விக்ரமுக்கு அடி மேல அடி! பிரச்சனையில் வீர தீர சூரன் படம்..இவருக்கு மட்டும் ஏன் இப்படி?

Vikram Veera Dheera Sooran Release Issue : நடிகர் விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் பாகம் 2 படத்திற்கு தடை விதித்து, டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இவரது பல படங்கள், தொடர்ந்து பிரச்சனைகளை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.  

Written by - Yuvashree | Last Updated : Mar 27, 2025, 02:06 PM IST
  • பிரச்சனையில் வீர தீர சூரன் 2 படம்!
  • விக்ரமுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பிரச்சனை?
  • இதற்கு முன்னர் என்ன பஞ்சாயத்து?
விக்ரமுக்கு அடி மேல அடி! பிரச்சனையில் வீர தீர சூரன் படம்..இவருக்கு மட்டும் ஏன் இப்படி?

Vikram Veera Dheera Sooran Release Issue : 2025-ல், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்திய படங்களுள் ஒன்று, வீர தீர சூரன் பாகம் 2. இந்த படத்தை அருண் குமார் இயக்கியிருக்கிறார். இந்த நிலையில், இப்படத்தை வெளியிட கூடாது என்று கூறி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதே போல இதற்கு முன்னர் வெளியான இவரது சில படங்களும் கூட பெரிய பிரச்சனைகளை சந்தித்துள்ளது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

வீர தீர சூரன் 2:

வித்தியாசமாக, முதலில் பாகம்1 வெளியாக, அதன் பிறகு முதல் பாகம் வெளியாகும் கதையாக இருக்கிறது வீர தீர சூரன் இந்த படத்தின் ஓடிடி உரிமை விற்கப்படாமல், படக்குழு படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறது. இதையடுத்து, சில தயாரிப்பாளர்கள் வழக்கு தொடர்ந்ததன் பேரில், இன்று அதன் விசாரணை நடைப்பெற்றது. இதன் முடிவில், வரும் 4 வாரத்திற்கு படத்தை வெளியிடக்கூடாது என கூறி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இப்படம், சியான் விக்ரமுக்கு கம்-பேக் படமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படி ரிலீஸிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களுக்கும் படக்குழுவிற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிடப்பில் கிடக்கும் துருவ நட்சத்திரம்:

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட படம், துருவ நட்சத்திரம். இது, ஒரு ஸ்பை ஆக்ஷன்-த்ரில்லர் படமாகும். 7 நாடுகளில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தின் ரிலீஸ், கோவிட்-19 காரணமாக தள்ளிப்பாேடப்பட்டது. அதன் பிறகு, தயாரிப்பாளர்கள் பிரச்சனை காரணமாக இப்போது வரை வெளியாகாமல் இருக்கிறது. இது, விக்ரமுக்கும் கெளதம் மேனனுக்கும் விழுந்த பெரிய அடியாகும். இப்படம், எப்போது வெளியாகும் என்பதே தெரியவில்லை.

தங்கலான்:

தங்கலான் திரைப்படத்தை பா.ரஞ்சித் இயக்கியிருந்தார். இந்த இயக்குநர் மீது, காரணமே இல்லாமல் பலர் வன்மத்தை பொழிவது வழக்கம். அந்த வகையில், தங்கலான் படம் வெளியாகும் போதும் படத்திற்கு வேண்டுமென்றே நெகடிவ் விமர்சனங்கள் கிளப்பி விடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், இப்படமும் பெரிய வெற்றியடைவயில்லை.

ஹிட் கொடுத்தே ரொம்ப நாளாச்சு..

விக்ரம் ஹீரோவாக நடித்து, ஹிட் கொடுத்து பல வருடங்கள் ஆகிறது. 2011ஆம் ஆண்டுக்கு பிறகு அவர் நடித்த தாண்டவம், 10 என்றதுக்குள்ள, இருமுகன், ஸ்கெட்ச், சாமி2, கோப்ரா உள்ளிட்ட படங்கள் தோல்வியை தழுவின. ஐ படம் வசூல் வகையில் ஹிட் என்றாலும் விமர்சன ரீதியாக பெரும் தோல்வியை தழுவியது. இதனால், இவரை மார்கெட் இழந்த நடிகராக பலர் குறிப்பிட்டு வருகின்றனர்.

விக்ரம் செய்த தியாகம்:

நடிகர் விக்ரம், வீர தீர சூரன் பாகம்2 படத்தின் டெபாசிட் தொகைக்காக, தனது சம்பளத்தின் ஒரு பகுதியை விட்டுக்கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. தான் நடிக்கும் படங்களுக்காக தன்னுடைய 100% உழைப்பையும் பாேடும் விக்ரம், அதற்கேற்ற பலன்களை பெறவில்லை எனும் போது அது, ரசிகர்களுக்கு வருத்தமளிக்கும் விதமாக உள்ளது.

மேலும் படிக்க | வீர தீர சூரன் படம் வெளியாவதில் சிக்கல்.. வெளியான அதிர்ச்சி தகவல்

மேலும் படிக்க | வீர தீர சூரன் படம் ரிலீஸ் ஆகுமா? ஆகாதா? என்னதான் பிரச்சனை? முழு விவரம்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News