வெற்றி படங்களை கொடுத்த ஹீரோவாக இருக்கிறார் ஸ்ரீகாந்த். சமீப காலமாக மார்கெட் இழந்த அவர், தற்போது போதை பொருள் வழக்கில் சிக்கியிருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
ஸ்ரீகாந்த்:
தமிழில் ஹிட் ரொமாண்டிக் படங்களை கொடுத்த ஹீரோக்களுள் ஒருவராக இருக்கிரார், ஸ்ரீகாந்த். கனா கண்டேன், பார்த்திபன் கனவு, ரோஜா கூட்டம் என பல படங்களில் நடித்த இவர், விஜய்யுடன் ஷங்கர் இயக்கத்தில் நண்பன் படத்திலும் நடித்திருக்கிறார். தமிழ் மொழியில் மட்டுமல்லாது, தெலுங்கு மொழியிலும் சில படங்களில் நடித்திருக்கிறார்.
ஆரம்பத்தில் பல ஹிட் படங்களில் நடித்திருக்கும் அவர், கடந்த சில ஆண்டுகளில் பெரிய படங்கள் எதிலும் நடிக்கவில்லை. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களில் மட்டும் ஹீரோவாக நடித்து வந்தார்.
போதை பொருள் வழக்கில் சிக்கினார்:
அதிமுக உறுப்பினர் பிரசாத் என்பவர், அடிதடி வழக்கு ஒன்றில் போலீசாரின் பிடியில் சிக்கினார். அப்போது அவரை விசாரணை நடத்திய போலீஸார் ஸ்ரீகாந்திற்கும் இந்த பிரசாத் என்பவர் போதை மருந்துகள் கொடுத்திருப்பதை தெரிந்து கொண்டனர். இதையடுத்து, கடந்த திங்கட்கிழமை அன்று ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். அவரது ரத்த மாதிரிகளை பரிசோதித்த போது, அவர் போதை மருந்துகளை உட்கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து வரும் ஜூலை 7ஆம் தேதி வரை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
விசாரணையில் நடிகர் ஸ்ரீகாந்த், தனக்கு போதை மருந்து பழக்கம் எப்படி வந்தது என்பது குறித்தும் வாக்குமுலம் கொடுத்திருக்கிறார். தான் நடித்த ஒரு படத்தில் பிரசாந்த் இணை தயாரிப்பாளராக இருந்ததாகவும், அப்போது தான் சம்பளம் கேட்ட போதெல்லாம் கொக்கைன் கொடுத்து தன்னை பழக்கப்படுத்தியதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
தண்டனை என்ன?
இந்தியாவை பொறுத்தவரை, போதை பழக்கத்திற்கும் போதை பொருள் பயன்பாட்டு மற்றும் விற்பனைக்கும் எதிரான சட்டங்கள் கடுமையாக உள்ளன. இதில், எவ்வளவு போதை பொருட்களை கைவசம் வைத்திருந்தனர், இவர்கள் முதல்முறை இதனை பயன்படுத்துகின்றனரா, தனிப்பட்ட பயன்பாட்டிற்காக போதை பொருட்களை வாங்கினார்களா என்பது போன்ற வெவ்வேறு வகைகளை வைத்து தண்டனைகள் மாறுபடும்.
ஸ்ரீகாந்தை பொறுத்தவரை, அவருக்கு தண்டனை கடுமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. காரணம், அவர் கைவசம் இருந்த சில கிராம் அளவிலான போதை மருந்துகளும் பறிமுதல் செய்ய்யப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்லாமல், இவர் திரை உலகை சேர்ந்தவர்களுக்கும் இந்த போதை மருந்துகளை விற்றிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எனவே இவருக்கு அபராத தொகை விதிக்கப்படுவதோடு, 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த போதைப்பொருள் வழக்கில் ஸ்ரீகாந்துடன் சேர்ந்து நடிகர் கிருஷ்ணாவின் பெயரும் சிக்கியிருக்கிறார். அதிமுக உறுப்பினர் பிரசாத், கிருஷ்ணாவிற்கும் போதைப்பொருள் விற்றதாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். அவர் ஊரில் இல்லாததால் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இப்போது அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப்பில் இருப்பதாலும், அவர் தலைமறைவாகி இருப்பதாலும் அவை பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ