பொங்கலுக்கு ரிலீஸாகி சூப்பர் ஹிட் அடித்த விஜய்யின் படங்கள்! ஜன நாயகன் கன்ஃபார்ம் ப்ளாக் பஸ்டர்தான்..

Vijay January Pongal Releases Before Jana Nayagan : விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன், வரும் 2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இந்த நிலையில், இப்படத்தை போல பொங்கலுக்கு வெளியான பிற விஜய் படங்கள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.    

Written by - Yuvashree | Last Updated : Mar 24, 2025, 07:44 PM IST
  • பொங்கலுக்கு ரிலீஸாகி வெற்றி பெற்ற விஜய் படங்கள்!
  • ஜன நாயகனும் பொங்கலுக்குதான் ரிலீஸ்..
  • அப்போ, கண்டிப்பா ஹிட் தானா?
பொங்கலுக்கு ரிலீஸாகி சூப்பர் ஹிட் அடித்த விஜய்யின் படங்கள்! ஜன நாயகன் கன்ஃபார்ம் ப்ளாக் பஸ்டர்தான்..

Vijay January Pongal Releases Before Jana Nayagan : நடிகர் விஜய், அரசியலில் முழு நேரமாக களமிறங்கும் முன்பு கடைசியாக ஜன நாயகன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம், வரும் 2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதம்9ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. விஜய்யை பொறுத்தவரை, ஜனவரி மாதம் என்பது மிகுந்த ராசியான மாதமாக இருக்கிறது. இதற்கு முன்னர், ஜனவரி-பொங்கலுக்கு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த விஜய்யின் படங்கள் என்னென்ன என்பதை பார்த்தால், ஜன நாயகன் படத்தில் நிலையும் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

Add Zee News as a Preferred Source

சுமாராக ஓடிய படங்கள்:

கண்ணுக்குள் நிலவு:

2000 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி வெளியான படம், கண்ணுக்குள் நிலவு. இந்த படத்தில் விஜய்யுடன் சேர்ந்து ஷாலினி நடித்திருப்பார். இந்த படம், ஓரளவிற்கு ஹிட் அடித்தது.

ஆதி:

2006ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 14ஆம் தேதி வெளியான படம், ஆதி. இந்த படம் சுமார் விமர்சனத்தினை பெற்றிருந்தாலும் நல்ல வசூல் வாரி குவித்திருந்தது.

வசீகரா:

2003 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15ஆம் தேதி வெளியான படம், வசீகரா. இது, ஓரளவு வசூல் பெற்ற படமாகும். இதில் விஜய்க்கு ஜோடியாக சினேகா நடித்திருந்தார்.  

வில்லு:

பிரபுதேவா-விஜய் கூட்டணி மீண்டும் இணைந்த படம், வில்லு. இது, 2009ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியான படமாகும். இந்த படம் சுமார் வசூலையும் விமர்சனங்களையும் மட்டுமே பெற்றது.

சூப்பர் ஹிட் படங்கள்:

கோயமுத்தூர் மாப்ளே:

1996, ஜனவரி 15ஆம் தேதி வெளியான படம் கோயமுத்தூர் மாப்ளே. காமெடி டிராமாவாக உருவாகி இருந்த இந்த படம், நல்ல ஹிட் அடித்து. இதில் விஜய்யுடன் சங்கவி, கவுண்டமனி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

காலமெல்லாம் காத்திருப்பேன்:

1997, ஜனவரி 14ஆம் தேதி வெளியான படம், காலமெல்லாம் காத்திருப்பேன். இதில், விஜய்யுடன் மணிவன்னன், சார்லி, கரண், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்ற படமாகும்.

துள்ளாத மனமும் துள்ளும்:

சிம்ரன் விஜய் சேர்ந்து நடித்த படம், துள்ளாத மனமும் துள்ளும். காதல், ரொமான்ஸ் பாணியில் உருவான இந்த திரைப்படம் 1999ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு -ஜனவரி 29 வெளியாகி வெற்றி பெற்றது.

Vijay

ப்ரண்ட்ஸ்

2001ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 14ஆம் தேதி வெளியான படம் ப்ரண்ட்ஸ். இந்த படத்தில் விஜய், சூர்யா, வடிவேலு, தேவையானி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படமும் சூப்பர் ஹிட் அடித்தது.

திருப்பாச்சி:

2005 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14 அன்று வெளியான படம், திருப்பாச்சி. இதில் த்ரிஷா விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படமும் சூப்பர் ஹிட் அடித்தது.

போக்கிரி:

2007ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 12ஆம் தேதி வெளியான படம், போக்கிரி. பிரபு தேவா இயக்கத்தில் விஜய் நடித்திருந்த இந்த படத்தில், அவருக்கு ஜோடயாக அசின் நடித்திருந்தார். இந்த படம், பெரிய ஹிட் அடித்த விஜய் படங்களுள் ஒன்று.

காவலன்

2011ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான படம், காவலன். இந்த படம், அந்த ஆண்டின் ஜனவரி 15ஆம் தேதி வெளியானது. இது, விஜய்யின் ஹிட் படங்களுள் ஒன்றாகும்.

நண்பன்:

2012ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம், நண்பன். இந்த படத்தில் விஜய்யுடன் சேர்ந்து ஸ்ரீகாந்த், ஜீவா உள்ளிட்டாேர் நடித்திருந்தனர். இது, விஜய்யின் மாபெறும் ஹிட் அடித்த படங்களுள் ஒன்றாகும். 

ஜில்லா:

விஜய்யின் இன்னொரு பொங்கல் ட்ரீட்டாக வந்தது, ஜில்லா. 2014, ஜனவரி 10 அன்று வெளியான இந்த படம், விஜய்க்கு ஹிட் கொடுத்த படங்களுள் ஒன்று.

பைரவா:

சுமாரான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற விஜய் படங்களுள் ஒன்று, பைரவா. இந்த படம், 2017ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியானது.

Vijay

மாஸ்டர்:

லோகேஷ் கனகராஜ் உடன் விஜய் முதன்முறையாக கைக்கோர்த்த படம், மாஸ்டர். இந்த படம், 2021ஆம் ஆண்டு, பொங்கல் ட்ரீட்டாக ஜனவரி 13ஆம் தேதி வெளியானது. இந்த படம் சிலரை திருப்தி படுத்தப்படவில்லை என்றாலும் நல்ல விமர்சனங்களையும் வரவேற்பையும் பெற்றது.

வாரிசு:

2023 பொங்கலை முன்னிட்டு வெளியான படம், வாரிசு. இந்த படம்,  ஜனவரி 11ஆம் தேதி வெளியானது. பலர், இந்த படத்தை சீரியல் போல இருப்பதாக கூறி ஓட்டினர். ஆனாலும் இந்த படம் நல்ல ஹிட் அடித்தது.

ஜன நாயகன் கன்ஃபார்ம் ஹிட்டா?

விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன், வரும் அக்டோபரில் வெளியாவதாகத்தான் முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ரிலீஸ் தள்ளிப்போடப்பட்டுள்ளது. 2026, ஜனவரி 9ஆம் தேதி படம் வெளியாக உள்ளது. பொங்கல் வெளியீடு, விஜய் படம், விஜய்யின் கடைசி படம் என இதன் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் உள்ளதால் இது கண்டிப்பாக சூப்பர் ஹிட் அடிக்கும் என சினிமா விமர்சகர்களால் கணிக்கப்படுகிறது.

மேலும் படிக்க | அஜித்திற்கு தோல்வியை தந்த பிப்ரவரி ரிலீஸ் படங்கள்! விடாமுயற்சி அவ்ளோ தானா?

மேலும் படிக்க | 10 விஜய் படங்களுக்கு இசையமைக்க மறுத்த ஹாரிஸ் ஜெயராஜ்! ஏன் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News