தப்பு பண்ணிட்டீங்களே சூர்யா..அடுத்த படமும் தோல்வியா? வெளியான தகவல்..

Suriya To Join Hands With Studio Green Next Film : நடிகர் சூர்யா, தனது படம் குறித்த சமீபத்தில் எடுத்திருக்கும் முடிவை கேள்விப்பட்ட ரசிகர்கள், கோபத்தில் கொதித்து வருகின்றனர். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.  

Written by - Yuvashree | Last Updated : May 16, 2025, 04:14 PM IST
  • சூர்யா எடுத்த தவறான முடிவு..
  • மீண்டும் மீண்டுமா?
  • அப்படி என்ன செய்தார்?
தப்பு பண்ணிட்டீங்களே சூர்யா..அடுத்த படமும் தோல்வியா? வெளியான தகவல்..

Suriya To Join Hands With Studio Green Next Film : தமிழ் திரையுலகில், டாப் லைன் நடிகர்களுள் ஒருவராக விளங்குகிறார் சூர்யா. ஆனால், இவர் நடித்த படங்கள் என்னவாே, டாப் லிஸ்டில் வர தவறி வருகிறது. அவரது சமீபத்திய ரிலீஸ்கள் அதனை உறுதிப்படுத்தியுள்ளன. இந்த நிலையில், அவர் தனது அடுத்த படம் குறித்து எடுத்திருக்கும் ஒரு முடிவை கேட்ட ரசிகர்கள், இது குறித்து இணையத்தில் காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.

தொடர் தாேல்வியை சந்தித்த சூர்யா..!

சூர்யா, சூரரைப்போற்று படத்தை எப்போது ஓடிடியில் வெளியிட வேண்டும் என்று முடிவெடுத்தாரோ அப்போது பிடித்தது அவருக்கு சனி. அந்த படம் நல்ல வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்றிருந்தாலும், தியேட்டர் ஓனர்கள் இதனால் செம கடுப்பாகினர். இந்த நிலையில், அதற்கு பின் வந்த ஜெய் பீம் படமும் ஓடிடியிலேயே வெளியானது. இதைத்தொடர்ந்து, அவர் நடித்த எதற்கும் துணிந்தவன் படம் வணிக ரீதியாக ஹிட் அடித்தாலும், விமர்சன வகையில் தோல்வியை தழுவியது.

இவர் ஹீரோவாக நடித்த படங்கள்தான் ஹிட் ஆகவில்லை என்றால், கெஸ்ட் ரோலில் நடித்த படங்கள் அதைவிட மோசமான பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷனைத்தான் பெற்றன. 2 ஆண்டுகள் இடைவேளைக்கு பின்பு, அவர் ரொம்பவும் நம்பி நடித்த படம், கங்குவா. இந்த படம் என்ன ஆனது என்பது, ஊருக்கே தெரிந்த கதையாகி விட்டது. பல கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படத்தை, ஸ்டுடியோ கிரீன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்தின் தோல்விக்கு காரணமே, இவர்கள் கொடுத்த பில்ட்-அப்தான் என்று ஒரு தரப்பினர் பேசி வந்தனர்.

மீண்டும் மீண்டுமா…

“கரெக்டா தப்பு பண்ற மேன்..” என்ற டைலாக்கிற்கு ஏற்ற ஆளாக, சூர்யா இருப்பதாக நெட்டிசன்கள் சிலர் இவரை கலாய்த்து வந்தனர். காரணம், அவர் ரிஜெக்ட் செய்த பல கதைகளில், வெவ்வேறு ஹீரோக்கள்நடித்து அது ப்ளாக் பஸ்டர் ஹிட்-ஆக மாறியிருக்கிறது. அதில், ராஜமெளலியின் பிரம்மாண்ட படமும் ஒன்று. 

சரி, இப்போது ஏன் நெட்டிசன்கள் சூர்யாவை வறுத்தெடுக்கின்றனர்? என்னடா கதை என்று எட்டிப்பார்த்தால், அவர்கள் சொல்வது சரிதான் என்றே கூற தோன்றுகிறது. கங்குவா படத்தை தயாரித்த ஸ்டுடியாே கிரீன்ஸ் நிறுவனத்துடன் மீண்டும் சூர்யா ஒரு படத்தில் சைன் செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஒரு சிலர், “ஐயோ கங்குவா 2ஆம் பாகமா?” என்று அலறியும் வருகின்றனர். “ஒரு முறை தவறு செய்து, அதற்காக பட்டது பத்தாதா? ஏன் சூர்யா இப்படி செய்த தவறையே திரும்ப செய்கிறீர்கள்” என்று சிலர் கேள்வி கேட்டு வருகின்றனர். இதனால், இவர் அடுத்ததாக கமிட் ஆகும் படமும், தோல்வி அடைந்து விடுமோ என்கிற பயம் அவரது ரசிகர்களை ஆட்கொண்டுள்ளது.

இப்போது நடித்து வரும் படம்..

சூர்யா நடிப்பில் சமீபத்தில் சமீபத்தில் வெளியான படம், ரெட்ரோ. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கிறார். இது, மொத்தம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்திருக்கிறது. ஆனால், எதிர்பார்த்த அளவு மக்கள் இதற்கு வரவேற்பு அளிக்கவில்லை. இப்போது, ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் அவரது 45வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கோயம்புத்தூரில் நடந்து வருகிறது. இது இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படமாவது, அவரது திரை வாழ்க்கையில் ஒரு நல்ல திருப்பத்தை தர வேண்டுமென அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் படிக்க | கங்குவா படத்தின் மிகப்பெரிய தோல்வி! நடிகர் சூர்யா எடுத்த முக்கிய முடிவு!

மேலும் படிக்க | சூர்யா படத்தில் நடிக்கும் விஜய்? வெளியான முக்கிய தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News