Vijay Final Day Shoot Jana Nayagan : காலையில் வந்த ஒரு செய்தி, விஜய் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. என்ன தெரியுமா?

Vijay Final Day Shoot Jana Nayagan : தமிழ் திரையுலகில், டாப் நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். 30 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களை திரையில் மகிழ்வித்து வந்த இவர், விரைவில் திரையுலகை விட்டு விலக இருக்கிறார். இந்த நிலையில், இன்று காலையில் வந்துள்ள ஒரு தகவல் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
ஜன நாயகன் திரைப்படம்:
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் முதன்முறையாக நடிக்கும் படம், ஜன நாயகன். இந்த படத்தை கே.வி.என்.ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் விஜய்யுடன் இரண்டாம் முறையாக பூஜா ஹெக்டே ஜோடி சேர்ந்திருக்கிறார். இவர்கள் ஏற்கனவே, பீஸ்ட் திரைப்படத்தில் இணைந்திருக்கின்றனர்.
ஜன நாயகன் படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் மலையாள நடிகை மமிதா பைஜூ, பிரியாமணி, நரேன், பாபி டியோல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு, கடந்த அக்டோபர் மாதம் பூஜையுடன் தொடங்கியது.
விஜய்யின் காட்சிகள் நிறைவு?
ஜன நாயகன் படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்த நாள் முதல், முழு வீச்சில் படத்தின் வேலைகள் பரபரப்பாக நடந்து வந்தது. சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. அதன் பிறகு, கொடைக்காணலில் சில காட்சிகள் படமாக்கப்பட்டது.
விஜய், சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டு அரசியலில் விரைவில் களமிறங்க இருக்கிறார். அடுத்த வருடம் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் போட்டியிட இருக்கும் இவர், அதற்கான ஆயத்த பணிகளை ஏற்கனவே தொடங்கி விட்டார். இந்த நிலையில், இவருக்கான ஜன நாயகன் படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் அது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இது வரை வெளியாகவில்லை.
ரசிகர்கள் வருத்தம்..
ஜன நாயகன் படம்தான் விஜய்க்கு கடைசி படம் என்பது அனைவருக்கும் முன்கூட்டியே தெரிந்த விஷயம்தான். இருப்பினும் நேற்று படப்பிடிப்பு முடிந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில், விஜய் ரசிகர்கள் இணையத்தில் தங்களின் குமுறல்களை பதிவிட்ட வண்ணம் இருக்கின்றனர். “காலையில் கண்விழித்தவுடன் இந்த செய்தியைத்தான் காண வேண்டுமா?” என்று கேட்டு வருகின்றனர். விஜய்யின் அரசியல் என்ட்ரி எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றாலும், அவர் சினிமாவை விட்டு விலகுவார் என்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை.
விஜய்யின் படம், ரொம்ப சுமாராக இருந்தாலும், சூப்பராக இருந்தாலும் பாக்ஸ் ஆபிஸில் தோற்காது என்பதையும் அனைவரும் அறிவர். அது மட்டுமன்றி, ஸ்கிரீனில் நடனம், பாடல், நடிப்பு, சண்டை என அனைத்து ரகங்களிலும் அதகளப்படுத்தும் விஜய்யை இனி அரசியலில் மட்டும்தான் பார்ப்போம் எனும் உண்மையையும் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே, அவரது கடைசி படத்தில் அவர் நடித்து முடித்திருக்கும் விஷயம், ரசிகர்களை கொஞ்சம் அதிகமாகவே சோகமாக்கி இருக்கிறது.
விஜய்யின் அடுத்த பிளான் என்ன?
இப்போது, எந்த செய்தியை திறந்தாலும் ‘நடிகர்’ விஜய் என்று குறிப்பிடுவதை விட ‘தவெக தலைவர்’ விஜய் என்றுதான் குறிப்பிடுகின்றனர். இந்த மாற்றம், அவரது அரசியல் வாழ்க்கைக்கு நல்ல தொடக்கமாக அமைந்திருக்கிறது. இப்போது அவர் தனது கடைசி படத்தின் படப்பிடிப்பை முடித்திருப்பதாக சொல்லப்படும் நிலையில், தமிழ் நாடு முழுவதும் மக்களை சந்திக்க சுற்றுப்பயணம் மேற்காெள்ளலாம் என்று கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ