Ghilli Vs Sachien Movie : தமிழ் திரையுலகின் பாக்ஸ் ஆபிஸ் கிங்-ஆக கருதப்படுகிறார், நடிகர் விஜய். இவர், நடிப்பில் 2005ஆம் ஆண்டு வெளியான படம் சச்சின். இந்த படம், முதல் நாள் செய்த கலக்ஷனும், கடந்த ஆண்டு வெளியான கில்லி படமும் எவ்வளவு கலெக்ட் செய்தது என்பதை இங்கு பார்ப்போம்.
விஜய்யின் சச்சின் திரைப்படம்:
20 வருடங்களுக்கு முன்பு, விஜய் நடித்திருந்த படம் சச்சின். இந்த படத்தை ஜான் மகேந்திரன் இயக்கியிருந்தார். ஊட்டியில் நடப்பது போன்று இப்படத்தின் கதை காட்சிப்படுத்த பட்டிருந்தது. சச்சின் என்ற இளைஞன், கல்லூரிக்கு படிக்க வரும் போது ஷாலினி என்ற காலேஜ் பியூட்டியை காதலிக்கிறான். ஆனால், அந்த பெண்ணை அனைவரும் இம்ப்ரஸ் செய்ய முயற்சி செய்ய-சச்சின் மட்டும் அவளை கலாயக்க ஆரம்பிக்கிறான். இதனால், ஷாலினியின் ஈகோ டச் ஆக, அவளுக்குள் மெல்ல மெல்ல காதல் எட்டிப்பார்க்கிறது.
இந்த படம், 2005ல் வெளியாகும் போது இந்த படம் பெரிதாக ஓடவில்லை. காரணம், அப்போது சந்திரமுகி திரைப்படம் வெளியானது. இதனை பலமுறை டிவியில் பார்த்தவர்கள், இதனை திரையரங்குகளிலும் பார்க்க நினைத்தனர். இதையடுத்து, தற்போது அப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
சச்சின் vs கில்லி:
இந்த வருடம் சச்சின் படம் ரிலீஸ் ஆனது போல, கடந்த ஆண்டு கில்லி திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. அதில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். இந்த படம், அப்போது வெளியான புது படங்களை தாண்டி பெரும் வெற்றி பெற்றது. பலர், ரீ-ரிலீஸ் ஆன இந்த படத்தையே மீண்டும் 2-3 முறை தியேட்டருக்கு சென்றெல்லாம் பார்த்தனர்.
கில்லி படம், ரீ-ரிலீஸின் முதல் நாளில் சுமார் ரூ.10 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது. இப்போது வெளியாகி இருக்கும் சச்சின் திரைப்படமும் முதல் நாளில் சுமார் ரூ.10 கோடி வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பிற நடிகர்களின் படங்களுடன் ஒப்பிடும் போது..
காேலிவுட்டின் பிற நடிகர்களுடன் ஒப்பிடுகையில், விஜய் நடித்து வெளியாகும் படங்கள் நல்ல வசூலை பெறுகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை. ரீ-ரிலீஸில் கூட விஜய் படங்களே அதிக வசூலை பெற்று வருகிறது. ரஜினியின் தளபதி படம், அஜித்தின் மங்காத்தா படம், ரவி மோகனின் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படம் ஆகியவை கில்லி அளவிற்கு வசூலை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்கள் கொண்டாட்டம்..
விஜய், தனது கடைசி படமான ஜன நாயகன் படத்தில் நடித்து முடித்தவுடன், மொத்தமாக சினிமாவிற்கு முழுக்கு போட இருக்கிறார். இந்த நிலையில், அவரது படம் எது வெளியானாலும் அதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அப்படித்தான் கடந்த ஆண்டு கில்லி, இந்த ஆண்டு சச்சின் என இரண்டும் ரீ-ரிலீஸிலும் வெற்றிநடை போட்டு வருகிறது. விஜய், சினிமாவை விட்டு விரைவில் விலக இருக்கும் நிலையில், அவரை திரையரங்குகளில் எத்தனை முறை பார்க்க முடியுமோ, அத்தனையையும் பார்த்து கொண்டாட வேண்டும் என நினைக்கின்றனர் ரசிகர்கள்.
மேலும் படிக்க | கில்லி vs தளபதி: ரீ-ரிலீஸில் மாஸ் காட்டிய படம் எது? வசூல் யாருக்கு அதிகம் தெரியுமா?
மேலும் படிக்க | சச்சின் படத்தில் ஜெனிலியாவுக்கு வாய்ஸ் கொடுத்த நடிகை! யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









