நடிகர் விஷ்ணு விஷால், வெண்ணிலா கபடிக் குழு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அப்படம் வெற்றி பெற, அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன. பலே பாண்டியா, துரோகி, குள்ளநரிக் கூட்டம், முண்டாசுப்பட்டி, நீர்ப்பறவை, இன்று நேற்று நாளை, ராட்ச்சஷன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதில், மூண்டாசுப்பெட்டி, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்ச்சஷன், இன்று நேற்று நாளை உள்ளிட்டப் படங்கள் நல்ல வெற்றியை பெற்று தந்தன. ஆனால், அவர் கடைசியில் நடித்த படம் லால் சலாம் அவருக்கு வெற்றியை பெற்றுத்தரவில்லை.
இதற்கிடையில், விஷ்ணு விஷால், கடந்த 2010ஆம் ஆண்டு ரஜினி நட்ராஜ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் இவர்கள் விவாகரத்தும் செய்துகொண்டனர். இதையடுத்து விஷ்ணு விஷால், கடந்த 2021ஆம் ஆண்டு ஷட்டில் விளையாட்டு விராங்கனை ஜுவாலா கட்டாவை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு பாலிவுட் நடிகர் அமிர்கான், மிரா என பெயர் வைத்தார். இந்த நிலையில், தனது முதல் மனைவி குறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.
அண்மையில் நடிகர் விஷ்ணு விஷால் பேட்டி ஒன்றில் கூறியதாவது, முதல் மனைவி ரஜினி நட்ராஜ் உடன் திருமணம் ஆகுவதற்கு ஒரு மாதம் முன்பு தான் அவருக்கு கேன்சர் இருப்பது எனக்கு தெரியும். என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்வேன் என கூறிதான் நான் அவரை திருமணம் செய்தேன். திருமணம் ஆகி 6 ஆண்டுகள் வரை குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்ற முடிவுடன் இருவரும் இருந்தோம். இதற்கிடையில், 6 மாதங்களுக்கு ஒருமுறை கேன்சர் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அந்த காலகட்டத்தில் நான் சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வந்தேன். நான் முழுக்க முழுக்க சினிமாவில் கவனம் செலுத்தியதால், தன் மீது அக்கறை இல்லை என ரஜினி நடராஜ் நினைத்துவிட்டார். இதனால் மனக்கசப்பு ஏற்பட்டது. ஒருகட்டத்தில் விவாகரத்து வரை சென்றது. நான் வேண்டாம் என சொன்னேன். ஆனால் ரஜினி கேட்கவில்லை. அந்த நேரத்தில் ராட்சசன் படம் வெளியாகி இருந்தது. அனைவரும் படத்தின் வெற்றி கொண்டாட்டத்தில் இருந்தபோது, நான் விவாகரத்தில் கலங்கி நின்றேன். எப்போதும் பார்த்துக்கொள்வேன் என அவரிடம் நான் சொன்னபடி, இன்று வரை அவருடன் பழகி வருகிறேன் என தெரிவித்தார்.
மேலும் படிங்க: வாயை கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட இந்திரஜா சங்கர்! தமிழக அரசு கண்டனம்..என்ன விஷயம்?
மேலும் படிங்க: D54 படம் பூஜையுடன் ஆரம்பம்..போர் தொழில் இயக்குநரின் அடுத்த படம்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









