பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் பாரதிராஜா. இவர் நேற்று (மார்ச் 25) மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். வயது 48. இவரது மறைவு திரையுலகத்தையே கண்ணீரில் விட செய்துள்ள நிலையில், திரையுலக பிரபலங்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மனோஜின் உடல் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. நேற்று இவரது இறப்பு செய்தியை கேட்ட தமிழக முதலமைச்சர் உடனடியாக இரங்கல் செய்தியை வெளியிட்டார்.
இதையடுத்து இன்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்து பாரதிராவுக்கு ஆறுதல் கூறினார். அவருடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் சென்றிருந்தார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக தலைவர் விஜய், அதிமுகவை சேர்ந்த ஜெயக்குமார் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் பலர் இன்று (மார்ச் 26) நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
அதேபோல் திரையுலக பிரபலங்களான சூர்யா, பிரபு, கார்த்தி, கவுண்டமனி, நாசர், தம்பி ராமையா இயக்குநர் மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார், சந்தான பாரதி, கார்த்திக் சுப்புராஜ், பி. வாசு, பாண்டியராஜன், விஜயகுமார், பாக்யராஜ், அருண் விஜய், சரவணன், பேரரசு, சத்யராஜ் என ஏராளமானோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி பாரதிராஜாவுக்கு ஆறுதல் கூறினர்.
இந்த நிலையில், மனோஜ் பாரதிராவுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் நடிகர் தம்பி ராமையா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பாரதிராஜா சார் 80 வயது தாண்டி விட்டார். இந்த வயதில் நிம்மதியை இழந்து இருப்பது என்பது மிகப்பெரிய கொடுமை. எப்படி இறைவனுக்கு மனது வருகிறது என்று தெரியவில்லை. ஆன்மீகத்தில் இருப்பவர்களுக்கு கூட இறைவர் மீது கோபம் வருகிறது.
மாபெரும் மணிதருக்கு பிள்ளையாக பிறந்ததுதான் மனோஜின் மன அழுத்தத்திற்கு காரணம் என்று நினைக்கிறேன். 48 வயதில் எவ்வளவு கனவுகள் இருந்திருக்கும். இரண்டு பெண் பிள்ளைகளும் தனது தந்தையை எப்படி வைத்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருப்பார்கள். ஒரு பெரிய மணிதருக்கு பிள்ளையாக பிறப்பது மிகவும் கடினமான ஒன்று. அப்பா பெயரை காப்பாற்றவில்லையா? அடுத்தது என்ன செய்யப்போறீங்க என்ற கேள்விள் தான் மனோஜுக்கு இந்த மன அழுந்தம் வர காரணம் என நினைக்கிறேன்.
அவர்களால் சராசரியாக அனைவரிடமும் பேசிவிட முடியாது. வீட்டில் கதவை அடைத்துக்கொண்டு இருப்பார்கள். அதனால் வந்த மன அழுத்தம் தான் இந்த 48 வயதில் மரணம் என நினைக்கிறேன். பாரதிராஜா சார் எல்லோருக்குமான பிதாமகன் அவரை இப்படியெல்லாம் எங்களால் காணவே முடியவில்லை என கூறினார்.
மேலும் படிங்க: மனோஜ் பாரதிராஜா மறைவு.. விஜய் முதல் கவுண்டமனி வரை.. அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ