மகனுக்காக மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி! ஏன் தெரியுமா? காரணம் இதுதான்!

Vijay Sethupathi Apologizes For His Son Surya : நடிகர் விஜய் சேதுபதி தனது மகனுக்காக மன்னிப்பு கேட்டுள்ளார். அது ஏன் தெரியுமா? இதோ முழு விவரம்!  

Written by - Yuvashree | Last Updated : Jul 3, 2025, 12:07 PM IST
  • மகனுக்காக மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி
  • அப்படி அவர் என்ன செய்தார்?
  • இதோ முழு விவரம்!
மகனுக்காக மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி! ஏன் தெரியுமா? காரணம் இதுதான்!

Vijay Sethupathi Apologizes For His Son Surya : பிரபல நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா. இவர் முதன்முறையாக ஹீரோவாக நடித்திருக்கும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படம். இந்த படத்தின் ஸ்பெஷல் ஷோ சமீபத்தில் நடந்தது. இதில், தன் மகனுக்காக விஜய் சேதுபதி மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

Add Zee News as a Preferred Source

விஜய் சேதுபதியின் மகன்:

துணை நடிகராக இருந்து, இப்போது முன்னணி ஹீரோவாக வளர்ந்திருப்பவர் விஜய் சேதுபதி. இவர் தமிழில் மட்டுமல்லாது, இப்போது தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து வருகிறார். இவர், திரையுலகிற்கு வரும் முன்பே திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இவரது இளைய மகன் சூர்யா சேதுபதி தற்போது தமிழ் சினிமாவில் புது ஹீராவாக களமிறங்கி இருக்கிறார். 

சூர்யா நடித்திருக்கும் புதுப்படத்தின் பெயர் ஃபீனிக்ஸ். ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகியிருக்கும் இந்த படத்தை அனல் அரசு இயக்கியிருக்கிறார். இதில் வரலக்‌ஷ்மி சரத்குமார், தேவதர்ஷினி, சம்பத், அபி நக்‌ஷத்ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். 2023ஆம் ஆண்டில் இருந்து இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வந்த நிலையல், இப்படம் தற்போது வெளியாக இருக்கிறது.

ஸ்பெஷல் ஷோ:

எந்த படமும் வெளியாவதற்கு முன்பு, சினிமா பிரபலங்கள் மற்றும் ஊடகத்தினருக்கு என தனியாக ஒரு ஸ்பெஷல் ஸ்கிரீனிங் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், விரைவில் வெளியாக இருக்கும் ஃபீனிக்ஸ் படத்தின் ஸ்பெஷல் ஷோ சமீபத்தில் நடந்தது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டதோடு, விஜய் சேதுபதியும் படத்தை வந்து பார்த்து, ஊடகத்தினரிடம் பேசினார்.

மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி:

சில நாட்களுக்கு முன்பு ஃபீனிக்ஸ் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு. அதில் சூர்யா சேதுபதி, வாயில் பூமரை மென்று கொண்டே அந்த படத்தில் நடித்த ஒருவரை கட்டிப்பிடிப்பது போன்ற காட்சி சில யூடியூப் சேனல்களில் வெளியிடப்பட்டது. இதில் சூர்யா சேதுபதி பார்ப்பதற்கு நக்கலாக செய்வது போல இருந்தது. இதற்கு, படக்குழுவின் தரப்பில் இருந்து இந்த வீடியோ பதிவிட்ட சேனல்களுக்கு காபிரைட்ஸ் ஸ்ட்ரைக் தரப்பட்டுள்ளது. இது, ஊடகத்தினர் தரப்பில் சர்ச்சயை ஏற்படுத்தியது.

இந்த விஷயத்தை ஃபீனிக்ஸ் படத்தின் ஸ்பெஷல் ஷோவில் விஜய் சேதுபதியிடம் ஊடகத்தினர் கூறினார். இதைக்கேட்ட அவர், இதைப்பற்றி தனக்கு தெரியாது என்றும், “எங்க ஆளுங்க யாராவதுதான் இப்படி பண்ணி இருப்பாங்க..மன்னிச்சுக்கங்க” என்றும் கூறினார். இதையடுத்து, படம் நன்றாக வந்திருப்பதாகவும் தனக்கு பிடித்திருப்பதாகவும் கூறினார்.

படம் எப்படியிருக்கு?

வட சென்னையில் நடக்கும் விஷயங்களை வைத்து, ஃபீனிக்ஸ் படம் உருவாகி இருக்கிறது. ஆக்‌ஷன் கதையில், வலியையும் எமோஷனையும் கூட சொல்ல ஆரம்பித்து இருக்கின்றனர். விஜய் சேதுபதியின் மகன் என்பதை சூர்யா நிரூபிப்பதாகவும், படத்தில் நன்றாக நடித்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். வரலட்சுமியும் வில்லியாக நன்றாக நடித்திருப்பதாக படம் பார்த்தவர்கள் கூறி வருகின்றனர். முதல் பாதி வேகமாகவும் விருவிருப்பாகவும் இருப்பதாகவும், இரண்டாம் பாதி கொஞ்சம் மந்தமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | விஜய் சேதுபதி நடிக்கும் தெலுங்கு படம்! வெளியான முக்கிய அப்டேட்!

மேலும் படிக்க | 120 கிலோ உடல் எடையுடன் இருந்த விஜய் சேதுபதி மகன்... இப்ப எப்படி ஆயிட்டார் பாருங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News