)
Vishal Talks About Politics : உதகை அருகே விஷால் நடிக்கும் மகுடம் படபிடிப்பு நடைப்பெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் பிறந்த நாளையொட்டி அவரது படத்திற்கு படத்திற்கு நடிகர் விசால் மரியாதை செலுத்தினார்.
நடிகர் விஷால் பேட்டி:
“விஜய் அரசியலுக்கு வந்து இரண்டாவது மாநாட்டை கோலாகலமாக நடத்தியதற்கு வாழ்த்துகள். புதிதாக அரசியலுக்கு வருவோரை வாழ்த்த வேண்டும்.. சமூக சேவை செய்ய மற்றொரு கட்சி வருகிறது. இந்த 2026-ஆண்டு தேர்தலில் நிறைவேற்றபடாமல் உள்ள பல்வேறு திட்டங்களை வாக்குறுதியாக கொடுத்து செயல்படுத்தினால் மகிழ்ச்சியாக இருக்கும்.
“நல்லது செய்வது தான் அரசியல் என்றால் நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன். நடிகர் சங்க கட்டிடம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஓரிரு மாதத்தில் திறப்பு விழா நடத்தப்படும் உதகையில்” என்று நடிகர் விஷால் பேட்டியளித்துள்ளார்.
உதகை அருகே விஷால் நடிக்கும் மகுடம் படபிடிப்பு நடைப்பெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்தின் பிறந்த நாளையொட்டி அவரது படத்திற்கு படத்திற்கு நடிகர் விசால் மரியாதை செலுத்தினார். பின்னர் படபிடிப்பு தளத்திற்கு வந்த அனைவருக்கும் தனது கையாள் மத்திய உணவை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஷால் கேப்டன் “விஜயகாந்த் மறக்க முடியாத மனிதர், நடிகர், அரசியல்வாதி அவர் எந்த துறைக்கு சென்றாலும் முன்னுதாரணமாக இருந்தவர். நாம் இப்போது சினிமா சூட்டிங் தலத்தில் சாப்பிட முக்கிய காரணம் விஜயகாந்த் தான் அவர் சாப்பிடுவதையே அனைவரும் சப்பிட வேண்டும் என்பார்” என்று கூறினார்.
மேலும், “பசியோடு வந்தவர்களை பசியாற வைத்து தான் அனுப்புவார். அது தான் தனக்கு தூண்டுதலாக இருந்ததால் விஜயகாந்த் வழியில் உணவு அளிக்க வேண்டும் என்பது ஆசை. இன்று விஜயகாந்த் இல்லை என்றாலும் கொண்டாட கூடிய மனிதராக உள்ளார். இன்றைய அரசியலில் விஜயகாந்த் இருந்திருந்தால் 2026 அரசியல் களம் வேறுமாதிரி இருந்திருக்கும். 22 ஆண்டுகளாக ஆக்சன் படத்தில் நடித்து வருவதாகவும் நடிகர் சங்க கட்டிடடம் கட்ட வேண்டும் என்ற விஜயகாந்தி கனவு இன்னும் 2 மாதங்களில் பணிகள் முடிந்து நனவாகும்” என்று கூறினார்.
நடிகர் சங்க கட்டிடம் இறுதி கட்டத்தை எட்டி இருப்பதாகவும் செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் மாதத்தில் திறப்பு விழாவிற்கு தயாராகி விடும். சினிமாவை பொறுத்தவரை ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்தி மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு பல முறை கோரிக்கை வைத்து வருவதாகவும் சூதாட்டத்திற்கும் சினிமவிற்கும் ஒரே மாதிரி வரி விதிப்பதை குறைக்க வேண்டும் உள்ளூர் வரி குறைப்பு கேட்டு வருகிறோம் இந்த நிலையில் தரமனியில் உள்ள பிலிம் சிட்டி மோசமாக உள்ளது.
இதனால் சினிமா படபிடிப்பிற்கு ஐத்ராபாத் செல்ல வேண்டி உள்ளது. தற்போது தமிழக அரசு 5 கோடியில் திறந்து வைத்துள்ள படபிடிப்பு தளம் வரவேற்க தக்கது.. இது போன்ற பயிற்சி மையம் சிறிய படங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றார். முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் 5 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட படபிடிப்பு தளம் குறித்து கேட்டபோது இது போன்று சினிமா துறைக்கு மாநில அரசு மேம்பாட்டு பணி செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இது போன்ற படப்பிடிப்பு தளம் புணரமைத்து திறந்து வைத்துள்ளது நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மிகபெரிய பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
விஜய் அரசியல் குறித்து கேட்ட போது விஜய் அரசியலுக்கு வந்து இரண்டாவது மாநாட்டை கோலாகலமாக நடத்தியதற்கு வாழ்த்துகள். புதிதாக அரசியலுக்கு வருவோரை வாழ்த்த வேண்டும்.. சமூக சேவை செய்ய மற்றொரு கட்சி வருகிறது. இந்த 2026-ஆண்டு தேர்தலில் நிறைவேற்றபடாமல் உள்ள பல்வேறு திட்டங்களை வாக்குறுதியாக கொடுத்து செயல்படுத்தினால் மகிழ்ச்சியாக இருக்கும் என்றார்.
நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என செய்தியாளர்கள் கேட்ட போது நல்லது செய்வது தான் அரசியல் என்றால் நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன். இங்குள்ள வண்ணமயமான அரசி்யல் கொடிகளை பார்க்கும் போது வேடிக்கையாக உள்ளது. ஆக்கபூர்வமானது ஒன்றும் தெரியவில்லை என்றார்.
தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்:
தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம் பற்றிய கேட்டபோது தூய்மைபணியாளர்களின் பணி என்பது சிறப்பான பணியாகும்.. ஆனால் அவர்களுக்கு கையுறை கூட இல்லாமல் பணியாற்றுவதை காணும் போது வருத்தமாக உள்ளது. எனவே தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வதுடன் அவர்களுக்கு தேவையான உபகரணங்களை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ