Vijay Rumored To Sing In Jason Sanjay Film : தமிழ் திரையுலகிற்கு விரைவில் குட்-பை சொல்ல இருக்கும் டாப் நடிகர் விஜய். 30 வருடங்களுக்கும் மேலாக ஹீரோவாக வலம் வரும் இவர், கடந்த ஆண்டு தமிழக வெற்றிக்கழகம் என்கிற அரசியல் கட்சியை ஆரம்பித்தார். இதைத்தொடர்ந்து வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியடவும் இருக்கிறார். தனது கடைசி படத்தில் நடித்து முடித்து விட்டு, அரசியலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள இருக்கிறார்.
ஜன நாயகன் திரைப்படத்தில் விஜய் செய்யாதது..
விஜய் நடிக்கும் கடைசி படம், ஜன நாயகன். ஹெச்.வினாேத் இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பானது சென்னையில் தொடங்கியது, அதன் பிறகு சில காட்சிகள் கொடைக்கானலில் படமாக்கப்பட்டது. இந்த படத்தில், இது வரை தனது படத்தில் செய்த ஸ்பெஷலான விஷயத்தை விஜய் செய்யப்போவதில்லை என கூறப்படுகிறது.
விஜய் படம் என்றாலே, அதில் அவர் பாடும் பாடல்கள்தான் ஹைலைட்டாக இருக்கும். தங்க நெறத்துக்குதான் “பாம்பே சிட்டி சுக்கா ரொட்டி” பாடலில் ஆரம்பித்து, கடைசியாக வெளிவந்த கோட் படத்தில் விசில் போடு மற்றும் சின்ன சின்ன கண்கள் பாடல் வரை அவரது குரலுக்கும் பாடும் தொனிக்கும் ரசிகர்கள் அதிகம். ஆனால், அவர் கடைசியாக நடிக்கும் ஜன நாயகன் படத்தில் அப்படி அவர் பாடும் பாடல் எதுவுமே இல்லையாம். இந்த படத்தின் கதை கொஞ்சம் சீரியசானது என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜேசன் இயக்கும் படம்..
விஜய் சினிமாவை விட்டு போகும் சமயத்தில், திரையுலகிற்குள் என்ட்ரி கொடுக்கிறார் அவரது மகன் ஜேசன் சஞ்சய். இவர் இயக்கும் முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில், சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.
வழக்கமாக திரை நட்சத்திரங்கள் அவர்களின் உறவினர்கள் இயக்கும் படங்களில் கெளரவ தாேற்றத்தில் வருவதோ அல்லது பாடல்கள் பாடுவதோ உண்டு. இது ஜேசன் சஞ்சய்க்கு முதல் படம் என்பதால், அவரது தந்தை விஜய் இப்படத்தில் பாடல் பாடுவாரா என்ற ஆவல் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. ஆனால், இது வரையில், தனது மகன் குறித்து எங்குமே பேசாத விஜய், இதனை செய்வாரா என்பது சந்தேகம்தான். அதே போல ஜேசன் சஞ்சய்யும் எங்கும் தனது தந்தை குறித்து பேசியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | அஜித்தின் மேனேஜருடன் விஜய் மகன் சஞ்சய்! தோள் மேல் கைப்போட்டு எடுத்த போட்டோ வைரல்..
மேலும் படிக்க | ஜேசன் சஞ்சய் ஷூட்டிங்கில் ரொம்ப ஸ்ட்ரிக்ட்-ஆ? நீங்களே பாருங்க..வைரல் போட்டோஸ்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









