)
Jana Nayagan Audio Launch Guests : தமிழ் திரையலகின் டாப் நடிகராக இருப்பவர் விஜய். இவர், தனது கடைசி படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் குறித்த வெளியான ஒரு தகவல்தான் நெட்டிசன்களை கொஞ்சம் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
நடிகராக மட்டும் இருந்த விஜய், 1 வருடத்திற்கு முன்னர் தமிழக வெற்றிக்கழகம் கட்சியயை ஆரம்பித்து அரசியல் பயணத்தை தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தலில், முதல்வர் வேட்பாளராக களம் காண இருக்கும் விஜய், அதற்கு முன்னர் தனது கடைசி படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் பெயர், ஜனநாயகன். இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்கியிருக்கிறார்.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். வில்லனாக பாபி டியோல் நடிக்கிறார். முக்கிய கதாப்பாத்திரங்களாக பிரியாமணி, நரேன், மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
தமிழ் திரையுலகின் டாப் நடிகர்களின் படங்களின் விழாக்கள் 0 போய்பெரிய அளவில் நடக்கும். விஜய் நடித்த லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கவில்லை வெறும் வெற்றிவிழா மட்டும் நடந்தது. தி கோட் திரைப்படத்தின் விழா எதுவுமே நடக்கவில்லை. அவரது கடைசி படமான ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. ஆனால் இவ்விழா தமிழ்நாட்டில் இல்லை, இந்தியாவிலேயே நடக்கப்போவதில்லை என்று கூறப்படுகிறது.
ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை, இந்த வருடத்தின் இறுதியில் நடத்த படக்குழு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விழாவை மலேசியாவில் நடத்த இருக்கிறார்களாம்.
வழக்கமாக, பெரிய படங்கள் வெளியாகும் போது அந்த படங்களின் இசை வெளியீட்டு விழாவிற்கு பிரபலங்கள் பலர் வந்து கலந்து கொள்வது வழக்கம். பொன்னியின் செல்வன் பட விழாவில் ரஜினி, கமல், சிம்பு உள்ளிட்டோர் வந்து கலந்து கொண்டது பெரும் பேசு பொருளானது. இப்போது, விஜய் சினிமாவை விட்டு விலகுவதால், அவரது கடைசி படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் இதில் கமல்ஹாசன், ரஜினி, அஜித், சூர்யா உள்ளிட்டோர் இந்த விழாவில் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
இது சாத்தியமா?
ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இத்தனை பிரபலங்கள் வந்து கலந்து கொள்வதாக கூறப்படும் தகவல், பொய்யானது என்று கூறப்படுகிறது. மேற்கூறியவர்கள் விஜய்க்கு போட்டி நடிகர்களாக கூறப்படுவதோடு, இவர்கள் ஒன்றாக வருவதற்கு சாத்தியம் இல்லை என்பதும் சிலரது பார்வையாக இருக்கிறது. எது எப்படியிருப்பினும், விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தால் அங்கு விஜய் மட்டும்தான் ஸ்டாராக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ