குட் பேட் அக்லியை சுருட்டி தள்ளிய சச்சின் ரீ-ரிலீஸ்? 2 நாளில் இவ்ளோ வசூலா!

Sachien Re Release Box Office Collection : விஜய் நடிப்பில் 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி இருந்த சச்சின் படம், தற்போது மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இப்படம், 2 நாட்களில் எத்தனை கோடி வசூலித்திருக்கிறது தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Apr 20, 2025, 06:01 PM IST
  • சச்சின் ரீ-ரிலீஸ்!
  • குட் பேட் அக்லியை சுருட்டியது..
  • மொத்த வசூல் எவ்வளவு?
குட் பேட் அக்லியை சுருட்டி தள்ளிய சச்சின் ரீ-ரிலீஸ்? 2 நாளில் இவ்ளோ வசூலா!

Sachien Re Release Box Office Collection : கடந்த சில ஆண்டுகளாகவே, தமிழகத்தில் முன்னர் ஹிட் ஆன படங்கள் பல இப்போது ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அந்த ரீ-ரிலீஸிலும் கூட, சில தேர்ந்தெடுத்த படங்கள்தான் ஹிட் ஆகின்றன. அதிலும், விஜய்தான் பாக்ஸ் ஆபிஸ் கிங்-ஆக இருக்கிறார். கடந்த ஆண்டு, அவரது கில்லி திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆகி சுமார் ரூ.50 காேடிக்கும் மேல் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து, இந்த ஆண்டும் அவரது சச்சின் படம் வெளியாகி இருக்கிறது. அந்த படத்தின் வசூல் குறித்த விவரத்தை இங்கு பார்ப்போம்.

சச்சின் ரீ-ரிலீஸ்:

சச்சின் திரைப்படம், 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ரொமாண்டிக்-காமெடி திரைப்படம் ஆகும். இந்த படத்தில், விஜய் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஜெனிலியா நடித்திருக்கிறார். இந்த படத்தை ஜான் மகேந்திரன் இயக்கி இருக்கிறார். முழுக்க முழுக்க, இப்படம் ஊட்டியில் நிகழ்வது போல காட்சிப்படுத்த பட்டுள்ளது. 

2003ஆம் ஆண்டில் வெளியான போது, இந்த படத்தை பெரிதாக யாரும் கண்டுகாெள்ளவில்லை. காரணம், அப்போது இதனுடன் சேர்த்து ரஜினியின் சந்திரமுகி திரைப்படமும் வெளியானது. இதையடுத்து, பலமுறை இந்த படத்தை டிவியில் பார்த்தவர்கள் இதனை தியேட்டரில் பார்ப்பதற்கு பலரும் ஆர்வமுடன் இருந்தனர். இதையடுத்து, இப்படம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் கடந்த 18ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.

முதல் நாளில் 10 கோடி!

சச்சின் திரைப்படத்தை, பலரும் தியேட்டரில் பார்த்து கொண்டாடி வருகின்றனர். கில்லி பட பாடல்களுக்கும் காட்சிகளுக்கும் எப்படி அனைவரும் வைப் செய்தனரோ, அதே போல, இந்த படத்தின் பாடல்களுக்கும் பலர் வைப் செய்து வருகின்றனர். இந்த நிலையில், முதல் நாளில் மட்டும் இந்த படம் உலகளவில் சுமார் 10 கோடி கலெக்ட் செய்ததாக கூறப்படுகிறது.

குட் பேட் அக்லி படத்தை மிஞ்சியதா?

படம் வெளியாகி, 2 நாட்கள் ஆகியிருக்கும் நிலையில், இதன் கலக்ஷன் தற்போது குட் பேட் அக்லி படம் செய்து வரும் கலக்ஷனை தாண்டி போய் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. வீக்-எண்டில், குட் பேட் அக்லி படத்தின் வசூல் குறைந்திருப்பதாகவும், சச்சின் படத்தின் வசூல் அதிகரிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தமிழகத்தில் மட்டும் இப்படம், சுமார் 4.5 கோடி ரூபாயை இதுவரை வசூலித்து இருக்கிறதாம். வீக் எண்டில் இந்த வசூல் சுமார் ரூ.6 கோடியை தாண்டும் என கூறப்படுகிறது.

அஜித்தின் குட் பேட் அக்லி படம், உலகளவில் ரூ.200 கோடியை வசூலித்திருந்தாலும் தமிழ் நாட்டில் அதன் வசூல் குறைந்தே காணப்படுகிறது. வார இறுதி நாளில், சச்சின் படத்திற்கு அனைத்து இடங்களிலும் புக்கிங் செய்யப்பட்டுள்ளதாகவும், குட் பேட் அக்லி  படத்தின் வசூல் குறைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | சச்சின் படத்தில் விஜய்க்கு பதில் ஹீரோ ஆக வேண்டியவர்! இப்போ இறந்துட்டாரு..யார் தெரியுமா?

மேலும் படிக்க | கில்லி vs சச்சின்: ரீ-ரிலீஸில் எந்த படம் மாஸ்? முதல் நாளில் அதிக கலக்ஷன் யாருக்கு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News