ரிலீஸிற்கு முன்பே வசூலை வாரிக்குவிக்கும் ரெட்ரோ! ப்ரீ-புக்கிங்கில் மட்டும் இவ்வளவா?

Suriya Retro Movie Pre Booking Collection : சூர்யா ஹீராேவாக நடித்திருக்கும் ரெட்ரோ திரைப்படத்தின் ப்ரீ-புக்கிங் வசூல், விஜய் படத்தின் சாதனையை முறியடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.  

Written by - Yuvashree | Last Updated : Apr 30, 2025, 11:58 AM IST
  • ரெட்ரோ படத்தின் ப்ரீ புக்கிங் வசூல்
  • ரிலீஸிற்கு முன்பே ஹிட்டா?
  • மொத்தம் எவ்வளவு தெரியுமா?
ரிலீஸிற்கு முன்பே வசூலை வாரிக்குவிக்கும் ரெட்ரோ! ப்ரீ-புக்கிங்கில் மட்டும் இவ்வளவா?

Suriya Retro Movie Pre Booking Collection : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் படம், ரெட்ராே. இப்படம், நாளை வெளியாக இருக்கும் நிலையில் இது சில முக்கிய மைல்கல்களை பதித்த படங்களின் சாதனைகளை முறியடித்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

ரெட்ரோ திரைப்படம்:

ஹீரோக்களுக்கு கம்பேக் கொடுக்கும் இயக்குனர் என்ற பெயரைப் பெற்று இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். இவருடன் முதன்முறையாக ரெட்ரோ படம் மூலம் நடிகர் சூர்யா கைகோர்த்து இருக்கிறார். இந்த படம் ஒரு கேங்ஸ்டர் டிராமாவாக உருவாகியிருக்கிறது. இதில் சூர்யா 90ஸ்களின் தாதாவின் மகன் போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். 

ரெட்ரோ படத்தின் டேக் லைனே, “Love, Laughter, War” என்பதுதான். இதற்கு அர்த்தம், காதல், காமெடி மற்றும் சண்டை ஆகியவை படத்தின் முக்கிய புள்ளியாக இருக்கும். கார்த்திக் சுப்புராஜின் படம் என்றாலே, மேற்குறியவை கண்டிப்பாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் இந்த படமும் பக்காவான ஆக்சன் என்டர்டைனராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் மே 1ஆம் தேதியான நாளை வெளியாகிறது. 

ப்ரீ புக்கிங் வசூல்..

எந்த படம் ரீதியாக முன்னாலும் அதன் பிரீ புக்கிங் தொடங்கிவிடும். அதிலும் மாஸ் ஹீரோக்களின் திரைப்படங்களுக்கு டிக்கெட் கிடைப்பதில்லை கஷ்டமாக இருக்கும். ரெட்ரோ திரைப்படத்தின் பிரீ புக்கிங் வசூலும் கேட்போரை வியக்க வைத்திருக்கிறது.

டிக்கெட் புக்கிங் தொடங்கிய 48 மணி நேரத்தில் முதல் காட்சியிலிருந்து, முதல் நாளின் கடைசி காட்சி வரை அனைத்திற்கும் பலர் முண்டியடித்துக்கொண்டு டிக்கெட் புக்கிங் செய்து இருக்கின்றனர். இந்த படம், கிட்டத்தட்ட ரூ.12.71 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் படத்தின் சாதனையை முறியடித்து..

விஜய் படங்களின் படங்கள் வெளியாகும் போது, அதற்கு முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் கிடைப்பதே பலருக்கு சிரரமமாக இருக்கும். அதே போல், ப்ரீ புக்கிங்கிலும் இவரது படத்தின் சாதனையை அடித்துக்கொள்ள ஆளே இருக்க மாட்டார்கள். ஆனால், இப்போது ரெட்ரோ திரைப்படம் தற்போது லியோ படத்தின் சாதனையை முறியடித்திருப்பதாக கூறப்படுகிறது.

லியோ படம் வெளியாகும் போது, 24 மணி நேரத்தில் ரூ.11.88 கோடி அளவிற்கு டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தது. தற்போது அதை தாண்டி ரெட்ரோ படத்தின் டிக்கெட்டுகள் விற்றுள்ளன. அது மட்டுமல்ல, சமீபத்தில் வெளியான குட் பேட் அகில் படமும் ப்ரீ-புக்கிங்கில் சுமார் ரூ.10.38 கோடி வசூலித்திருந்தது, விஜய்யின் கோட் படம், ரூ.8.51 கோடி வசூலித்திருப்பதாக கூறப்பட்டது.

ரெட்ரோ படத்திற்கு, தமிழகத்தில் மட்டுமல்லாது கேரளா மற்றும் தென்னிந்தியாவிலும் நல்ல வரவேற்பு கிடைத்து இருக்கிறது. அங்கு படம் ரிலீஸானவுடன் படத்திற்கு என்ன வசூல் கிடைக்கிறது என்பதை பொருத்திருந்து பார்கக் வேண்டும்.

மேலும் படிக்க | மே1-ஆம் தேதி ரிலீஸாகும் 4 மரண மாஸ் திரைப்படங்கள்! எதை முதலில் பார்ப்பது?

மேலும் படிக்க | ரெட்ரோ ப்ரீ-புக்கிங் வசூல்ச சாதனை..போதை வழக்கில் நடிகர் விடுதலை! டாப் 5 சினிமா செய்திகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News