ஒருவழியாக வியாபாரமான ஜனநயாகன் படம்! சேட்டிலைட் உரிமத்தை வாங்கிய சேனல் எது?

Jana Nayagan Satellite Rights : ஜனநாயகன் திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.

Written by - Yuvashree | Last Updated : Dec 7, 2025, 01:04 PM IST
  • ஜனநாயகன் சேட்டிலைட் உரிமத்தை வாங்கிய நிறுவனம்!
  • பல கோடிக்கு விற்பனை..
  • மலேசியாவில் இசை வெளியீட்டு விழா
ஒருவழியாக வியாபாரமான ஜனநயாகன் படம்! சேட்டிலைட் உரிமத்தை வாங்கிய சேனல் எது?

Jana Nayagan Satellite Rights : விஜய்யின் கடைசி படமாக உருவாகி வருகிறது, ஜனநாயகன். இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடக்க இருக்கிறது. நெடு நாட்களாக இப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை இந்த நிறுவனமும் வாங்காமல் வந்து நிலையும் இப்போது ஒரு நிறுவனம் இதனை வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Add Zee News as a Preferred Source

சாட்டிலைட் உரிமத்தை வாங்கிய நிறுவனம்: 

எந்த படம் தியேட்டரில் வெளியாவதற்கு முன்பாகவும், அதன் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமைகள் வாங்கப்படுவது வழக்கமாகிவிட்டது. அப்படி அந்த படத்தில் உரிமங்கள் விற்கப்படவில்லை என்றால் ரிலீசில் பிரச்சனை வருகிறது. ஜனநாயகன் திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை எந்த நிறுவனம் பெறப்போகிறது என்பதில் குழப்பம் நீடித்தது. பொதுவாக, சன் பிக்சர்ஸ் மற்றும் சன் டிவி விஜய் படங்களின் உரிமங்களை வாங்கும். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் கதை மாறியிருக்கிறது. லியோ படத்திற்கு பிறகு வெளிவந்த கோட் படத்தின் சாட்டிலைட் உரிமத்தை ஜீ தமிழ் நிறுவனம் கைப்பற்றியது.

தற்போதும், ஜனநாயகன் திரைப்படத்தின் உரிமத்தை வாங்கப்போவது ஜீ தமிழ் நிறுவனம்தான் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை கைப்பற்ற, இந்நிறுவனம் சுமார் ரூ.50-60 கோடி கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்த அதிகாரப்ப்பூர்வ தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இசை வெளியீட்டு விழா:

விஜய் படம் என்றாலே, அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசுவது பெரிய ஹைலைட்டாக இருக்கும். ஆனால், லியோ மற்றும் தி கோட் திரைப்படம் வெளியாகும் போது இசை வெளியீட்டு விழாவை நடத்த முடியாமல் பாேனது. இதையடுத்து, தமிழ்நாட்டில் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்த படக்குழு, மலேசியாவில் இவ்விழாவை நடத்த திட்டமிட்டுள்ளது. இது, ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவாக மட்டும் இல்லாமல், ‘தளபதி திருவிழா’ என்கிற பெயரில் லைவ் கான்சர்ட் ஆகவும் நடக்கிறது.

இந்த விழாவில், விஜய்யின் 35 ஹிட் பாடல்கள் பாடப்பட உள்ளன. இதில் பாடகர்கள் ஆண்ட்ரியா, விஜய் யேசுதாஸ், சைந்தவி உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதன் உரிமத்தையும் ஜீ தமிழ் வாங்கியிருக்கிறதாம். 

எப்போது ஒளிபரப்பாகும்?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில், ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா, அடுத்த ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது. இதை மலேசியாவிற்கு நேராக சென்று பார்க்க முடியாதவர்கள், டிவியில் பார்க்க ஆர்வத்துடன் காத்துக்கொண்டுள்ளனர்.

பகவந்த் கேசரி படத்தின் ரீ-மேக்கா?

அரசியலில் முழு நேரமாக களமிறங்க இருக்கும் விஜய், தனது கடைசி படம் மூலம் சினிமாவிற்கு குட்-பை சொல்ல இருக்கிறார். ஜனநாயகன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். முக்கிய கதாப்பாத்திரங்களில் மமிதா பைஜூ, நரேன், பிரியாமணி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படம், பகவந்த் கேசரி படத்தின் ரீ-மேக் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும், படம் வெளிவந்த பிறகுதான் கதை என்ன என்பது முழுதாக தெரியும்.

மேலும் படிக்க | ஜனநாயகன் க்ளைமேக்ஸ் இதுதான்! விஜய் கடைசியில் ‘இவருடன்’ சண்டை போடுவாராம்..

மேலும் படிக்க | ஜனநாயகன் Vs பகவந்த் கேசரி : இரண்டிற்கும் உள்ள ஒற்றுமைகள்..அப்போ அவ்ளோ தானா..?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News